உலகப் பொருட்களின் மீது பற்றின்மை வேண்டி ஜெபம்

ஓ என் சேசுவே, தேவரீர் எளிமையுள்ள, மறைந்த ஜீவியத்தைத் தெரிந்து கொண்டீரே. இந்த உலகத்தின் கடந்து போகிற காரியங்களில் என் இருதயத்தைப் பற்றின்றி பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தேவையான வரப்பிரசாதத்தைத் தந்தருளும். இதுமுதல் தேவரீர்தாமே என் ஒரே பொக்கிஷமாக இருப்பீராக. ஏனெனில் நீர் மற்ற சகல உடைமைகளுக்கும் மேலாக, எல்லையற்ற விதமாய் விலையேறப் பெற்றவராயிருக்கிறீர். என் இருதயம் கடந்தோடி மறைகிற, வீணான உலகப் பொருட்களின் மீது மிகவும் நாட்டங் கொண்டிருக்கிறது. “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமத்தை இழந்தால், அவனுக்கு வரும் பயன் என்ன?” என்ற உம் எச்சரிப்புள்ள வார்த்தைகளை நான் எப்போதும் நினைவுகூரச் செய்தருளும். அடியேன் இந்த உலகத்தின் ஒன்றுமில்லாமையை நிந்தித்து, உம்மையே என் சகல ஆசைகளுக்கும், நாட்டங்களுக்குமுரிய மையப் பொருளாகக் கொண்டிருக்கும்படியாக, என் கண்களுக்கு முன்பாக எப்போதும் உமது பரிசுத்த முன்மாதிரிகையைக் கொண்டிருக்க எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தைத் தந்தருளும். ஆமென்.