சலேத் இரகசியம்

1846-ல் செப்டம்பர் 19-ம் நாளில் பிரான்ஸ் நாட்டில் சலேத் மலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மெலானி என்ற சிறுமிக்கும் மாக்ஸிமின் என்ற சிறுவனுக்கும் மாதா காட்சியளித்தார்கள். முழு நேரமும் கண்ணீர் சிந்தினார்கள். காரணம் : சர்வேசுரனுடைய கற்பனைகளை மக்கள் அனுசரியாமல் பாவத்தைக் கட்டிக் கொள்வதால் கடவுளின் தண்டனை உலகின் மீது விழப்போவதுதான்.

இக்காட்சியில் மாதா மாக்ஸிமினுடன் தனியே பேசி அவனிடம் ஒரு இரகசியத்தை ஒப்படைத்தார்கள். அது ஒருபோதும் வெளியிடப்படவில்லை . தன் இரகசியத் தோடே மாக்ஸிமின் இறந்தான். மெலானியிடமும் மாதா அதே காட்சியில் ஒரு இரகசியத்தைக் கூறினார்கள்: "இதை என் குழந்தைகளே, என் எல்லா மக்களுக்கும் அறிவிப்பீர்கள்'' என்று மாதா கூறினார்கள்.

மெலானி, மாதாவின் கட்டளைப்படியே அந்த இரகசியத்தைப் பாப்பரசர் 9 - ம் பத்திநாதருக்கும் மற்றும் அனைவருக்கும் தன்னால் இயன்ற அளவு அறிவித்தாள். இச்செய்தியை திருச்சபைக்கு வெளியில் லுள்ளவர்களல்ல, திருச்சபையில் உள்ளவர்களும் விசேஷமாக திருச்சபை அதிகாரிகளுமே மிக வேகமாய் எதிர்த்தார்கள். இவ்வளவிற்கும் சலேத் மாதாவின் காட்சி திருச்சபையின் முழு அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. அங்கே திரு யாத்திரை செல்கிறவர்களுக்கு ஏராளமான பலன்களும் அளிக்கப்பட்டிருந்தன. சலேத் மலை அமைந்துள்ள கிரனோபிள் மேற்றிராணியாருக்கு 9-ம் பத்திநாதர் பாப்பரசர், காட்சி நடைபெற்ற இடத்தில் ஒரு பெரிய தேவாலயம் எழுப்பக் கட்டளையிட்டார். 13-ம் சிங்கராயர் : அதை "பசிலிக்கா" ஆலயமாக உயர்த்தினார். சலேத் மாதா சுரூபத்திற்கு மகுடமும் சூட்டினார்.

இன்று மரியாயின் மாசற்ற இருதய பரிகாரப் பக்தியை அனுசரிக்கும்படி கேட்கிற பாத்திமா மாதாவின் காட்சிகளையும் செய்திகளையும் சந்தேகித்து பாராமுகம் காட்டுகிறவர்களும் திருச்சபையின் அதிகாரிகளே . ஏன் இவர்கள் மோட்ச செய்திகளை இப்படி எதிர்க்கிறார்கள்? இதற்கு சலேத் காட்சி பெற்ற மெலானியே பதிலளிக்கிறாள் : "தாங்களே சுட்டிக் காட்டப்படுகி றதாகக் கருதும் மேற்றிராணிமார்களே இந்த இரக்கமுள்ள இரகசியத்தின் எதிரிகளாயிருக்கிறார்கள் - நம் இரட்சகரை மரணத்திற்குத் தீர்ப்பிட்ட பெரிய குருக்களைப் போல" என்று அவள் கூறினாள் - (சங். கோம்பே என்ற ஆன்ம வழிகாட்டிக்கு அவள் எழுதிய கடிதம் - 1903).

இந்த இரகசியம் எவ்வளவு எதிர்ப்பைச் சந்தித்தது என்றால், அதை வாசித்தவர்களுக்கு பாவசங்கீர்த் தனத்தில் பாவப் பொறுத்தல் ஆசீர்வாதம் சில குருக்களால் மறுக்கப்பட்டது. மெலானியின் சொந்த மேற்றிராணியாரே அவளை பைத்தியம், நிலையில்லா மனதுடையவள் என்று வைத்தார். மற்ற பலரும் அவ்வாறே செய்தனர். மாக்ஸிமின் ஒரு குடிகாரன் என இகழப் பட்டான். சிலர் சலேத் மலைக் காட்சிகளை ஏற்றார்கள். ஆனால் மெலானியின் இரகசியத்தை மறுத்தார்கள்.

சலேத் இரகசியத்தை பலரும் மறுக்கக் காரணம் தேவ ஊழியர்களைப் பற்றி அதிலே மாதா கூறி யிருக்கும் "கடின" வார்த்தைகள் தான். குருக்களைப் பற்றி தேவ தாய் ஒரு போதும் இப்படி ''கடின" மாகப் பேசமாட்டார்கள் என்பது அவர்கள் கூறும் காரணம். ஆனால் அதற்கு மெலானியே இப்படிப் பதிலளித்தாள் :

"ஞானத்திற்கு இருப்பிடமாகிய மாதா" பலிபீடத்தின் ஊழியர்களைப் பற்றி ஒருபோதும் கேடாகப் பேச வில்லை. கத்தோலிக்க தேவ ஊழியரின் இராக்கினி யாகிய அவர்கள், கடவுளின் ஜனங்களுடைய மேய்ப்பர்களின் ஆத்துமங்களைத் தொற்றியுள்ள நோய் களை இரக்கத்துடன் சுட்டிக் காட்டினார்கள். ஜெபத்தையும் தவத்தையும் மறந்து, கடந்து போகும் காரியங்கள் மீதுள்ள பற்றுதலால் தங்கள் இருதயங்களை நிரப்பியுள்ள அவர்களின் விசுவாசம் குளிர்ந்து விட்டது. அவர்கள் எதிர்ப்பதற்குப் பதிலாக தங்களுக்குள்ளே நுழைந்து தங்கள் விசுவாசத்தையும் தேவசிநேகத்தையும் புதுப்பித்து நமதாண்டவர் சேசுவின் முன் மாதிரிகைப் படி தங்கள் நடத்தையைத் திருத்திக் கொள்ள வேண்டியதே காரியம்..

"ஞானத்திற்கு இருப்பிடமாகிய மாதா பலிபீடத்தின் ஊழியர்களைப் பற்றி ஒருபோதும் கேடாகப் பேசவில்லை. குருக்கள் எதிர்ப்பதற்குப் பதிலாக தங்களுக்குள்ளே நுழைந்து தங்கள் விசுவாசத்தையும் தேவ சிநேகத்தையும் புதுப்பித்து நமதாண்டவர் சேசுவின் முன்மாதிரிகைப்படி தங்கள் நடத்தையைத் திருத்திக் கொள்ள வேண்டியதே காரியம்.''