அர்ச். ஞானப்பிரகாசியாரிடம் ஜெபம்

சம்மனசுக்கொத்த புண்ணியங்களால் அலங்கரிக்கப் பட்டவரான அர்ச். ஞானப் பிரகாசியாரே, என் மனத்தினுடையவும், சரீரத்தினுடையவும் கற்பை மிகுந்த ஆவலோடு உம்மிடம் கையளிக்கிறேன். சம்மனசுக்கொத்த உமது பரிசுத்ததனத்தின் வழியாக, நீர் மாசற்ற செம்மறிப் புருவையாகிய சேசு கிறீஸ்து நாதரிடமும், அவருடைய மகா பரிசுத்த தாயாரும், கன்னியர்களுக்குள்ளே அர்ச். கன்னிகையுமாகிய மாமரியிடமும் என்னைக் கையளித்து, சகல கொடிய பாவங்களிலிருந்தும் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அசுத்ததனத்தின் எந்தச் சிறு புள்ளியாலும் கூட நான் என்னையே கறைப்படுத்த என்னை அனுமதியாதேயும். நான் பாவத்தின் சோதனையிலோ, அல்லது ஆபத்திலோ இருப்பதை நீர் காணும் போது, சுத்தமற்ற ஒவ்வொரு சிந்தனையையும், ஆசையையும் என் இருதயத்திலிருந்து தூர அகற்றியருளும். என்னில் நித்தியத்தையும், சிலுவையில் அறையுண்ட சேசுநாதரையும் பற்றிய சிந்தனைகளைத் தட்டியெழுப்பியருளும். தேவ பயத்தின் ஓர் உயிருள்ள உணர்வை என் இருதயத்தில் ஆழமாகப் பதித்தருளும். உம்மோடு பரலோகத்தில் சர்வேசுரனுடைய உடைமைகளை நான் அனுபவிக்கும் படியாக, தேவ சிநேகத்தால் நான் பற்றியெரியச் செய்தருளும்; ஆமென்.