பாத்திமா காட்சிகள் - பரிசுத்த பாத்திமா அன்னைக்கு நவநாள் ஜெபம்

பரிசுத்தமிக்க கன்னிகையே, ஜெபமாலை பக்தியில் நிறைந்திருக்கும் வரப்பிரசாத செல்வங்களை உலகிற்கு வெளிப்படுத்த பாத்திமாவில் காட்சி தந்த எங்கள் அன்புத் தாயே, மீட்பளிக்கும் தேவ இரகசியங்களை உள்ளுணர்வுடன் தியானித்து ஜெபமாலை ஜெபிக்கும் நற்பழக்கத்தையும், அதன்மீது ஆழ்ந்த பக்தியையும் எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஜெபமாலை பக்தியின் பயனாகப் பாவிகள் மனந்திரும்புவார்களாக.  ரஷ்யா மனந்திரும்பி, தேவ விசுவாசம் கொள்வதாக.  மேலும் இந்த நவநாள் ஜெபத்தில் நாங்கள் விரும்பிக் கேட்கும் நற்கருத்துக்கள் (... இவற்றை இங்கு குறிப்பிடவும்) எல்லாம் தவறாது நிறைவேறுவனவாக.

இவற்றையயல்லாம் சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக் காகவும், உமது புகழ்ச்சிக்காகவும், ஆன்மாக்களின் மீட்புக்காகவும் எங்களுக்கு அருள வேண்டுமென்று அன்பு நிறைந்த அன்னையே, உம்மைக் கெஞ்சிக் கேட்கிறோம்.  ஆமென்.

பாத்திமா ஜெபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.