மிகவும் கவனித்து படிக்க வேண்டிய வேதாகம இறை வார்த்தைகள்!

2000  ஆண்டுகளுக்கு முன்பே இப்படி என்றால் இப்போது கேட்கவே செய்ய வேண்டும்... ஆனாலும் நம்மவர்கள் திருந்துவதாக இல்லை....

" கிறிஸ்துவின் அருளால் உங்களை அழைத்தவரை விட்டு விட்டு, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறொரு நற்செய்தியைப் பின்பற்றப் போய்விட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.

வேறொரு நற்செய்தி இருக்கிறது என்பதன்று: உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்திகளைத் திரிக்க விரும்பும் சிலர் உள்ளதுதான் தொல்லை.

ஆனால், நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்றும் வேறான ஒன்றை, நாங்களோ, விண்ணிலிருந்து வந்த ஒரு தூதரோ, யார் வந்து அறிவித்தாலும், அவன் சபிக்கப்படுக!

ஏற்கனவே சொல்லியிருக்கிறோம், இப்பொழுது திரும்பவும் சொல்லுகிறேன்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தினின்று வேறானதொன்றை எவனாவது உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்படுக!

கலாத்தியர் 1 : 6-9

மேலும் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தைப் பாருங்கள்...

" ஏனெனில், எவனாவது வந்து நாங்கள் அறிவிக்காத வேறொரு இயேசுவை அறிவிக்கும்போது அல்லது நீங்கள் பெற்றிருக்கும் ஆவியானவரைத் தவிர வேறோர் ஆவியைப் பெற்றுக்கொள்ளச் செய்யும்போது அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்திக்கு ஒவ்வாத வேறொரு நற்செய்தியைக் கொணரும்போது, அவனை எளிதில் பொறுத்துக் கொள்ளுகிறீர்களே:

அதே அதிகாரத்தில் மேலும்..

"தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்ளும் அப்போஸ்தலப் பணியில் எங்களுக்கு நிகராய்த் தென்படச் சிலர் வாய்ப்புத் தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்து செய்து வருவேன்.

இத்தைகையோர் போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக நடிக்கிறவர்கள்.

இதில் ஒரு வியப்புமில்லை: சாத்தான் கூட ஒளியின் தூதனாக நடிக்கிறான்.

ஆகையால் அவனுடைய பணியாளர் நீதியின் பணியாளராக நடிப்பது பெரிதா? அவர்களுடைய முடிவு அவர்களின் செயல்களுக்கேற்றதாகவே இருக்கும்.

2 கொரி 11 : 4-5,12-15

சிந்தனை : திருச்சபை ஏற்கனவே அறிவித்த ஒன்றை மாற்ற திருச்சபைக்கே அதிகாரம் இல்லாதபோது.. ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு திரித்துப் பொருள் கூறும் பிரிவினை சபையினரின் விளக்கங்களை காது கொடுத்து கேட்டு அவர்கள் பின்னால் சென்று நம் தாய்த்திருச்சபையை விட்டு வெளியேறும் நம்மவர்களை என்னவென்று சொல்வது...

திருச்சபை சொல்வது புரிகிறதோ இல்லையோ அதை அப்படியே விசுவசிக்க வேண்டும்.. பைபிளில் சில வசனங்கள் புரிகிறதோ இல்லையோ.. திருச்சபை சொல்வதை விசுவசிக்க வேண்டும்..

அன்பையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டு, மற்றவர் சொல்வது சரியென்று இப்போது தோன்றி அறிவு சார்பாக சரியாக செல்வதாக நினைத்தால்.. நாளை ஒரு கட்டத்தில் அதுதான் அடிமுட்டாள்தனத்தை விட கீழான செயலாக இருக்கும் என்று புரியவரும்...

ஒரு உதாரணம் : கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசத்தை மறுதலித்து... பாட்டுபாடி புகழின் உச்சிக்கு சென்றவர் என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்... அது அவரை சுற்றி இருப்பவர்களுக்கே வெளிச்சம்...

என்ன சொல்லி என்ன கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வோர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...

குறிப்பு : மேலே உள்ள இறைவார்த்தைகள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைப்பது என்னவென்றால் டூப்ளிகேட் இயேசு.. டூப்ளிகேட் பரிசுத்த ஆவி இருக்கிறது என்பது நிதர்சனம்.. அவர்கள் யார் என்பதற்கு விடையும் அதிலே இருக்கிறது... தப்பிப்பிழைக்க விரும்புவர் தப்பித்துக்கொள்க..

இயேசுவுக்கே புகழ்!  மரியாயே வாழ்க!