நல்ல பெற்றோராக இருப்பது எப்படி?

தக்காலத்தில் நல்ல பெற்றோராக இருப்பது எளிதான தல்ல. தவறும் மனித சுபாவமானது, அடங்கி பணிந்திருப்பதை எதிர்க்கும் தன்மை கொண்டதால் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிவதில்லை. ஆகையால்தான் பெற்றோருக்கு மிக கடுமை யான கடமைகளுண்டு என்று கூறுகிறேன்.)

தங்கள் பிள்ளைகள் மட்டில் பெற்றோருக்கு இருக்கும் பொறுப்புக்களை விவரிக்கும் அம்சங்களைப் பற்றி பார்ப்பது நல்லது. சர்வேசுரனுடைய கற்பனைகளில் நாலாவது கற்பனை: “உன் பிதாவையும் மாதாவையும் சங்கித் திருப் பாயாக" என்பதாகும். இந்தக் கட்டளையானது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மட்டில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை உள்ளடக்கியுள்ளது. இந்தக் கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்ற பெற்றோர்கள் முதலில் அவைகளின் அம்சங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவைகளைப் பற்றி அடிக்கடி சிந்திக்க வேண்டும். அந்த அம்சங்களை கீழ் வருமாறு காண்போம்:

(1) பெற்றோர்கள் கொண்டுள்ள அதிகாரம் சர்வேசுர னுடைய அதிகாரமாகும். அதனைக் கொண்டு அவர்கள் தங்கள் குழந்தைகளை முதலில் மோட்சத்தை நோக்கியும், இரண்டாவது இவ்வுலகில் பயனுள்ள மகிழ்ச்சியான புண்ணிய வாழ்வை மேற் கொள்ளவும் வழிநடத்த வேண்டும்.
(2) பெற்றோருடைய அதிகாரம், அன்பை வெளிப் படுத் தும் படியாகவும் அதனையே அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது பயனுள்ளதாக இருக்காது. சர்வேசுரன் மனிதர்கள் அன்பற்றவர்களாக இருக்க வேண்டுமென்று ஒருபோதும் கட்டளையிட்டதில்லை. ஆனால் சர்வேசுரன், மனிதர்கள் மீது தாம் கொண்டிருக்கும் அளவற்ற அன்பை, சிநேகத்தை வெளிக்காட்டுகிறார். இத்தகைய சிநேகமே அவரைச் சிலுவையில் மரிக்கத் தூண்டியது.

பெற்றோர்களின் அன்பு வெளிப்படையாக இருக்க வேண்டும். அதனால் தங்களைக் கண்டிக்கும் அதே பெற் றோர் தங் களை முழு இருதயத்தோடு சிநேகிக்கிறார்கள் என்பதை குழந்தைகள் காண்பார்கள். பெற்றோர்களின் அன்பு தியாகத்தின் மூலமாகவும், தங்கள் குழந்தைகளின் மனித இயல்பை மதிப்பதிலும், தோழமைக் கொள்வதிலும் வெளிப்பட வேண்டும். மேலும் அவர்களது கல்வி, வேலை, விளையாட்டு மற்றும் ஞான வாழ்வில் அவர்களது முன் னேற்றம் ஆகியவற்றில் அக்கறைக் கொள்வதிலும் பெற்றோர்களின் அன்பு வெளியாக வேண்டும்.

(3) பெற்றோர்களின் அதிகாரம் அவர்களது நன்மாதிரிகை யால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஞானம் மற்றும் நல்லொ ழுக்கக் காரியங்களில் எல்லாவற்றிலும் பெற்றோர்களின் முன் மாதிரிகையே குழந்தைகளுக்கு முதல் போதகமாக இருக்க வேண்டும்; நன் மாதிரிகை இல்லையெனில், கூறும் விளக்கங்களோ, கடைப் பிடிக்கச் சொன் னக் கட்டளைகளோ, செய்யக் கூடாது என்று விதித்தத் தடைகளோ, திருத்தங்களோ எவ்வித பயனையும் விளைவிக்காது.

(4) பெற்றோர்களுடைய அதிகாரம் அவர்களது குழந்தைகளின் குணம், வயது, ஆண் பெண் வேறுபாடுகளின் படி வெவ் வேறான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வித்தியாச மான மனித ஆளுமைத்தன்மையையும், அதனுடைய தனிப்பட்ட குணங்களையும், பாலியல்புக்கு ஏற்ப பண்புகளையும் கொண் டுள்ளது. அது மேலும் மேலும் முதிர்ச்சியை நோக்கி வளர வித்தியாசமான வழிநடத்துதல் தேவை. எல்லாக் குழந்தைகளின் தேவைகளில் அடிப்படையானது என்னவெனில், அவர்களது இளம் பிராயத்திலேயே பெற்றோர்களின் அதிகாரத்தை மதிக்கப் பயிற்சி விப்பதேயாகும். தங்கள் குழந்தைகளை, அவர்களது சிறு வயதி லேயே அவர்கள் விரும்புவது போல் நடக்க அனுமதிக்கும் பெற்றோர்கள் பின்னாளில் அவர்கள் வளர்ந்த பின்பு கீழ்ப்படிதலை எதிர்பார்க்க போவதில்லை. பிள்ளைகளை இளம் பருவத்திலேயே திருத்தாவிட்டால் அவர்கள் வளர்ந்து வாலிபராகிவிட்ட பிறகு பெற்றோர்கள் அவர்களை, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நல்லது செய்யவோ அல்லது தீமையிலிருந்து காப்பாற்ற முயல் வதோ பயனற்றதாகும்.

அதே சமயம் ஒவ்வொரு குழந்தையிடமும் அதனின் தனிப்பட்ட ஆண் அல்லது பெண் பாலினத்திற்கேற்ப பெற்றோர்களின் அணுகு முறை அமைய வேண்டும். தகப்பன் மகளை வழிநடத்து வதைப் போன்று மகன்களையும் வழிநடத்த முடியாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். தாய்மார்களும் ஒரு மகனின் குணத்தைத் திருத்த முயலும், அதே முறையில் மகளையும் திருத்த முயற்சிப்பதில எச்சரிக்கையாக இருப்பார்களாக. பெற்றோர் இருவரும் தங்களது பிள்ளைகளின் தனிப்பட்ட மனநிலைகளை அறிந்து, அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும்.

அசமந்தமும், பயமும், ஆர்வமுமற்ற குழந்தைக்கு உற்சாகமும், சுயநம்பிக்கையும் தேவையென்பதையும்; குறும்புத்தனமான பிள்ளைகளுக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு மற் றும் அடிக்கடி திருத்துதல் போன் றவை தேவையென்பதையும் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். புத்திசாலித்தனமான சுட்டிப்பிள்ளைகளாக இருந்தால் புகழ்ச்சியையும், அதே நேரத்தில் தாழ்ச்சியையும் கற்பிக்க வேண்டும். மந்தப்புத்தியுள்ள பிள்ளைகளாக இருந்தால் பொறுமை யோடு திருத்துதல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களை மாற்ற முயல வேண்டும். இவையெல்லாம் இருந் தாலும் கூட, பெற் றோர்களை மதிக்க சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்கப் படாவிட்டால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை