புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம் பாருலகில் செல்லுவோம் ***

நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம் பாருலகில் செல்லுவோம்
அருள்வாழ்வு தரும் வார்த்தைகளால்
நன்மைகளை நாம் செய்வோம்
செல்வோம் விரைந்து செல்வோம் - நிறை
வாழ்வை நோக்கியே செல்வோம்
செய்வோம் விரைந்து செய்வோம் - இனி
புதியதோர் உலகினைச் செய்வோம்

1. சுமை சுமக்கும் தோள்களுக்கு
வலிமையினை ஊட்டுவோம்
சுகம் மறந்த மாந்தருக்கு வளமையினைக் காட்டுவோம்
இருகரங்கள் விரித்திங்கு வாடுவோரைத் தேற்றுவோம்
இறையரசின் கனவுகளை நாடுதோறும் சாற்றுவோம்

2. பரிவிரக்கம் சாந்தம் அன்பு
பொறுமையினைக் கொள்ளுவோம்
மகிழ்ச்சியிலும் அமைதியாக அடக்கமுடன் வாழுவோம்
விசுவாசம் நன்னயமும் கேடயமாய் தாங்கியே
புது இனமாய் புது யுகமாய் வாழ்வு நோக்கி செல்லுவோம்