அர்ச். சூசையப்பரிடம் ஜெபம்

கன்னியர்களின் பாதுகாவலரும், பரிசுத்த தகப்பனுமான அர்ச். சூசையப்பரே, மாசற்றதனமாகவே இருக்கிற கிறீஸ்து சேசுவும், கன்னியர்களில் உத்தம கன்னிகையான மாமரியும் உமது பிரமாணிக்கமுள்ள கண்காணிப்பில் ஒப்படைக்கப் பட்டார்களே. சேசு, மரியாயாகிய இந்த வாக்குத்தத்தங்களின் வழியாக, அடியேன் சகல அசுத்ததனத்தினின்றும் பாதுகாக்கப் பட்டு, கறையற்ற மனத்தோடும், மாசற்ற இருதயத்தோடும், கற்புள்ள சரீரத்தோடும், எப்போதும் மிகப் பரிசுத்த கற்புள்ள விதமாய் என் ஜீவிய காலம் முழுவதும் சேசுநாதருக்கும், மாமரிக்கும் ஊழியம் செய்யும் வரத்தை எனக்குப் பெற்றுத் தரும்படி, உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.