பாத்திமா காட்சிகள் - பாப்பரசர்களும், பாத்திமாவும்

ஜனவரி 17, 1918 : பாத்திமா மறைமாவட்டம் பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பரால் நிறுவப்படுகிறது.

அக்டோபர் 13, 1930 : பாத்திமாவில் நடந்த காட்சிகள் இயற்கைக்கு அப்பாற் பட்டவையயன ஆயர் அறிவிக்கிறார்.

அக்டோபர் 31, 1942: உலகத்தை அன்னை மாமரியின் இருதயத்திற்கு அர்ப்பணிக்கின்றார் பாப்பரசர் 12-ம் பத்திநாதர்.

மே 4, 1946 : அன்னை பாத்திமா காட்சியின் 25ம் ஆண்டு நிறைவு நினைவு நாளில் பாப்பிறை 12-ம் பத்திநாதர் மரியாயின் மாசற்ற இருதயத்தின் திருநாளை (ஆகஸ்ட் 22) ஏற்படுத்துகிறார்.

மே 13, 1944: அன்னைக்கு முடிசூட்டி, அவர்களை “உலகத்தின் அரசி” எனப் பிரகடனப் படுத்துகிறார் பாப்பரசர் 12-ம் பத்திநாதர் - மே 31.

ஜூன் 13, 1946 : பாத்திமா செய்தியை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுகின்றார் பாப்பரசர் 12-ம் பத்திநாதர் தாம் எழுதிய திருமுகத்தில்.

அக்டோபர் 13, 1951 : அகில உலகத்திற்குமான “புனித ஆண்டு” பாத்திமாவில் முடிவு பெறுகின்றது. பாப்பரசரின் தூதர், பாத்திமாவின் அற்புதக் காட்சியினைப் பாப்பரசருக்குத் தெரிவிக் கின்றார்.

ஜூலை 7, 1952 : இரஷ்ய நாட்டு மக்களை, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கின்றார் பாப்பரசர் 12-ம் பத்திநாதர்.

அக்டோபர் 11, 1954 : “உலகத்தின் அரசிக்கு” எனும் தமது சுற்றுமடலில் பாத்திமாவின் அற்புதக் காட்சியினை 12-ம் பத்திநாதர் பாப்பரசர் குறிப்பிடுகின்றார்.

நவம்பர் 12, 1954 : பாத்திமா ஆலயம் திருத்தலமாக பாப்பரசர் 12-ம் பத்திநாதரால் உயர்த்தப்படுகிறது.

அக்டோபர் 13, 1956 : பாத்திமா திருத்தலமருகில் கட்டப் பட்ட நீல  அணி நிலையத்தை, பாப்பரசரின் தூதுவர் கர்தினால் டிசிராண்ட் மந்திரித்து அர்ப்பணிக்கிறார்.

டிசம்பர் 13, 1962 : பாத்திமா ஜெபமாலை மாதாவின் திருநாளை திருத் தந்தை 23-ம் அருளப்பர் ஏற்படுத்துகிறார்.

மே 13,1965 : அகில திருச்சபை யையும் அன்னையின் அடைக்கலத்திற்கு அர்ப்பணித்ததின் அடையாளமாக, பாத்திமாவுக்கு தங்க ரோஜா ஒன்று, பாப்பரசர் தமது தூதுவர் வழியாக அளிக்கின்றார்.

மே 13, 1967 பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் பாத்திமாவுக்கு திருப்பயணம் மேற்கொண்டு, உலக சமாதானத்திற்காக மன்றாடி, அன்னையின் மாசற்ற இருதயத்திற்கு அகல உலகை மீண்டும் அர்ப்பணிக்கிறார்.