பரிகார நாட்கள் பற்றிய இன்றைய நிலைப்பாடு

இன்று இலத்தீன் திருச்சபையின் படிப்பினையின்படி வருடத்தில் உள்ள எல்லா வெள்ளிக்கிழமைகளும், தவக்கால நாற்பது நாட்களும் பரிகாரத்தின் நாட்களாகும்.

வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இறைச்சி உண்பது தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் வெள்ளிக் கிழமைகளில் பெருவிழாக்கள் இடம்பெறுமாயின் இறைச்சி உண்பதற்கு விதிவிலக்கு உண்டு.

விபூதிப் புதன்கிழமையிலும், பெரிய வெள்ளிக் கிழமையிலும் சுத்த போசனமும் (மாமிச தவிர்ப்பு) நோன்பு கடைப் பிடிக்கும் கடமை பதினெட்டு வயதிற்கும் அறுபது வயதிற்கும் உட்பட்ட அனைவருக்கும் உண்டு.

பதினான்கு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சுத்தபோசனம் தொடர்பான ஒழுங்கைக் கடைப்பிடிக்கக் கடமை உள்ள வர்கள். எனினும் இந்த வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களும் நோன்பு, மாமிசத் தவிர்ப்பு விதிகளைக் கடைப்பிடிக்க ஊக்கம் அளிக்கும்படி குருக்களும், பெற்றோரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.