இன்று சிலுவைப்பாதை

இன்று சிலுவைப்பாதை பக்திமுயற்சி தவக்காலங்களில் பரவலாக எல்லாப் பங்குகளிலும், சில பாடசாலைகளிலும் பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் இடம்பெற்று வருகின்றது. மக்கள் இப்பக்தி முயற்சியைப் பெருங்கூட்டமாகவும், சிறு குழுக்களாகவும், தனி நபர்களாகவும் தவக்காலங்களில் மேற்கொள்வர்.

சிலுவைப்பாதைப் பக்தி முயற்சியை மேற்கொள்வோரின் நலன்கருதி பெரும் எண்ணிக்கையிலான சிலுவைப் பாதைச் சிந்தனைக் கைநூல்களும், ஏனைய பிரசுரங்களும் வெளிவருகின்றன. மேலும் பல்வேறு நிலையிலுள்ள குழுக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் (அதாவது பெற்றோர், ஆசிரியர், மாணவர் கள், மறை ஆசிரியர்கள்) இச்சிலுவைப்பாதைக் கைநூல்கள் ஆக்கப் பட்டுள்ளன.

பொதுவாகத் தவக்காலங்களில் வெள்ளிக்கிழமைகளில் மாலையில் சிலுவைப்பாதைப் பக்தி முயற்சியும் அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் அநேக ஆலயங்களில் வழக்கிலுள்ள நடைமுறையாகும். சில பங்குகளில் தவக்காலங்களில் கிராமங்களில் உள்ள வீதிகள் வழியாகவும் சிலுவைப்பாதைப் பக்தி இடம்பெறுவது உண்டு.

பெரிய வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற பெரிய சிலுவைப்பாதை இங்கு குறிப்பில் இடம்பெறவேண்டிய மற்றுமொரு சிறப்பு நிகழ்வாகும். அநேக ஆலயங்களில் பெரிய வெள்ளிக்கிழமை களில் காலையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்ளும் இப்பெரிய சிலுவைப்பாதையில் வழங்கப்படும் நிபந்தனை கள் பலருக்கும் பயனளிக்கும் ஒரு பக்தி முயற்சியாகும்.

இவ்வாறான பெரிய சிலுவைப்பாதை ஆலயத்தைச் சுற்றியே பொதுவாக இடம் பெறும். பெரிய வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதைப் பக்தி முயற்சியில் மக்களுக்கு அதிக ஆன்மீகப் புதுப்பித்தலுக்கான வாய்ப்பை இந்நாளுக் குரிய அக, புறச் சூழல்கள் வழங்குகின்றன. மேலும், பொதுவாகப் பல இடங்களிலும் தவக்காலங்களின் வெள்ளிக்கிழமைகளிலும் பெரிய வெள்ளிக்கிழமைகளிலும் சிலுவைப்பாதைச் சிந்தனைகள் மக்களால் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு சிறப்பான விடயமாகும்.