புனிதர்கள் யார்?

1.      நம்மைப்போல ஜென்மப்பாவத்தோடு (மாதா தவிர்த்து) பிறந்து உலக இயல்பில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை இயேசு சுவாமி அழைத்து தன் திட்டத்திற்காக தேர்ந்து கொண்டதும் அவர்கள் அனைத்தையும் துறந்து இயேசு சுவாமிக்காய் வாழ்ந்து, சுவாமியை அறிவித்து இயேசு சுவாமிக்காய் பல இன்னல்கள் பட்டு முடிவில் தன் இரத்தத்தை சிந்தி இயேசுவுக்கு தன் இன்னுயிரைக் கொடுத்து அவருக்கு சாட்சியானவர்கள். ( உம்: அப்போஸ்தலர்கள், இன்னும் ஆயிரமாயிரம் புனிதர்கள்)

2.      ஜென்மப் பாவத்தோடு பிறந்திருந்தாலும் நல்ல பெற்றோர்களால் அவர்கள் குழந்தைகளாயிருக்கும் போதே இயேசு சுவாமி அவர்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்டு, உண்மைக் கிறிஸ்தவனாய், கிறிஸ்தவளாய் வாழ பெற்றோர்களால் பயிற்சிகொடுக்கப்பட்டு பின்னாளில் பெரிய புனிதனாய், புனிதையாய் ஆனவர்களும் உண்டு ( உம்; புனித தொன்போஸ்கோ, புனித தொமினிக் சாவியோ, புனித குழந்தை தெரசா, புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்,  தந்தை பியா, மற்றும் பலர்)

3.      ஆண் புனிதர்களைப்போல் எத்தனையோ பெண் புனிதர்கள் இயேசு சுவாமிக்காய் தன் குருதி சிந்தி இன்னுயிரை இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ( உ. ம் : புனித பிலோமினா, புனித செசிலியா மற்றும் பலர்)

4.      முதல் மூன்று  நூற்றாண்டுகள் மட்டும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் குடும்பம், குடும்பமாக, கூட்டம் கூட்டமாக கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் (ரோமில்) 60 லட்சம் பேர்.

5.      அரசன் முன்னால் நிறுத்தப்படுவார்கள். அரசன் “ இயேசு சுவாமியை மறுதலித்து தன்னை கடவுளாக வணங்கச்சொல்லுவான். அவர்கள் மறுப்பார்கள்; பின் கொல்லப்படுவார்கள் ( உம்; கணவனை இழந்த பெண், தன் கண் முன்னாலேயே தன் ஏழு மகன்கள் கொல்லப்பட்டு முடிவில் தானும் கொல்லப்பட்டாள், புனித அந்தியோக்கு இன்னாசியார், புனித லாரன்ஸ்)

6.      எத்தனையோ போப் ஆண்டவர்கள், ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், கொல்லப்பட்டுள்ளார்கள்.

7.      எத்தனையோ பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள் ( உம். புனித பெர்ப்பேத்துவா பெரிசித்தம்மாள், தன் கற்பை நேசித்து அதை இறைவனுக்கு அற்பணித்து அதற்காகவே கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பெண் புனிதைகள் ஏராளம்;ஏராளம் ( உம்.பிரகாசியம்மாள், புனித மரிய கொரைற்றி,

8.      முதலில் சாவான பாவத்தில் வாழ்ந்து இயேசு சுவாமியால் தொடப்பட்டு மிகப்பெரிய புனிதர்களான பலர் உண்டு ( புனித மகதலேன் மரியாள், புனித அகுஸ்தினார், புனித அசிசியார்)

9.    உலகப்புகழ்தான் சிறந்தது என்று வாழ்ந்து அது அற்பம் என்று அனைத்தையும் துறந்து ஏன் அரன்மனையையே துறந்து இயேசுவுக்காய் சாட்சியானவர்களும் உண்டு ( உம்; புனித சவேரியார் மற்றும் பல மன்னர்கள், அரசிகள், இளவரசர்-இளவரசிகள்)

10.  உலக வாழ்க்கையை துறந்து காட்டுக்குள் கடும் தவ வாழ்வு வாழ்ந்த புனிதர்களும் உண்டு ( உம்: புனித சாமி நாதர், புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர்)

இன்னும் நமக்கு தெறிந்த பதுவை புனித அந்தோனியார், புனித தொன்போஸ்கோ, புனித மார்கரெட் மரியம்மாள், புனித அல்போன்சா, புனித அன்னை தெரசா உட்பட ஆயிரமாயிரம், புனிதர்கள் வரலாறு கேள்விப்பட்டுள்ளோம்.

அவர்கள் தன்னுடைய மனித வாழ்வில் பாவத்தை துறந்து இயேசு சுவாமிக்காய் வாழ்ந்து சாட்சியானார்கள். அதற்காக இயேசு சுவாமி அவர்களுக்கு கொடுக்கும் மகிமையே அவர்கள் பரிந்துரையை ஏற்று நமக்கு தேவையானதை பெற்றுத் தருதல்,  அவர்களுக்கு புதுமைகள் செய்யும் ஆற்றலை கடவுள் கொடுத்தல் ( வாழும் போது) .

மேலும் புனிதர்கள் வரலாறு நமக்கு போதிக்கும் செய்தி என்ன?

அவர்கள் நம்முடைய ரோல் மாடல்கள். அவர்களைப்போல் நாமும் புனிதர்கள் ஆகமுடியும் என்பதே. எத்தகையை வாழ்க்கை சூழல்களில் வாழ்ந்தாலும், குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும், குருக்களாக-கன்னியர்களாக இருந்தாலும், ஏன் இப்போது மோசமான பாவிகளாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களால் புனிதர்கள் ஆகமுடியும். பாவ வாழ்க்கையை விட்டு மனம்மாறி ஜெபத்திலிலும், தவத்திலும், பரிகாரத்திலும் நிலைத்து நின்று இயேசு சுவாமியைப் பற்றிக்கொண்டு புனிதர்கள் ஆக முடியும் என்பதே அவர்கள் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள்.

ஆதலால் நம்மாலும் புனிதர்கள் ஆக முடியும் என்ற நம்பிக்கையோடு முயற்சி செய்வேன். புனிதர் வரலாறுகளை வாங்கி நாளும் வாசிப்போம்.  நாமும் புனிதர்கள் ஆவோம்...

இயேசுவுக்கே புகழ்!  மரியாயே வாழ்க!