மதுமலர் முகமோ ஒளிர்நிறை நிலவோ அழகுறும் தேவதையே

மதுமலர் முகமோ ஒளிர்நிறை நிலவோ அழகுறும் தேவதையே
கதிரவன் சுடரோ கருணையின் வடிவோ
தரணியின் தாரகையே
இந்த வானமும் பூமியும் தோன்றும் முன்னே
பரிபூரணத் தாயென நீ திகழ்ந்தாய் ஆவே

1. ஆதிப்பிதாவின் திருமகளே
அனைத்துலகாளும் குலமகளே
வானிறை வந்த சீதனமே
வளரு மாமந்திர ஆலயமே

2. ஆலயமணி உன் புகழ்பாடும்
அலைகடல் ஓசை இசையாகும்
உறைபனி நிறைதிகழ் ஆசனத்தில்
உன் திரு அழகினை எமக்களிப்பாய