புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அன்பின் இறைவா எந்தன் தலைவா என்னை அளிக்கின்றேன் ***

அன்பின் இறைவா எந்தன் தலைவா என்னை அளிக்கின்றேன்
என்றும் உந்தன் அன்பில் வாழ
பாதம் பணிகின்றேன் நான் பாதம் பணிகின்றேன்

1. மலரில் வண்டு மயங்கி நின்று
தேனை உண்டு மகிழ்ந்ததோ - அந்த
மலரும் மயங்கும் மன்னன் உந்தன்
தியாகம் கண்டு வியந்ததோ
நானும் இன்று நாளும் உந்தன்
பலியாய் மாற விழைகின்றேன்

2. உலகம் யாவும் இறைவன் உந்தன்
இல்லமாக விளங்குமோ - எம்
உள்ளமே உம் இல்லமாயின்
கள்ளம் அதிலே கலக்குமோ
நாளும் என்னை இறைவா உந்தன்
இல்லமாய் நீ எழுப்புவாய்