இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற காட்சி பாத்திமா!

ஆனால் பாத்திமா செய்திகளும், மாதாவின் எச்சரிப்பும் கண்டுகொள்ளப்படவுமில்லை.. வலியுறுத்தப்படவுமில்லை.. என்பது மறுக்க முடியா உண்மை...

இருபதாம் நூன்றாண்டில் தேவ மாதா பூலோகத்திற்கு வந்து பாத்திமாவில் மூன்று சிறுவர்களுக்கு காட்சி கொடுத்து கடவுள் மனுமக்களின் பாவங்களால் நொந்து போய் இருக்கிறார். அவர் அதிகமாக் துயரப்படுகிறார். பாவிகள் மனம் திரும்ப ஜெபமாலை சொல்லுங்கள்.. பாவிகளுக்காக உங்களை பலியாக்குங்கள்… ஆண்டவர் கொடுக்கும் துன்பங்களை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.. பரிகாரங்கள் அதிகமாக தேவை என்று சொன்னார்கள்.. மேலும் மாதாவும், பாத்திமா சிறுவர்களை தயாரிக்க ஓரு வருடத்திற்கு முன்னதாக அனுப்பப்பட்ட வானதூதர் ( மிக்கேல் அதிதூதர்) வலியுறுத்திய முக்கியமான விசயம்

“ திவ்ய நற்கருணை நாதருக்கு நிறைய அவசங்கைகள் செய்யப்படுகின்றன. அதற்காகவும் நிறைய பரிகாரங்கள் தேவை. மேலும் அவர் அதிகமாக நேசிக்கப்பட வேண்டும்… அவருக்கு உரிய ஆராதனை செய்யப்படவேண்டும்..”

ஆக பாத்திமா காட்சியின் சாராம்சம் :

1. திவ்ய நற்கருணை நாதருக்கு நிந்தை, துரோகம், அலட்சியம் செய்யப்படுகிறது அதிலும் குறிப்பாக நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாய் திவ்ய நற்கருணையில் ஆண்டவர் ( தூய தமத்திருத்துவம்) அவசங்கைப் படுத்தப்படுகிறார்.. அவருக்கு நிறைய பரிகாரமும், ஆராதனையும் தேவை..

2. உலகில் பாவங்கள் அதிகமானதால் சர்வேசுவரன் மிகவும் அதிகமாக நொந்து போயிருக்கிறார்; துயரப்படுகிறார்.. நிறைய ஆன்மாக்கள் நரகரத்திற்கு செல்கிறார்கள் அதனால் கடவுள் அனுப்பும் துன்பங்களை ஏற்கும் பலி ஆன்மாக்கள் தேவை.. ஜெப தவ பரிகாரங்கள் தேவை..

3. பாவிகள் மனம் திரும்பவும், உலக சமாதானத்திற்காகவும் தினந்தோறும் ஜெபமாலை ஜெபிக்க சொன்னார்கள்..

4. பாத்திமா மாதா யார்? அவர்கள்தான் ஜெபமாலை மாதா..

5. ஜெபமாலை ஜெபிக்க மக்கள் வலியுறுத்தப்பட்டார்களா? முக்கியமாக குடும்ப ஜெபமாலை குறித்து யார் பாதிக்க வேண்டுமோ அவர்கள் எடுத்துக் கூறினார்களா?
ஜெபமாலை பக்தியை ஊக்குவித்தார்களா?

6. கடைசி காட்சியில் முக்கியமானது வியாகுல மாதா காட்சி மற்றும் கார்மேல் மாதா அதாவது உத்தரிய மாதா.. உத்தரியத்தை மக்களுக்கு அணிவிக்க எத்தனை பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.. “ உத்தரியம் அணிபவர்களுக்கு நரகம் இல்லை “ என்று மாதாவின் வாக்குறுதி இருக்கும்போதும்..

7. மாதாவின் மாசற்ற இருதயபக்தி உலகில் ஏற்படுத்தப்பட சர்வேசுவரன் விரும்புகிறார் என்றார்கள்.. அது நிறைவேற்றப்பட்டதா? (மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நம்மை முற்றிலும் அர்ப்பணித்தல், அதன் அடையாளமாக உத்தரியம் அணிதல்.. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபித்தல்..)

8. முதல் சனி, பரிகார நன்மை இதையும் மாதா கடைபிடிக்க கேட்டார்கள். இப்படி ஒரு பக்தி முயற்சி இருப்பது எத்தனை பேருக்குத் தெறியும்? அதை வலியுறுத்தி அவற்றை கடைபிடிக்க மக்களைத் தூண்டினார்களா?

9. ஓரு சிலர் ஜெபமாலை பக்தி, உத்தரிய பக்தி, முதல் சனி பக்தி செய்துவருகிறார்கள் ஆனால்.. மற்ற 90 சதவீதம் பேர்அவற்றை கண்டுகொள்ளவில்லை.. அல்லது அதற்காக மெனக்கெடவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை..

10. உலக ஆயர்களோடு ரஷ்யாவை மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

11. நவீனம் கூடாது; சர்வேசுவரன் மாற்றம் அடைவதில்லை.. நாகரீக பாணிகளை சர்வேசுவரனுக்கு ஊழியம் செய்பவர்கள் கடைபிடிக்கக்கூடாது… நாம் என்ன செய்தோம்??

இப்போது நாம் மூன்றாம் உலகப்போரில் (கொரோனா) இருக்கிறோம்.. இப்போதாவது இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற காட்சியான பாத்திமா காட்சிகளையும், மாதா கடைபிடிக்க வேண்டி நம்மை கேட்டுக்கொண்ட விஷயங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து அதை வலியுறுத்தி கடைப்பிடிக்க வைத்தால் உலகம் காப்பாற்றப்படும்…

அது செய்யப்படவில்லை என்றால் கண்டிப்பாக நாம் நான்காம் உலகப்போர் வராது.. அதுவரை உலகம் இருந்தால்தானே நான்காம் உலகப்போர் வரும்..

ஊரடங்கிற்குப்பின் ஆலயம் அனைத்து மக்களுக்காகவும் திறக்கப்பட்டு முன்போல் திருப்பலி நிறைவேற்றப்படும் சூழ்நிலை வரும்போது நாம் ரொம்பவே கவனமாகவும், பக்தியோடும், பயத்தோடும் திருப்பலியில் பங்கேற்க வேண்டும்...
'பழைய குருடி கதவைத் திறடி ' என்று இருந்தால் நிலமை இன்னும் மோசமாகும்...

குறிப்பு : மாதாவின் பாத்திமா செய்திகள் மிக.. மிக… மிக.. முக்கியம்.. உடனடியாக அதன் எல்லா அம்சங்களும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !