பரிசுத்த ஆவியானவரின் வரவைக் கெஞ்சி மன்றாடுதல்

ஸ்பிரீத்து சாந்துவே வாரும்

அன்பான தேவனே 

அடியோர் உள்ளத்தே இறங்கும்.


1. உமது ஞானம் இல்லாதாகில் 

தவறிப் போவோம் பாருமே 

எமதஞ்ஞானத்தை நீக்கவே 

எழுந்தருளும் மெய்ச் சோதியே 

வாரும் ஞான சோதியே  (2)


2. நரக மோடுலகு சேர்ந்து 

நம்மை ஐயோ கெடுக்குதே 

விரைவாய் வாரும் தேவனே நீர் 

வேதனையால் எம்மை மீட்கவே 

வாரும் எம்மை மீட்கவே  (2)


3. திருப்ரசாதம் தர வாரும்

தீங்கில்லாமல் நாமிருப்போம்

தேவனே நீர் காவல் செய்வோருக்கு

ஆனந்தமே தூயானந்தமே

வாரும் காவல் தாருமே  (2)