செவ்வாய்க்கிழமை மாலைச் செபம்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென்.

சர்வேசுரனான சேசுவே, நான் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மைச் நேசிக்கிறேன்.

திரிகாலச் செபம் செபிக்கவும், பர.அருள் விசுவாச மந்திரம்.

ஆண்டவரே! நீதியின் சூரியனே, பகலின் கிரகம் தனது பிரகாசக் கதிர்களோடு மேற்றிசையில் மறைய, இராக்காலம் வந்தமையால் தேவரீரை வணங்கி நமஸ்கரிக்கிறேன். வரப்பிரசாதங்களினாலும், பூசைப் பலிகளாலும், சம்மனசுகள் அர்ச்சியசிஷ்டவர்களுடைய வேண்டுதலினாலும், பஞ்ச பூதங்களினாலும் என் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் இன்று நீர் செய்தருளிய சகல நன்மைக்காக உமது தேவ சந்நிதியில் பயபக்தி வணக்கத்தோடே என் ஐம்புலன்கள் இருதயத்தை ஒடுக்கிக்கொண்டு நன்றியறிந்த மனதோடே உமக்குத் தோத்திரம் செய்கிறேன். என் பொல்லாத பாசங்களாலும், பாவப் பழக்கங்களினாலும் உலக மாயைகள், பசாசின் தந்திரங்களினாலும் நான் மோசம் போகாமல் காத்தருளினதற்காக உமது திருப்பாதத்திலே விழுந்து இருதய உருக்கத்தோடு தேவரீருக்கு ஆராதனை செய்கிறேன். மகா உன்னத நாதத்தோடு சர்வலோகங்களையும் நடத்தும் என் ஆண்டவரே, சிநேகத்தின் பிதாவே, வானத்தில் உலாவும் நட்சத்திரங்களுடைய தொகைக்குச் சரியட்டாற்போலே உலகில் வாழும் சகல சனங்களுக்கும் தேவர் இன்று செய்த உபகாரங் களுக்காகவும் விசேஷமாய் நான் இன்று பாவங்களில் விழாமல் தற்காத்ததற்காகவும் தேவமாதா, சம்மனசுகள், அர்ச்சியசிஷ்ட வர்களுடைய ஸ்துதி நமஸ்காரங்களைத் தேவருக்கு ஒப்புக் கொடுத்து ஓடுங்கி வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். என் இரட்சகராகிய சேசு கிறிஸ்துவே, தேவரீர் சொல்லி முடியாத பாடுகளைப் பட்டு தேவத்திரவிய அனுமானங் களை உண்டுபண்ணிக் கொடுத்துத் தினசரி பலிகளால் சகல மனிதர்கள் பேரில் வைத்திருக்கும் பெரும் இரக்கத்தை யோசித்துச் சகல தூதர்கள், அதிதூதர்கள் முதலான நவகண் சம்மனசுகளுடையவும், அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் பேறுகளைத் தேவரீருக்குப் பாதகாணிக்கையாக வைத்து மனஸ்தாபத்தோடு நமஸ்காரம் செய்கிறேன்.

மாசின்றி உற்பவித்துப் பிறந்து தேவனால் மனுக்குலத்திற்குத் தாயாய் நியமிக்கப்பட்ட பரலோக பூலோக இராக்கினியே, தேவ மாதாவே, நீர் இன்று செய்த சகல உபகாரங்களுக்காக இருகரங் குவித்து சிரம் தாழ்த்தி உம்மை நமஸ்கரித்து வாழ்த்தித் . துதிக்கிறேன். சர்வேசுரனாலே என் ஆத்துமத்திற்குக் காவலாக நியமிக்கப்பட்ட சம்மனசானவரே! இத்தினத்தில் எனக்குச் செய்த சகாயங்களுக்காக நன்றியறிந்த மனதோடே, உமக்குப் பாத நமஸ் காரம் செய்கிறேன். சகல மோட்சவாசிகளே, உங்கள் வேண்டு தலினால் சர்வேசுரன் எனக்குச் செய்த பற்பல உதவிகளுக்காக உங்களை வணங்கி ஸ்தோத்திரம் செய்கிறேன்.

சேசுவே, என் நல்ல தகப்டனாரே, பகலில் உமக்கு உழைத்த பின், இந்தப் பாழ் உடல் இளைப்பாற இராக்காலத்தைக் கட்டளை யிட்டீரே, இக்காலத்தில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது திருக்கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன்.
என் ஆண்டவளே, என் தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிறேனென்று நினைத்துக் கொள்ளும். உம்முடைய உடைமையாகவும் சுதந்தரப் பொருளாகவும் என்னை ஆதரித்துக் காப்பாற்றியருளும்.

53 மணிச் செபஞ் சொல்லவும்.

அர்ச். அந்தோனியார் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும். மற்றதும்.

சென்மப் பாவமில்லாமல் உற்பவித்து அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

லீஸ் போன் என்கிற பட்டணத்தில் உதித்த ஞான நட்சத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உயர்ந்த பாரம்பர்யத்தில் பிறந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தி நிறைந்த தாய் தந்தையால் தர்ம ஒழுக்கம் படிப்பிக்கப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இளமை தொடங்கிச் சுகிர்த ஞான சீவியத்தை அனுசரித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாலிபப் பிராயமுதல் சந்நியாசம் செய்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக நித்திய சீவியத்தைப்பற்றிப் பூலோக சுக வாழ்வெல்லாம் வெறுத்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சுற்றத்தார் சிநேகிதரின் உறவை விலக்கி விலகி ஏகாந்தத் தியானத்திலிருக்கச் சொந்த பட்டணத்தையும் விட்டுத் தூரத்திலிருந்த மடத்திற்போய் வசித்தவரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுகிறீஸ்துவைப்பற்றிப் பிராணனைத் தரவேண்டுமென்கிற ஆசையால் அர்ச். ஐந்து காய பிராஞ்சீஸ்குவின் சபைக்கு உட்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்துக்குத் தெரியாதிருக்கவேண்டுமென்கிற தாழ்ச்சி யினாலும் அதிசிரேஷ்ட முனிவரான அர்ச். அந்தோனியார் பேரிலுள்ள பக்தியாலும் அவருடைய நாமத்தைத் தரித்து முந்தின் உமது சுய பெயரை மாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சி முடியை அடைவதற்குச் சாத்தியவேதத்தின் சத்துருக்களுடைய தேசத்தில் பிரசங்கிக்கப்போனவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஏகாந்த மறைவுள்ள ஞான சீவியமாகச் சீவித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாசற்றவராய்ப் பிரகாசித்த சீவிய ஒழுக்கத்தையும் அனுசரித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் மிகவும் உத்தம் பிரியம் தருபவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ பாலனை உம்முடைய கரங்களில் கட்டி அணைக்கப் பாக்கியம் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்பெய்ன் தேசத்தின் அலங்காரமான இரத்தினமே, எங்க.. இத்தாலிய தேசத்தின் பிரகாசித்து இரியோ, வாங்க... பிரான்சு தேசத்தில் அப்போஸ்தலராக வலம் வந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரவும் பகலும் செபத்தியானத்தின் மேல் அதிக விருப் பமாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நெடுநாள் பதுவா என்கிற பட்டணத்தில் சகல புண்ணியங் களினாலும் விளங்கினதினால் அதின் பேரால் சிறப்பிக்கப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சுவிசேஷத்தைப் போதித்த எக்காளமே, எங்க... பக்திச் சுவாலகச் சபையின் அலங்காரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்தக் கற்பினால் வெண்மையான லீலி என்கிற புஷ்பத்திற்கு இணையானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆச்சரியமான பொறுமையால் சகல விரோதங்களையும் செயித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த மன ஒறுத்தலால் விலைமதியாத மாணிக்க 1.மானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த தாழ்ச்சியால் பணிந்து பிறருக்குப் பணிவிடை செய்ய விரும்பினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிரவணக் கீழ்ப்படிதலால் எல்லோருக்கும் மாதிரிகை யானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தயங்குமட்டும் உபவாசம் முதலாய் சகல விதத்திலும் சரீரத்தை ஒறுத்து அருந்தவத்தின் அதிசயமான கண்ணாடி யாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்திய வேத விசுவாசத்தின் தீபமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரன் போல் உறுதியான நம்பிக்கைக் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவசிநேகத்தின் பிரகாசமுள்ள சுவாலையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆத்துமாக்களின் ஈடேற்றத்துக்காக அத்தியந்த சுறுசுறுப்புள்ள பற்றுதலைக் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஒடுக்க வணக்கமுள்ள பக்தி நடத்தையால் பிரசங்கித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறர் சிநேகத்தால் சொல்லிலடங்காதபடி உடலை வருத்தி உமது சீவனைச் செலவழித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சியசிஷ்டதனத்தின் பாத்திரமே, எங்க... எப்போதும் சிலுவை நெறியில் தவறாமல் ஒழுகினவரே, எங்க... திருச்சபையின் அசையாத தூணே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பாப்பானவரால் உடன்படிக்கையின் பெட்டகம் எனப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேத வாக்கியங்களின் ஞானப் பொக்கிஷமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எவராலும் ஆச்சரிய விருப்பத்துடனே கேட்கப்பட்ட உத்தம பிரசங்கியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எண்ணிறந்த பாவிகளையும் பதிதர்களையும் சத்திய சுகிர்த நெறியில் திருப்பின் மேலான போதகரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விரோத வர்ம வைராக்கியத்தை நீக்கிச் சமாதானம் உண்டாக்க வரம் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூர்க்கந்த மோக தந்திரச் சோதனைகளையும், மற்றச் சகல பாவ துர்க்குணங்களையும் அழிக்கச் செய்ய உதவியானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மிருகங்களைக்கொண்டு துர்மார்க்கருக்குப் பாவ மயக்கம் தெளிவித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அபத்த மதங்களை மறுத்து நிர்மூலமாக்கினதால் பதிதருக்குப் பயங்கரமான சுத்தியல் எனப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சாவுக்கு அஞ்சாமல் அநியாய துஷ்ட பிரபுக்களுக்குத் தேவ நீதியைத் தெளிவித்து அச்ச நடுக்கம் வருவித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குற்றமில்லாதவர்களுக்காக பரிந்து பேசிக் காத்தவரே, எங்க.. சிறையிலிருந்து அநேகரை மீட்டுக்கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறர் உடமையை உத்தரிக்கச் செய்வதற்குத் தேவ அனுக்கிரகம் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விசுவாசம் இல்லாதவர்களுக்குத் தேவ பயம் உறுத்தினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பசாசுகளுக்குப் பயங்கரமானவரே, எங்க துன்ப துயரப் படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எளியவர்களுக்கும் பரதேசிகளுக்கும் உதவி சகாயமானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரர்களுக்கு உத்தம் வைத்தியரே, எங்க ... மரித்தவர்களை உயிர்ப்பித்தவரே, எங்க அந்தகருக்குப் பார்வை தந்தவரே, எங்க செவிடருக்குச் செவிடு நீக்கினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வெட்ட வெளியில் உமது பிரசங்கத்தைக் கேட்கும் சனங்களை இடி குமுறல் கல்மாரியோடு எப்பக்கத்திலும் பெய்த மழையில் நனையாமல் அதிசயமாய்க் காப்பாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பற்பல அதிசய அற்புதங்களைக் காணச் செய்தவரே, எங்க.... காணாமற்போன பொருட்களைக் காணச் செய்தவரே, எங்க .. பிறர் இருதயத்தில் மறைந்ததை அறிந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்தத்தனத்தால் சம்மனசுகளுக்கு இணையானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களைக் கண்டுபாவித்தவரே, எங்க.. வருங் காரியங்களை முன் அறிவித்த தீர்க்கதரிசியே, எங்க... அப்போஸ்தலர்களின் சாயலே , எங்க ... அத்தியந்த ஆசையால் வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதபாரகரிலும் ஸ்துதியரிலும் ஒருவராக விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விரத்த கன்னிமையில் அநேகரை நிலைநிறுத்தின மாறாத விரத்தரே, எங்க ''சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மகிமையுள்ள பாக்கியத் திற்குப் பங்காளியானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது மரண காலத்தை ஏற்கனவே அறிந்தறிவித்து அதற்கு உத்தம ஆயத்தம் செய்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஏழு த சங்கீதங்களைச் செபித்துத் தேவமாதாவைத் துதித்து மன்றாடுகையில் பாக்கியமான மரணத்தை அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரித்தவுடனே எண்ணிறந்த புதுமைகளினாலே முத்திப்பேறு பெற்ற அர்ச்சியசிஷ்டவராக விளங்கி வணங்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது திரு நாக்கு அழிவில்லாமையால் சிறந்த வணக்கம் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தியுள்ளவர்களுக்குத் தயை நிறைந்த பிதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பஞ்சம் படை நோய் புயல் முதலிய ஆபத்துகளில் ஆதரவும் தஞ்சமுமானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற - மற்றதும்.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக. அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம். 

சர்வேசுரா சுவாமீ! உம்முடைய ஸ்துதியரும், முத்திப்பேறு பெற்றவருமாகிய அர்ச். அந்தோனியாரைக் கொண்டு உமது திருச் சபைக்கு எண்ணிறந்த அற்புத நன்மைகளைச் செய்தருளினீரே, அவருடைய மன்றாட்டினால் அடியோர்கள் தேவரீரிடத்தில் கிருபை பெறவும், சகல பொல்லாப்பு துயர் ஆபத்துகளிலே நின்று இரட்சிக்கப்படவும், எங்கள் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் வேண்டிய உதவி சகாய உபகாரங்களை அடையவும், பாவ தந்திரங்களையும் விலக்கி உலகம் பசாசு சரீரமென்கிற மூன்று சத்துருக்களையும் செயித்து நித்திய பேரின்ப ஆனந்தத்தில் வாழப் பாத்திரவான்களாகவும் அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.

ஆமென்.