இறைவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே ***

இறைவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

1. நீதியின் பாதையில் நடந்திடுவோம்
கிறிஸ்துவின் உறவில் வளர்ந்திடுவோம்
தேவனின் ஆவியைப் பெற்றிடுவோம் - நாம்
இயேசுவை அணிந்து கொள்வோம்
அவரில் மகிழ்ந்திடுவோம்

2. நாம் இனி இறைவனின் சொந்த மக்கள்
அவரோடு ஒன்றாய் கலந்திடுவோம்
ஒருவரை ஒருவர் நாம் அன்பு செய்வோம்
என்றும் இயேசுவை அணிந்து கொள்வோம்
அவரில் மகிழ்ந்திடுவோம்