தெய்வீக திருப்பலி

அதிமிக உன்னதமானது திருப்பலி. திவ்ய திருப்பலியில் நடப்பது கல்வாரிப்பலி. அந்த திருப்பலியில் மிகவும் பக்தியோடு கலந்துகொள்ளவேண்டும். ஆண்டவராகிய இயேசு பிரசன்னமாகும் உன்னதமான பலி திருப்பலி. அனைத்து ஜெபங்களுக்கும் முதலிடம் வகிப்பது திருப்பலியே. செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதும், ஆண்டவரோடு நம் உறவை புதுப்பிப்பது நடப்பது திருப்பலியில். உடல் நலமும், ஆன்ம நலமும் கொடுப்பது திருப்பலியே. உத்தரிக்கும் ஆத்மாக்கள் விண்ணகம் செல்லுவதும் இந்த தெய்வீக திருப்பலியாலே ! நம்முடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் அதை இந்த தெய்வீக பலி மூலமாக பெறமுடியும்.

அப்பேற்பட்ட தெய்வீகதிருப்பலியை நாசமாக்க சாத்தான் துணிந்துவிட்டான். அவனுக்கு நிறைய இடங்களில் வெற்றியை நாமே பெற்றுத்தருகிறோம்.

அதிமிகபக்தியோடு ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலிகள், அநேகமாக நிறைய இடங்களில் ஒரு நாடக மேடைபோல் ஆகிவருவது மிகவும் வருத்தம் தரக்கூடிய செயல். அது ஆண்டவர் இயேசுவுக்கு செய்யும் அவசங்கை.

நாங்கள் திருப்பலியை பிரமாண்டமாக ஒப்புக்கொடுக்கிறோம் என்று சொல்லி திருப்பலி ஆரம்பிக்கும் முன் இளம்பெண்களை பரத நாட்டியமோ இல்லை கும்ப நாட்டியமோ ஆட வைப்பது முறையா ? ( பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை, அண்ணண்மார்களே ! உங்கள் தங்கைகளை இந்த பாவமான காரியத்தை செய்ய அனுமதிக்காதீர்கள்)

ஆடம்பர திருப்பலி அவசங்கை திருப்பலியாக ஆகலாமா?

நடுப்பூசையில் ஆரத்தி தேவையில்லை. அப்படியே தேவையென்றாலும் குழந்தைகள், சிறுவர்கள் செய்யலாம் இளம்பெண்கள் அல்ல.

எல்லாவற்றிற்கும் மேலாக நற்கருணை உட்கொண்ட பின் நம் இதயத்தில் இருக்கும் இயேசுவிடம் பேசுவதை விட்டுவிட்டு பாராட்டு விழாவை துவங்கிவிடுகிறோம்.

அவர் நன்றாக பிரசங்கம் வைத்தார். அந்த அதிபருக்கு வாழ்த்துக்கள், பொன்னாடை போர்த்துதல், பரிசு கொடுத்தல் இத்தனைகளும் கைத்தட்டல்களுக்கு மத்தியில் நிகழ்கிறது. அது திருப்பலி பீடமா அல்லது பாராட்டுவிழாக்கள் நடத்தப்படும் மேடையா?

மத்தியில், நடு நாயகமாக, போற்றத்தக்க, வாழ்த்ததக்க, வேண்டத்தக்க கடவுள் ஓரங்கட்டப்படுகிறார். நற்கருணை நாதர் ஒதுக்கப்படுகிறார். யார் யாரோ முன்னினை பெறுகின்றனர். ஆண்டவரைத்தவிர்த்து.

திருப்பலி முடிந்தபிறகு யாரையும் வாழ்த்துங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள். எல்லாரும் நமக்கு பெரியவர்கள் ஆண்டவராகிய இயேசுவைத் தவிர. நாமே நம் கத்தொலிக்கத்தை அழித்துவருகிறோம்.

அன்பார்ந்த கத்தொலிக்க சொந்தங்களே ! திருப்பலி நாடக மேடையாக மாறிக்கொண்டிருப்பதை உடனே தடுத்து நிறுத்துவோம், அருட்தந்தையர்கள் மற்றும் ஆயர்களின் ஆதரவுடன்.