அமலோற்பவியே அருள்நிறைத் தாயே வாழ்க வாழ்க ***

அமலோற்பவியே அருள்நிறைத் தாயே வாழ்க வாழ்க
மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க
வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே
அன்னையே வாழ்க அமலியே வாழ்க வாழ்க வாழியவே

1. மாமரியே மாதவளே வாழ்க வாழ்க
மாந்தர்களைக் காப்பவளே வாழ்க வாழ்க
மனம் மகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க
தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க

2. இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க
மறைபோற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க
வான் மண்ணின் இராக்கினியே வாழ்க வாழ்க
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்க