சகல சிருஷ்டிகளும் சர்வேசுரனை ஸ்துதிக்க அழைத்தல்

 1. மனமே வா தொழுவோம் பரமானந்தமாம் கடவுள்

மலர்நேர் பொற்பதம் போற்ற எந்நாளும் நீ

மனமே வா தொழுவோம்.


2. நினைவே நீ நினையாய் நம்மை நேசிக்கும் ஆண்டவரை 

நினைவாலே அவர் நேசப் பெருக்கத்தை 

நினைவே நீ நினையாய்.


3. நெஞ்சே நீ ஸ்துதிப்பாய் ஒளிர் நித்தியன் பாதமதை 

நெஞ்சால் என்றவர் திவ்ய புகழ் நிதம்

நெஞ்சே நீ ஸ்துதிப்பாய்.


4. மலர்காள் நீர் ஸ்துதிமின் பல மரங்கனி பூங்கனிகாள் 

மலர்காள் தேன் பொழிந்தே ஸ்துதிப்பீர்களே 

மலர்காள் நீர் ஸ்துதிமின்.


5. விண்மீன் விண்ணொளிகாள் தொனிவோடிசை பாடளிகாள் 

விண் ஆள் ஆண்டவர் மாட்சியைப் பாடுவீர்

விண்மீன் விண்னொளிகாள்.