இறைவன் நம்மை அழைக்கின்றாரே விரைந்து வாருங்கள் ***

இறைவன் நம்மை அழைக்கின்றாரே விரைந்து வாருங்கள்
புதிய உலகம் படைத்திடவே மகிழ்ந்து கூடுங்கள்
இறைவன் அரசு வளர்ந்திடவே இறைவார்த்தை வழங்கிடவே
இனிதே இணைந்தே சென்றிடுவோம்

1. தாயின் கருவினிலே நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவரின் கைகளிலே நம் பெயரைப் பொறித்து வைத்தார்
அவரில் நம்மை அர்ப்பணம் செய்ய
மனித மாண்பு மண்ணில் உயர
எழுவீர் வருவீர் இயேசு வழியிலே

2. அன்புப் பணியினிலே இறைவனைச் சொல்லியே
ஏழை மனிதரிலே இயேசுவைக் காணவே
உண்மை நீதி நேர்மை நிலைக்க
பொய்மை ஜாதி வன்மை அழிக்க