தொலைக்காட்சியால் வரும் ஆபத்து!

திருச்சபையின் எதிரியானவன் கத்தோலிக்க இல் லங் களில் ஒரு கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதால், இக்காலங்களில் பெற்றோர்களுக்கு ஒரு கடினமான அலுவல் உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உங்களது குழந்தைகளின் ஆன்மாக்களை நரகத்தில் அமிழ்த்த முயற்சிக்கும் சாத்தானைப் பொருத்தவரையில் இது ஒரு உண்மையானப் போர். நாம் விழிப்பாக இருப்போமாக. அந்தோ! உங்களில் சிலர் இந்த விஷயத்தில் இன்னமும் கூட, மிகவும் கவனமில்லாமல் தான் இருக்கிறார்கள்.

இது முக்கியமான காரியமாதலால், நான் உங்களுக்கு ஒரு சிறிய தெளிவான அறிவுரையைத் தருகிறேன். அது என்னவெனில்: முதலில் உங்கள் வீட்டிலுள்ள டி.வி. பெட்டியை வெளியே வீசியெறியுங்கள்.

அநேகப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எப் பொ ழு தெல் லாம் விரும்புகிறார்களோ, அப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்குப் பல மணி நேரங்களானாலும் எந்தவிதக் கட்டுபாடும் இல்லாமல், டி.வி. பார்க்க அனுமதிக்கிறார்கள். அதில் உண்மையாகவே (கற்புக்கெதிரான, தீவிரவாதத்தைத் துாண்டுகிற, உலகத்தன்மையான) கெட்ட ஆபத்தான நிகழ்ச்சிகள் உள்ளன. இதற்குச் சற்றும் குறையாத தீமைகள் பயக்கும் மற்றொரு ஆபத்தும் கூட உள்ளது!

ஜாண் சீனியர் என்பவர், “கிறீஸ் தவக் கலாச்சாரத்தை மீண்டும் ஏற்படுத்துதல்” என்ற தனது அருமையான நுாலில் டி.வி. பார்ப்பதனால் ஏற்படும் இரண்டு தீமைகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று உடல் மட்டும் மனரீதியான அசமந்த நிலையை ஏற்படுத்தும் ஆபத்து, மற்றொன்று உண்மையான யதார்த்த நிலையை மறைத்து, திரித்துக் காட்டி கற்பனையில் வாழும் நிலையை உருவாக்குவதாகும். டி.வி. ஆனது மெல்ல, மெல்ல மனிதர்களின் மனங்களைக் கட்டுப்படுத்தும் போதை மருந்தைப் போன்று, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மந்தப்புத்தி உள்ளவர்களாகவும், சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாகவும் மாற்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சங். ஓ கென்னல் சுவாமி என்பவர் சற்று நகைச்சுவையாக "மகுடியின் முன்பாக மயங்கும் பாம்பை” போல் மனிதர்களைத் தன்வயப்படுத்தி, மனித மாண்பையே உதரச்செய்து பலமணி நேரங்கள் தம்முன் பசைபோல் ஒட்டி, அமர்த்தி வைத்து விடுகிறது. அவர்கள் வசியம் செய்யப்பட்ட முயல் போல் அசைவற்றுக் கிடக்கிறார்கள் என்று கூறுகிறார். சிறுவர்களை, முகாம்களிலோ அல்லது வேறு அலுவல் நேரத்திலோ பார்க்கும் போது, பார்த்த மாத்திரத்தில் ஒரு குருவானவரான என்னால், யார் அதிகம் டி.வி. பார்ப்பார்கள் அல்லது மாட்டார்கள் என்று உடனடியாகக் கூறிவிட முடியும்.

டி.வி. பார்க்கும் குழந்தைகள் தவறான குணாதிசயங்களை வெளிப்படுத்துவார்கள். எதிலும் கவனம் செலுத்த சிரமப்படும் அவர்களுக்கு வேடிக்கை பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் எந்த காரியத்திலும் சலிப்படைந்து விடுவார்கள். எந்தவிதமானப் புது சிந்தனைகளுக்கும் ஆர்வம் காட்டாதவர்களாகவும், அதைவிட மிகவும் மோசமாக, ஜெபிக்கவும், தியானிக்கவும் விருப்பம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இந்தப் பிரசங்கத்தை இன்னும் நீடிக்க நான் விரும்பவில்லையானதால், ஒரு சில கருத்துக்களை மட்டும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். மேற்கத்திய ஆபாச ராக் இசை உங்கள் இல்லங்களில் தடை செய்யப்பட வேண்டியதொன்று. நமதாண்டவர் வேண்டுமா அல்லது சாத்தான் வேண்டுமா? என்பதை நீங்கள் தெரிவு செய்து கொள்ளுங்கள். இரண்டும் வேண்டுமென்றோ, நடுநிலையில் உள்ளேன் என்றோ இருக்க முடியாது. அர்ச். இஞ்ஞாசியார் தமது "ஞானபயிற்சிகளில்” குறிப்பிடுவது போல, 2 குழுக்கள், 2 படைகள், 2 கொடிகள் தான் உள்ளன.

ராக் இசைகள் போன்றவை நிச்சயம் பசாசின் முகாமைச் சேர்ந்தவையே. எந்த ஒரு பொருளைப்பற்றிய புத்தகத்தை வாசித்தாலும், அதன் கருத்துக்கள் உங்களை நிச்சயம் பாதிக்கும். அதன் கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையதாகி விடும் என்பது நிச்சயம். எனவே யதார்த்தமாக இருங்கள்.

ஒரு தடவை ஒரு பாரம்பரிய கத்தோலிக்கக் குடும்பத்தினரோடு தங்கியிருந்தது நினைவுக்கு வருகிறது. நான் தங்குவதற்கு தங்களது 15 வயது மகனின் படுக்கை அறையை ஒதுக்கியிருந்தார்கள். அங்கே சுவரில் ஒரு அழகிய சேசுவின் திருஇருதயப் படம் மாட்டப்பட்டிருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பிறகு அப்படியே அங்கேயிருந்த அலமாரியின் மீது நிறைய கேசட்டுகள் அடுக்கப்பட்டிருந்தது கண்டு சற்று மேலோட்டமாகப் பார்த்தேன். அதில் “நரகம் ஒன்றும் தீய இடமில்லை ” என்ற பிரபல்யமான பாடல்கள் அடங்கிய AC/DC நாடாக்கள் கேசட்டைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். இது ஒரு கத்தோலிக்க இல்லத்தில் என்ன இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

இதே போன்று புத்தகங்கள் விஷயத்திலும் உள்ளது. மற்றொரு தடவை வேறொரு குடும்பத்தைச் சந்திக்கப் போயிருந்தேன். அவ்வீட்டிலுள்ள ஒரு பிள்ளையின் அறைக்குள் சென்றேன். அங்குள்ள புத்தக அலமாரியில் ஜனரஞ்சகமான காதல் கதைகள் அடங்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. அத்தகையப் புத்தகங்கள் நமது பெண்பிள்ளைகளின் மனதைப் பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை . உங்கள் வசம் கொடுக்கப்பட்ட விலைமதிப்பில்லாத ஆன்மாக்களை நல்லவர்களாக, விசுவாசமுள்ளவர்களாக, ஆன்ம அழகுள்ளவர்களாக எல்லாம் வல்ல சர்வேசுரனிடம் ஒப்படைப்பது உங்கள் கடமையாகும். அதனால் மீண்டும் கூறுகிறேன், நீங்கள் நன்மாதிரி காட்ட மறவாதீர்கள்.