பிதாவுடையவுஞ் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென்.
திரிகாலச் செபம் செபிக்கவும்.
மிகவும் பரிசுத்த திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஸ்துதியும் நன்றியறிந்த தோத்திரமும் உண்டாகக்கடவது.
எங்களைப் படைத்துக் காப்பாற்றி ஒளி தந்து மோட்சப் பாதையில் நடத்தும் பிதாச் சுதன் இஸ்பிரித்து சாந்து என்னும் திரித்துவ ஏக சர்வேசுரனுக்கு எல்லாப் படைப்புகளாலும் ஸ்துதியும் தோத்திரமும் என்றென்றைக்கும் உண்டாகக்கடவது.
இராக்காலத்தின் திரை நீங்க விடியற்காலத்தின் வெளிச்சம் தோன்றுகிறது போல் சென்மப் பாவ இருளால் மூடிய எங்களை சொல்லி முடியாத தேவ அன்பு கொண்டு கொடூர தேவ பலியால் மீட்டீரே சுவாமி.
ஞானஸ்நான் முதலிய தேவத்திரவிய அனுமானங்களாலும் தேவ அனுக்கிரகங்களினாலும், எங்களை வேத விசுவாச வெளிச்சத்திற் கொண்டுவந்த எங்கள் இரட்சகராகிய சேசு கிறீஸ்துவே, அக்களிப்போடும் நெருங்கிய சிநேகத்தோடும் எங்கள் வாய் நிறைய உமது துதிகளைச் சொல்லிக் கொண்டு உடல் ஒடுங்கி இரு கரங்குவித்து உமது பாதத்திலே தண்டனாக விழுந்து உம்மை ஆவலோடு வணங்குகிறோம்.
கடல் சூழ்ந்த உலக சாம்ராச்சியங்களும், விரிந்த வானத்தில் இலங்கிய சூரிய சந்திர நட்சத்திரங்களும் ஞானக் கண்ணால் நாங்கள் காண்கிற மோட்சானந்த நாத விநோத உசிதங்களும் எங்களைப் பிரமிக்கச் செய்கிறதைப் பார்க்க உமது மகத்துவம் பொருந்திய தேவ அன்பே அதிகமாய்ப் பிரமிக்கச் செய்கிறபடியால் எங்களை உண்டு பண்ணிக் காத்து இரட்சித்த உமது சிநேகத்திற்காக எங்கள் இரத்தத்தை உமக்குச் சிந்தி உயிரைக் கொடுக்க எங்களுக்கு அணை கடந்த ஆசையுண்டு.
ஆறு இலக்ஷணக் கடவுளே, எங்களின் அருமையான ஆண்டவரே, இதோ எங்கள் கைகளை விரித்து வான்லோகத்தை நோக்கி மனமுழுதும் அன்பால் பூரிக்க உம்மை ஆவலோடு தேடுகிறோம். மனிதகண்ணுக்கெட்டாத சர்வேசுரா, சகல நன்மைகளுக்கும் ஊருணியே, நெருங்கக்கூடாத ஒளி கொண்டு ஆழங்காணக்கூடாத ஞானக் கடலாயிருக்கும் உமது தேவ சந்நிதியிலே நடுநடுங்கித் தாழ்ந்து பணிந்து நிற்கிறோம்.
தேவரீர் எங்களுடைய ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் செய்த எண்ணிமுடியாத உபகாரங்களை நன்றியோடு நினைத்துக் கொண்டு உருக்கப் பட்சத்துடனே உமக்குத் தேவ ஆராதனை செய்கிறோம். தியான செபத்தாலும் தேவரீர் பேரிலும், தேவர் இராச்சியமாகிய நித்திய பேரின்ப ஸ்தலத்தின் பேரிலும் வெகு ஆசை கொண்டு தேவரீருடைய உதவியால் நாங்கள் இப்போது செய்திருக்கிற பிரதிக்கினையைச் செலுத்திப் பாவங்களை அருவருத்துத் தள்ளிப் புண்ணியங்களை ஆசையோடு செய்ய அதிக ஆர்வமாயிருக்கிறோம்.
எங்கள் இடுப்புகளைக் கற்பென்னுங் கச்சையால் கட்டிக்கொண்டு காணப்பட்ட வஸ்துகளின் அற்பத்தைக் கண்டுகொண்டு துராசைகளை அடக்கி நாங்கள் இன்று உலகிற் செய்யப்போகிற கிரிகைகள் எல்லாவற்றையும் தேவரீருக்காகவே செய்யவும், எங்களை முழுதும் உழக்கும் பலியாகவே ஒப்புக்கொடுக்கவும் தீர்மானம் செய்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் மரண நேரத்தில் நாங்கள் மோசம் போகாமல் துணிவோடும், ஆவலோடும் உமது சிருஷ்டிப்புகளைக் கொண்டு உமக்கு அன்போடு ஊழியம் செய்து, உமது கற்பனைகளைச் சரியாய் அனுசரித்து இழுக்கும் துற்பாசங்களுக்கும், இருளைத் தரும் பொருள் ஆசைகளுக்கும் இணங்காமல் உம்மை மாத்திரமே இன்றும் என்றும் எல்லாவற்றிலும் நாட அனுக்கிரகம் செய்தருளும் சுவாமீ, ஆமென்.
மாதா வணக்கம்
சமுத்திரத்தின் நட்சத்திரமே, சர்வேசுரனுடைய பூசிக்கப்பட்ட மாதாவே, நித்திய கன்னிகையே, பரலோகத்தின் பாக்கியமான வாசலே,
கபிரியேல் என்கிற சம்மனசினுடைய வாக்கிலே நின்று புறப்பட்ட மங்கள வார்த்தையைக் கேட்டு ஏவையின் பெயரை மாற்றி எங்களைச் சமாதானத்திலே நிலைநிறுத்தும்.
ஆக்கினைக்குப் பாத்திரமானவர்களுடைய கட்டுகளை அவிழும், குருடருக்குப் பிரகாசத்தைக் கொடும், எங்கள் பொல்லாப்புகளை விலக்கும், சகல நன்மைகளும் எங்களுக்கு வர மன்றாடும்.
நீர் எங்களுக்குத் தாயாராயிருக்கிறீர் என்று காண்பியும். எங்களுக்காக அவதரித்த , உம்முடைய திருக்குமாரன் சேசுநாதர் உம்மாலே எங்கள் வேண்டுதலைக் கேட்கக்கடவாராக.
உத்தம கன்னிகையே, அனைத்திலும் சாந்தமே, நாங்கள் பாவங்களினின்று விடுப்பட்டவர்களாகிச் சாந்தமுடையோராகவும் கற்புடையவராகவும் செய்தருளும்.
நாங்கள் சேசுநாதரைத் தரிசித்து எப்போதும் களிகூர்ந்திருக்கச் சுத்த நடத்தையைத் தந்து பயமில்லாத வழியில் கூட்டிக் கொண்டு போகவும் அனுக்கிரகம் செய்தருளும்.
சர்வேசுரனாகிய பிதாவுக்குத் தோத்திரம், உத்தம கிறிஸ்துவுக்குப் பூசை, இஸ்பிரீத்து சாந்துவுக்கு மங்களம்; இந்த மூன்றாட்களுக்கும் ஒரே உத்தம தேவாராதனை உண்டாகக் கடவது. ஆமென்.
கிறிஸ்துவே, உம்மைச் சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளாமே.
மிகவும் மிகுந்த மதுரமுள்ள அர்ச். மரியாயே, ஒன்றான சர்வேசுரனைப் பழுதற்ற கன்னிகையாயிருந்து உமது கர்ப்பத்திலே பிள்ளையாகத் தரித்தீரே, வாழ்க! அத்தேவசுதனைக் குறையற்ற கன்னிகையாயிருந்து கொண்டு பிறவித் துன்பமில்லாமல் பெற்றெடுத்தீரே, வாழ்க! அவரைப் பெற்ற பின்னும் எப்போதும் பரிசுத்த கன்னியாயிருக்கிறீரே வாழ்க. சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
தேவ சுவையும் திவ்விய கன்னிகையுமான சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே, நீதியாதித்தனாகிய சேசுகிறீஸ்து உம்மிடத்தில் அவதரித்ததினாலே நீர் அதிகப் பாக்கியவதியுமாய்ச் சகல தோத் திரங்களுக்கும் பாத்திரமுமாயிருக்கிறீர். நிர்ப்பாக்கியருக்கு உதவி யாயிரும். அழுகிறவர்களை அரவணையும், அல்லற் படுகிறவர் களுக்கு ஆறுதலாயிரும். சர்வ சனங்களுக்காக மன்றாடும். பூசையில் சபைக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளும். உமது பேரில் பக்தியாயிருக்கிற ஸ்திரீ பூமான்களுக்காக மன்றாடும். உம்முடைய திரு நாமத்தை யாரார் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் உமது உபகாரத்தின் பலனை அடையக்கடவார்கள்.
சர்வேசுரா சுவாமீ! தேவரீரை ஸ்துதிக்கிறவர்களுக்கு வெகு மானம் செய்கிறீர். உமது திருவடியார்களுடைய மகிமைகளாற் பூசிக்கப்படுகிறீர். தேவரீருடைய திருவடியார்களாகிய அர்ச். இஞ்ஞாசியார், அர்ச். சவேரியார் இவர்களது புண்ணியங்களை ஸ்துதிக்கிற நாங்கள் இவர்களுடைய இரக்கமுள்ள வேண்டுதலின் பலனைக் கண்டுகொள்ளத்தக்கதாக என்றும் தயை புரிந்து இரட்சியும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்ட வரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
மோட்சவாசிகள் வணக்கம் பரலோகத்தில் சர்வேசுரனைக் கண்டு களிகூர்ந்து கொண்டிருக்கும் அர்ச். பத்திச்சுவாலகர்களே, ஞானாதிக்கர்களே, பத்திராசனர்களே, நாதக்கிருத்தியர்களே, சத்துவகர்களே, பலவந்தர்களே, அதி தூதர்களே, தூதர்களே, எங்களுக்குக் காவலா யிருக்கிற சகல சம்மனசுகளே, இன்று நாங்கள் பாவ வழியைவிட்டு முற்றும் அகன்று புண்ணியங்களைச் செய்து சர்வேசுரனுக்குப் பிரியப்பட எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஆமென்.
அர்ச். பிதாப் பிதாக்களே, தீர்க்கதரிசிகளே , அப்போஸ்தலர்களே , வேத சாட்சிகளே , மேற்றிராணிமார்களே, குருக்களே, சகலமான ஸ்துதியர்களே , கன்னிகைகளே, ஸ்திரீ பூமான்களான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, உங்களைப்போல் நாங்களும் உலகத்தில் இருக்கிறவரையில் பாவதோஷங்களை முழுதும் விட்டுத் தேவசிநேகத்தில் நிலைகொண்டு வாழ எங்களுக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். ஆமென்.
முத்திப்பேறு பெற்ற அர்ச். கன்னிமரியம்மாளுடைய மாசற்ற திரு உற்பவம் ஸ்துதிக்கப்படக்கடவது.
33 மணிச் செபம் மற்றதும்
சகல அர்ச்சியசிஷ்டவர்களின் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும். மற்றதும்
அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். இரஃபாயலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தூதரும் அதிதூதருமாயிருக்கிற சகல சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
நவவிலாச சபையாயிருக்கிற சகல சம்மனசுகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அர்ச். ஸ்நாபக அருளப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பிரதான பிதாக்களும் தீர்க்கதரிசிகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அர்ச். இராயப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பெலவேந்திரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். யாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அருளப்பரே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சின்ன யாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பிலிப்புவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பர்தலோமேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். மத்தேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சிமோனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். ததேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். மத்தியாசே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பர்னபாசே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். லூக்காவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். மாற்குவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். மத்தேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
எங்கள் ஆண்டவருடைய சீடர்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
மாசில்லாத சகல அர்ச்சியசிஷ்ட குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அர்ச். முடியப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். செய்யப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். வின்சேந்தியுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பபியானும் செபஸ்தியானும் என்கிற அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அருளப்பரும் தமியானும் என்கிற அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
கொஸ்மாவும் தமியானும் என்கிற அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
செர்வாசியும் புறோத்தாசியும் என்கிற அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அர்ச். சிலுவேஸ் திரியுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். கிரகோரியுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அமிர்தநாதரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அகுஸ்தீனாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். இயரோணிமுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். மர்த்தினூவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். நிக்கோலாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
வேத வித்தியபாரகரான சகல அர்ச்சியசிஷ்டவர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். ஆசீர்வாதப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பெர்நார்துவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பிராஞ்சீஸ்குவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குருக்களும் ஆசாரியருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
சந்நியாசிகளும் தபோதனருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அர்ச். மரியமதலேனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். ஆகத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். பிரகாசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். ஆக்னேசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். செசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச், கத்தரீனாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அனஸ்தாசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியாஸ்திரீகளும் விதவை ஸ்திரீகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
தயாபரராயிருந்து, எங்கள் பாவங்களைப் பொருத்தருளும் சுவாமி.
தயாபரராயிருந்து, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
சகல பொல்லாப்புகளிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
சகல பாவங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
உமது கோபத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
திடீரென்று வருகிற துர்மரணத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
பசாசினுடைய சகல தந்திரங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
கோபம் பகை முதலான சகல துர்க்குணங்களிலிருந்து எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
மோக அக்கினியிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
இடி பெருங் காற்றிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
பூமி அதிர்ச்சியாகிய அநேக ஆக்கினைகளிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
பஞ்சம் படை கொள்ளை நோயிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
நித்திய மரணத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய திரு மனுதாவதாரத்தின் பரம இரகசியத்தைப் " பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய ஆகமனத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய பிறப்பைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய திவ்விய பாலத்துவத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய ஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய சிலுவையையும் பாடுகளையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய மரணத்தையும் அடக்கத்தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய திவ்விய உத்தானத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேவரீருடைய திவ்விய ஆச்சரியமான ஆரோகணத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
தேற்றரவு செய்கிறவராகிய இஸ்பிரித்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
நடுத்தீர்க்கிற நாளிலே, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.
பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் பாவங்களைப் போக்கியருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்களை தயை செய்து இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
நாங்கள் மெய்யான தவம் புரிய உதவி செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
தேவரீர் உமது அர்ச். சபையை ஆளவும் பாதுகாத்தருளவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
அர்ச். பாப்பு முதலான அதி சிரேஷ்ட ஆசாரியரையும் ஆகம சபைகளில் உள்ள சகல குருக்களையும் சந்நியாசிகளையும் சத்திய வேத முறைமைகளில் தற்காத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
உமது அர்ச். சபையின் சத்துருக்களைக் கீழ்ப்படுத்த வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
சத்தியவேத இராசாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சமாதானத்தையும் சரியான ஒற்றுமையையும் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
சகல கிறிஸ்துவர்களுக்கும் சமாதானத்தையும் ஒற்றுமைப் பந்தனத்தையும் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
ஏக சத்திய திருச்சபையைவிட்டுப் பிரிந்து போனவர்களனைவரும் மெய்ம்மறையின் ஒளியின் பின் செல்லவும் அனுகிரகம் புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
தேவரீருடைய திருப்பணியிலே அடியோரைத் திடப்படுத்திக் காப்பாற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் மனது பரலோக ஆசையைப்பற்றி உயர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்களுடைய உபகாரிகளுக்கு நித்திய நன்மையைப் பலனாகக் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் ஆத்துமங்களையும் எங்களுடைய சகோதரர் பந்துக்கள் உபகாரிகளுடைய ஆத்துமங்களையும் நித்திய நரகாக்கினை யிலிருந்து இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
பூமியிலே நல்ல பயிர் விளைவின் பலன் தந்து காப்பாற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
மரணத்தை அடைந்த எல்லா விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் வேண்டுதலை நன்றாகக் கேட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
சர்வேசுரனுடைய சுதனே உம்மை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற , மற்றதும்.
பிரார்த்திக்கக்கடவோம்.
சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா! சீவியர்கள் மேலும் மரித்தோர்கள் மேலும் செங்கோன்மை செலுத்தி, விசுவாசத் தாலும் நற்கிரியைகளாலும் உமது பட்சம் ஆவார்கள் என்று தேவரீர்முன் தெரிந்த அனைவருக்கும் தயையுள்ளவராயிருக்கிறீர். நாங்கள் யார்யாருக்காக செபித்து மன்றாடுகிறோமோ அவர்கள் எல்லோரும் சரீர சம்பந்தத்தோடு இவ்வுலகில் இருக்கின்றவர் களாயினும், சரீரத்தை விட்டு மறு உலகிற்கு சென்றவர்களாயினும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய வேண்டுதலாலும் உமது நன்மைப் பெருக்கத்தின் கிருபாகடாட்சத்தாலும் பாவப் பொறுத் தலை அடையத்தக்கதாகத் தேவரீரைப் பிரார்த்திக்கிறோம். தேவரீ ரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் ஏக சர்வேசுரனாயிருந்து சதா காலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலகருமாயிருக்கிற உம்முடைய திருச் சுதனாகிய சேசுகிறிஸ்துவினுடைய திரு முகத்தைப் பார்த்து இந்த மன்றாட்டைத் தந்தருளும் சுவாமி.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
புதன்கிழமை காலைச் செபம்
Posted by
Christopher