நரகம் மோட்சம் உத்தரிக்கும் ஸ்தலம் - இது இடமா? இல்லை, ஒரு நிலை! சிறுவிளக்கம்.

பாத்திமா காட்சியில் மாதா தனது கையிலிருந்து ஒளிக்கற்றையை வீசச் செய்து நரகத்தை திறந்து காட்டினார் ஆன்மாக்கள் கொத்து கொத்தாக விழுவதைக் கண்டோம்

ஆறாம் கற்பனைக்கு விரோதமான பாவமே காரணம் என்றார்

நாங்கள் மோட்சம் போவோம் என அன்னை எங்களுக்கு வாக்குறுதி அளிக்காவிடில் இறந்திருப்போம் என்றனர்

எங்கள் பக்கத்து வீட்டு அமலி அக்கா (வயது ஏறக்குறைய 15)எங்கே இருக்கிறார்கள் என கேட்டனர்

அவள் உலகம் முடியுமட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேண்டும் என்றார்

நரகம் உண்டு என்பது உண்மை அது ஒரு இடமாக இருக்கிறது ஆயுள் முடிவதற்கு முன் மரணம் அடைந்து நரகம் அடைவோர் ஆன்மா உலகில் நரக வேதனை அனுபவிக்கும்

என்ன வேதனை கடவுளை காண இயலாது கடவுளை காண துடிக்கும் அவலம் கடவுள் அருகில் வந்தாலும் அறிய இயலாது வேதனை ஒன்றே உண்மை இன்னும் ஏராளம் உண்டு

உத்தரிக்கிற ஸ்தலமும் அப்படி வேதனையானதே

ரஷ்யாவில் (ussr)ஒரு சோதனை நடந்தது பூமி உருண்டை எனவே ஒரு பக்கம் ஓட்டை போட்டால் மறுபுறம் ஓட்டை வரும் பார்க்கலாம் என செயல்படுத்தினர்

ஓட்டை போட்டனர் ஒரு கட்டத்தில் இரும்பு ராடு உருகியது உருகாத ராடு பொருத்தினர்

இன்னும் அதிக ஆழம் தோண்டினர் வெப்பம் தாங்க முடியவில்லை எனவே தோண்டியவர் பாதுகாப்பு கவசத்துடன் பணி செய்தனர்

அங்கு ஏதாவது ஒலி வருகிறதா என பார்க்க ஒலிப்பதிவு செய்தனர்

ஒலி வந்தது ஓலக்குரல் அழுகை அபயக்குரல் அங்கு மனிதர்கள் இல்லையே எப்படி இது சாத்தியம்

ஒரு விஞ்ஞானி சொன்னார் கத்தோலிக்கர் கூறுவது உம்மையோ என சந்தேகிக்கிறேன் என்றார்

இன்னும் சிறிது நேரத்தில் ஒரு இராட்சத கரிய பறவை பறந்து வெளியே வந்து மறைந்தது

பணியாளர் அச்சமுற்றனர் ஆய்வு நிறுத்தப்பட்டது

அமெரிக்கா கோள்களை ஆய்வு செய்ய அனுப்பிய கோளில் மிக அதிக உயரத்தில் ஒலிப்பதிவு செய்தது

உலகில் இல்லாத மிக இனிமையான இசை பதிவானது அப்படியானல் அங்கு பாடியவர் யார் என சிந்தித்தனர்

அறிஞர்கள் சம்மனசுக்களின் குரலாக இருக்கும் என முடிவு செய்தனர்

பிரான்சு நாட்டில் ஒரு அருட்சகோதரி தலைமை சகோதரியாக இருந்து பின் மரணம் அடைந்தார்

அவர் சபை ஒழுங்குபடி கண்டிப்பாக தனது அதிகாரத்திற்கு  உட்பட்டவர்களை நடத்தாததால் உத்தரிக்கிற ஸ்தலம் பெற்றார்

தனக்காக ஜெபம் செய்ய வேண்டிட சக சகோதரி முன் தோன்றினார்

மற்ற சகோதரிகள் அவர் மோட்சத்தில் இருப்பதாக நினைத்தனர்

அந்த உத்தரிக்கிற ஸ்தல சகோதரி எனக்காக ஜெபம் செய்யுங்கள் என வேண்டினார்

எனது வேதனையைப் பாருங்கள் என தனது கையை அங்குள்ள கதவில் வைத்தார் கதவு நெருப்பு பற்றி கை வடிவில் கரிந்து போனது

அந்த கதவு இன்றும் பிரான்சு மடத்தில் உள்ளது

இவர்கள் மன்றாடிய பின் விண்ணகம் செல்வதை உறுதி செய்து மறைந்தார்

கத்தோலிக்க படிப்பினைகள் சரியானவை

விசுவசிப்பது அவரவரை பொறுத்தது அது தனது மக்களுக்கு தவறானதை படிப்பிக்காது

தப்பறை புகும் அவை சரி செய்யப்படும்

கத்தோலிக்கம் தோன்றியது முதல் உள்ள அனைத்து தப்பறைகளும் தற்போது திருச்சபையில் உள்ளது


இதை அறிய பட்டம் பல பெற விருப்பும் மனிதன் இதை அறிய விரும்ப வேண்டும்