தந்தையர்களே, நீங்கள் உங்கள் வார ஓய்வுநாளை நல்ல புத்தகங்களை வாசிப்பதில் செலவிடாமல் நாள் முழுவதும் டி.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதில் கழித்தால், உங்கள் மகன்கள் நல்ல புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். தாய்மார்களே, உங்கள் பெண் மக்கள் நீங்கள் ஜனரஞ்சமான பெண்கள் வார, மாத பத்திரிகைகளை வாசிக்க ஆர்வம் கொண்டிருக்கக் காண்பார்களேயானால், உங்கள் மகள்கள் நல்ல கத்தோலிக்கக் கதைப் புத்தகங்களைப் படிக்க ஆர்வம் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நாம் நமக்குரிய மதிப்போடு இருந்து கொள்வோமாக! சிறந்த நல்லொழுக்கச் சட்டத்தை அனுசரிக்கும் கத். குடும்பம், நமதாண்டவரும், மாதாவும் விரும்பாத எதையும் தமது இல்லத்தில் அனுமதிக்காது.
இவ்வுரையை நிறைவு செய்வதற்கு முன்பாக, நான் எளிமையின் அவசியம் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இந்த நவீன உலகம் தம்மையே தவறான மதிப்பீடுகளில் கறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. எப்படியெனில், நாம் நமது வீடுகளில் நமது வாழ்வை வசதியாக்கும், மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இயந்திரங்களையும், சாதனங்களையும் வாங்கி நிரப்புகிறோம். இது மட்டுமே, மனிதனின் உண்மையான இலக்கு - நோக்கம் அல்ல. மைக்ரோவோவன் அடுப்பையும், கம்ப்யூட்டர்களையும் ஆராதிப்பதற்காக நம்மை நமதாண்டவர் படைக்கவுமில்லை, தமது விலைமதிப்பில் லாத திரு இரத்தத்தால் இரட்சிக்கவுமில்லை.
இத்தகைய நவீன சாதனங்களை பயன்படுத்தலாம். ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும். அவற்றிற்கு அடிமையாகாமல், அவற்றின் மீது அளவுக்கு அதிகமாக பற்றுக் கொண்டவர்களாக இருக்கக் கூடாது. அர்ச். சின்னபர் கூறுவது போல, “உலகப் பொருட்களை பயன்படுத்தாதவர்களைப் போல், அவற்றைப் பயன்படுத்த வேண்டும். சிறிய எளிய பொருட்களை விரும்புவோ மாக. வறுமை உணர்வை எப்போதும் மனதில் கொள்வோமாக. ஒரு சில குடும்பங்கள் தேவ அழைத்தலைப் பெற்றுக்கொள்வதைக் காணும் போது: இந்த இல்லத்தின் இயல்பு என்ன?
என்று அடிக்கடி எனக்குள்ளே கேட்டுக் கொள்வேன். அங்கே தயாளமான தியாக உணர்வு, எண்ணம் முக்கிய இயல்பாக இருப்பதைக் கண்டு பிடித்தேன். அங்கே, பிள்ளைகள் தங்கள் அயலாருக்கு உதவி செய்ய, தங்கள் தேவைகளை மறக்கக் கற்றுக் கொடுக்கப்படு கிறார்கள். (உதாரணமாக: அவ்வப் போது நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் தருவதிலும், ஏழைகளு க் கு உ த வு வ தி லு ம பிள் ளைகள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்). வாழ்வின் மகிழ்ச்சி சர்வேசுரனை மகிழ்விப்பதிலும், அவருக்காகக் காரியங்களை ஆற்றுவதிலும் அடங்கியுள்ளது என்பதைப் பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் எண்பிக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்களின் குழந்தைகள் தான் பெரியவர்களாக வளரும் போது, “துறவற அழைத்தல்" பற்றிய எண்ணமும், ஆவலும் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். அந்த அழைப்பை ஏற்றுச் செயல் படுத்துவதில் எந்தப் பிரச் சினையும் ஏற்படுவதில்லை. தேவ அழைத்தலின் சாராம்சமே தன்னையே கடவுளுக்குக் காணிக்கையாக வழங்குவது தான். உலகத்தன்மை வசதிகளை அனுபவிக்கும் எண்ணம் ஆகியவைகளுக்குப் பதிலாக, தயாளம், தியாகம் ஆகியவைகள் கற்றுக் கொடுக்கப்படும் இல்லத்தில் தேவ அழைத்தல்கள் மிக எளிதாக வளரும்.
அன்பான பெற்றோர்களே! மனம் தளர்ந்து போகாதீர்கள். ஆம், ஒரு உத்தம கத். இல்லத்தை ஏற்படுத்துவது என்பது கடினமானக் காரியமே. ஆனால், அது மிகுந்த மகிழ்ச்சியும், ஆறுதலையும் கொண்ட ஒரு அழகான அருமையான அழைத்தல். பாத்திமா காட்சி பெற்ற சகோதரி லூசியா: " மரியாயின் மாசற்ற இருதயம், குறிப்பாக மிகுந்த கடினமான துன்ப வேளைகளில் எனது அடைக்கலமாக இருக்கிறது. ஆகையால் நான் எப்பொழுதுமே பாதுகாப்பாக இருக்கிறேன்.
மரியாயின் மாசற்ற இருதயம், தமது ஒவ்வொரு பிள்ளைகளையும் எப்போதும் கவனித்துப் பாதுகாக்கின்ற மிகச் சிறந்த அன்னையின் இருதயமாக இருக்கிறது. இந்த எண்ணம் உண்மையாகவே என்னை எவ்வளவு உற்சாகப்படுத்துகிறது, திடமளிக்கிறது தெரியுமா? மரியாயின் மாசற்ற இருதயத்திடம் நான் திடத்தையும், ஆறுதலையும் கண்டடைகிறேன். இந்த மாசற்ற இருதயமே, சர்வேசுரனின் அளவற்ற வரப்பிரசாதங்களை எனது ஆன்மாவில் பொழியும் வாய்க்காலாக இருக்கிறது” என்று கூறியுள்ளாள . எனவே, நாம் நமது குடும்பங்களை இந்த அன்புள்ள நமது மோட்ச அன்னையின் அன்பான மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிப்போமாக.
நமதன்னை அவர்களது தெய்வீக குமாரன் சேசு நமது இல்லங்களில அறியப்படவும், நேசிக்கப்படவும், ஊழியம் செய்யப்படவும் வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்களே நம்மைக் கவனித்துக் கொள்வார்கள். நமது நித்திய மோட்ச வீட்டிற்கு வழிநடத்திச் செல்வார்கள். ஆமென்
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
குடும்பங்களில் தேவஅழைத்தல்கள்!
Posted by
Christopher