மலர் பறித்தேன் மணம் எடுத்தேன் இயேசு தெய்வமே ***

மலர் பறித்தேன் மணம் எடுத்தேன் இயேசு தெய்வமே
கனி பறித்தேன் சுவை இனித்தேன் இயேசு தெய்வமே
சுரம் எடுத்தேன் குரல் இசைத்தேன் இயேசு தெய்வமே
உனை நினைத்தேன் எனை அளித்தேன் இயேசு தெய்வமே
ஏற்றிடும் ஏற்றிடும் எந்தன் இயேசுவே
மாற்றிடும் மாற்றிடும் உந்தன் பலியிலே

1. காற்றும் கடலும் பனியும் மழையும்
வாழ்த்திடக் கண்டேன்
குளிரும் வெயிலும் இரவும் பகலும்
மகிழ்ந்திடக் கண்டேன்
படைத்து அளித்துக் காக்கும் உந்தன்
பண்பினைக் கண்டேன்
பரமனே உன் அன்பிலே என் மனம் தந்தேன்

2. பறவைகளும் விலங்குகளும் மகிழ்ந்திடக் கண்டேன்
மரம் செடிகள் மலர் வகைகள் புகழ்ந்திடக் கண்டேன்