பெற்றோருக்குரிய கடமை என்ன?

குழந்தைகள் இளம் பருவத்தினராக வளர்வதற்கேற்ப பெற்றோர்களின் அணுகுமுறை இருக்க வேண்டும். அதிகாரம் கண்டிப்பான கட்டளையாக இருப்பதை விட, அன்பான ஆலோசனைகளாக திகழ்வது அவசியம். அநேக பெற்றோர் தாங்கள் விரும்பும் ஒரு காரியத்தைச் செய்ய, தங்களது 15 வயது மகளை, 5 வயது சிறுவனைப் போலப் பாவித்துக் கட்டளையிடுகிறார்கள்.

(5) தாய், தந்தையின் அதிகாரம் பரஸ்பரம் பிரயோகிக்கப்பட வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் அதிகாரம் அவர்களது இயல் புகளுக் கும், தன்மைகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டும். பெற்றோர்களின் அதிகாரத்தின் பரஸ்பர பிரயோகம் என் பது, பிள் ளைகளை வழி நடத்துவதிலும், திருத்துவதிலும், கண்டிப்பதிலும், முடிவெடுப்பதிலும் அவரவர் பங்கினை ஆற்றுவதாகும். ஒருவருடைய அதிகாரத்தை கைநெகிழ்வதோ அல்லது மற்றவருக்கு கொடுத்து விடுவதோ அல்ல, மாறாக தங்களது இயல்பான சுபாவத்தின்படி நடந்து கொள்வதாகும்

* தகப்பன் கடுமையையும் நீதியையும், தாய் இரக்கத்தையும் கருணையையும் காட்டி தங்கள் பிள்ளைகளை வழிநடத்த வேண்டும். ஆனாலும் முடிவெடுப்பதில் இருவரும் ஒருமித்திருக்க வேண்டும். இதனை பிள்ளைகள் அறியும்படி செய்யவேண்டும். அதற்கேற்ப பெற்றோர் இருவரின் தீர்மானங்கள் ஒருவர் மற்றவருடையதை ஆதரித்து தாங்குவதாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

(6) கிறீஸ்தவ பெற்றோரின் அதிகாரம், உண்மையின் எதார்த்தங்களைக் கொண்டதாக செலுத்தப்பட வேண்டும். குழந்தைகளின் தவறான, ஆபத்தான தீய நடத்தைகள் இன்று பல பெற்றோர்களால் பொறுத்துக்கொள்ளப்படுகிறது - கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது. அது தவறு. பெற்றோர் இருவரும் சேர்ந்து அவைகளை கண்டித்து திருத்த வேண்டும். "பிற பெற்றோர்கள் இத்தகைய காரணங்களை அனுமதிக்கிறார்கள் ஆனால் ஏன், என் பெற்றோர் மட்டும் மறுக்கிறார்கள்?” என்ற தங்களது பிள்ளைகளின் முறைப்பாடுகளை நல்ல பெற்றோர் தக்க வகையில் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்களது சொந்த அறிவையும் , அனுபவத்தையும் பயன்படுத்தி எந்த காரியம் நல்லது, எது தீமையானது என்பதை உணர்ந்து, நல்லவற்றைக் கொள்ளவும், தீயவற்றை விட்டுவிலகும்படிச் செய்யவும், நற் புண்ணியங் களை எடுத்துக் கூறி அனுசரிக்க அறி வுறு த் தி தீ துாண் ட வேண் டும். சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:

(1) வீட்டுக்கு வெளியேயான பொழுதுபோக்கு:

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தங்கள் பொழுது போக்குக்காக எங்கே செல்கிறார்கள் - யாருடன் செல்கிறார்கள் - எவ்வளவு நேரத்தை வெளியே செலவிடுகிறார்கள் - எவ்வளவு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப அறிவுரைக் கூறி திருத்த வேண்டும்.

2) வீட்டில் பொழுதுபோக்கு:

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நண்பர்களை தங்கள் இல்லத்திற்கு வரவேற்க வேண்டும். ஏனெனில் தங்கள் பிள்ளைகள் பழகும் நண்பர்களைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். இடையிடையே பெற் றோரும் , அவர்களது பொழுதுபோக்குகளில் சேர்ந்து கொள்வது நன்று.

(3) பாலுணர்வு பற்றிய போதனை:

பெற்றோர்களின் முதன்மையான பொறுப்பு என்னவெனில், தங்களது வளரும் இளம்பிராயத்துப் பிள்ளைகளுக்கு பாலுணர்வு (Sex) பற்றிய அடிப்படையான தகவல்களை கண்ணியமான முறையில் கற்பிப்பதுமல்லாமல், அந்த விஷயத்தில் அவர்களுக்கு எழும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு நல்ல முறையில் புத்தமதி கூறி அவர்களைத் தயாரிப்பதுமாகும். (காண்க: Catechese Catholique du mariage. No.307)

மேற்கூறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய தங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். பின்பு எது, தங்கள் பிள்ளைகளின் நித்திய மற்றும் இவ்வுலக வாழ் வுக் கு சிறந்தது என் பதை உணர்ந்து வழிநடத்துவார்களாக!

பிள்ளைகள் குற்றம் செய்தால், பெற்றோருக்குரிய கடமை என்ன ?

''பிள்ளைகள் ஜெபம் செய்யாதிருந்தாலோ, ஞாயிறு பூசை காணத்தவறினாலோ, கெட்ட வார்த்தை சொன்னாலோ, திருடினாலோ, வேலைகளை சரியாக நிறைவேற்றாது போனாலோ, கொடுத்த கட்டளைக்கு கீழ்படியாதிருந்தாலோ, வேறு எந்தக் குற்றங்களை செய்தாலும் அவர்களைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் தாய் தகப்பனுக்கு கண்டிப்பான கடமை உண்டு.

சிறுவனைக் கண்டிக்க மறக்காதே. அவனை நீ பிரம்பால் அடித்தாலும் சாகமாட்டான். நீ அவனை பிரம்பால் அடிப்பாய், அவன் ஆன்மாவையும் நரகத்தினின்று இரட்சிப்பாய்.'' (பழமொழி 2 3 : 13 -14) "சிருவனின் இருதயத்தில் மதியீனம் கட்டப்பட்டிருக்கிறது; போதக்கோலும் ஓட்டிவிடும்.” (பழமொழி 22 : 15) "தன் குமாரனை நேசிக்கிறவன் ... அவனை அடிக்கடித் தண்டிக்கக் கடவான்.” (சர்வபிரசங்கி 2 3 : 1)
- ஞானோபதேசக் கோர்வை