இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

போற்றிப் போற்றி பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே

போற்றிப் போற்றி பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே
என்னைக் கண்ணோக்கினார்
வாழ்வைப் பொன்னாக்கினார்
அந்த மீட்பரிலே மகிழ்ந்து பாடுதே

1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய் கொண்டார்
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார்
தலைமுறை எல்லாம் என்னை வாழ்த்திடுமே
தலைவனவர் திருநாமம் புனிதமாமே

2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார்
செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார்
பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார்