அள்ளக் குறையாத அமுதமே என்னை ***

அள்ளக் குறையாத அமுதமே என்னை
அன்பில் தேர்ந்த தெய்வமே
அனைத்தும் உமக்கே தருகின்றேன்

1. உலகம் காலம் தோன்றும் முன்னே
உவந்தே என்னை நீ தெரிந்தாய்
தவறிய போதும் காக்கின்றாய்
விலகிடும் போதும் ஏற்கின்றாய்
உனக்கு என்னையும் தருகின்றேன் உன்
பணிக்கென உயிரையும் தருகின்றேன்

2. உந்தன் கையில் எனைப் பொழிந்தாய்
உறவுகள் பலவும் எனக்களித்தாய்
என் நலன் எண்ணி வாழ்ந்த போதும்
பிறர்நலம் பணிக்கென அழைக்கின்றாய்
உனக்கே என்னையே தருகின்றேன்