தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச்சரிதை - பாகம் 2

இவர்கள் மெய்ம் மறையைத் தழுவ ஆரம்பித்த காலம் கி.பி. 1534ம் வருஷ முதலென்க. அப்பால், ஆசாரத்திலும் அநுஷ்டானத்திலும், பக்தி வைரா க்கியம் மிக்குடையவர்களாகிய பரத குலத்தவரிடை தெய்வாதீனமாய் ஊன்றப்பட்டுவிட்டதாகிய மெஞ் ஞான வித்து நல்ல பலனைத் தரும்படி முயன்றவர்களுள் முதற்கண் வைத்தெண்ணத் தகுந்தவர் சிந்து தேச அப்போஸ்தலராய் விளங்கிய அர்ச். பிராஞ்சீஸ்கு சவேரியா ரென்பல் சடையில்லை இவரது கடினப்பிரயாசையே அக்காலத்திற் பாத குலத்தவரது மனதை அலைத்துக்கொண்டிருந்த காய பழக்கவாசனை யென் னும் வேதாளத்தை விரட்டியடித்து, ஒழுக்கத்தைத் தலைக்கொண்ட கிறீஸ்துவேதத்தில் ஸ்திர புத்தி யுடனிருந்து வரவு மேதுவாயிற்றென்பது மறுக்கமுடி யாத உண்மை : 

அர்ச்: பிராஞ்சீஸ்கு சவேரியாரது ஜீவிய சரித்திரத்தை உணர்வார்க்கு மேற் கூறிய உண்மை இனிது புலனாகும்: அத்தபோதனர் காட்டி வந்த அன்பும் ஆதரவும் எழுதுந்த ரமல்ல. பரத குலத்தவர்க்கு ஓர் ஞானத் தந்தையாகவும், விசேஷ பாதுகாவலராகவும் இன்றளவும் விளங்கி வருகின்றாரெனில், அவரது அன் பின் பெருக்கு எத்துணை ஆழமுடைத்தான தாயிருந் திருக்கலாமென்பது சொல்லாமலே விளங்கும் :

பல ஆயிரமைலுக்கப்பாலுள்ள பிரதேசத்திலிருந்து அஞ்ஞானமயமாகிய கீழ்த்திசைப் பிரதேசங்களுக்கு அவரெழுந்தருளுவதற்கு ஹேதுவாய் நின்ற ஞான அலுவலை நிறைவேற்றும் பொருட்டுத் தூரதேச யாத்திரை செய்த ஞான்றும் "பரதவர்" என்ற நாமத் தைக் கனவிலும் மறந்திருக்கவில்லை யென்பதை நிரூ பித்தல் கஷ்ட சாத்தியமான தின்று. அவரெத் திசையில் லிருந்தாலும் அவரது திருவுள்ளம் தமது ஞானப்பிள்ளை களாகிய பரதவர் மத்தியிலிருந்து வந்ததென்பதற்கு இதன் கீழ்க்கூ றப்புகும் உண்மையே தக்க சான்றாகும்.

பாதவர் முத்துப்படுப்பதிலும், கலமோட்டுவதிலும் விசேஷ பயிற்சியும் பரிச்சயமுமுடையவர்கள். எனவே, இவர்களது முக்கிய வாசஸ்தலம் கடற்கரை யையே யடுத்திருந்தது. சத்துருக்களின் படையெடுப்பு காரணமாகச் சிதறுண்டு பல்வேறு கரை துறைகளில் வசிக்கும்படி நேரிட்டதெனினும், திருமந்திர மென் னும் தூத்துக்குடி யே அக்காலத்தில் பாத குலத்தவர்க் கோர் பாஜ ஸ்தலமாய் விளங்கி வந்த தென்க.

இந்நகரிலிருந்தே நமது முன்னையோர் தாங்கள் நூதனமாகக் கைக்கொண்ட சத்ய திருமறையில் பக்தி விசுவாசத்தைச் செலுத்திவந்தனர். பதினைந்தாம் நூற் றாண்டின் இறுதியிலேயே திவ்ய சந்த மரிய தஸ்நே விஸ் ஆண்டவளின் தேவாலயம் கட்டப்பட்டு முடிந்த தென்பது சரித்திரம், பரதவர் வாழும் வேறு எப்பகு தியிலும் இத்தகைய பிரமாண்டமானதும், பிராசீன மானதுமான தேவாலயத்தைக் காணல் அரிது. இதனை வியாஜமாக வைத்து ஆலோசிப்போமாயின் எப்பகுதி களினும் திருமந்திர நகரமென்னும் தூத்துக்குடிப் பகு தியிலேயே சத்ய திருமறையின் வளர்ச்சியும் அதையது சரிப்பவர்களின் தொகையும் ஏராளமாயிருந்தனவென் பது புலப்படாதிரா.

அங்ஙனமாயின், இத் திருமந்திர நகரைப்பற்றிய ஞாபகம் நமது ஞானத் தந்தைக்கு மிக்கு விசேஷமாயி குந்திருக்கலாமென்பது சந்தேகத்துக் கிடமின் று . அங்ஙனமிருந்தமை பற்றியே நமது முன்னோர்களின் பெருமுயற்சியால் நிர்மாணிக்கப் பெற்றதாகிய தேவாலயத்தில் "பரதர் மாதா'' வென்னும் திவ்ய சந்தமாரியதஸ்நேவிஸ் ஆண்டவள் எழுந்தருளவும், அவளது அது கூலத்தைப் பெற்று வரவுமான அதிர்ஷ்டத்தை கொண் டிருக்கிறோ மென்பது பொய்யன்று,

அர்ச். பிராஞ்சீஸ்க் சவேரியார், தாம் கருதிவந்த ஞான அலு வ லை நிறைவேற்றும் பொருட்டுச் செய்து வந்த யாத்திரையில், பிலிப்பைன் தீவுக்குச் செல்லம் படியாயிற்று. அத்தீவின் தலை நகராகிய மனில்வாவி லுள்ள கன்னிகாசீர்மத்தில் விஜயஞ்செய்திருந்த பொ ழுது, நமது தாயாகிய பரிசுத்த பனிமயத்தாயின் திரு வுருவத்தை யாங்குக் ண்டனர். கண்டவுடனே அவ ரது மந்தையாகிய பரதகுல மக்களின் ஞாபகம் உதித் தது. உடனே மடாலயத்தலைவியினிடத்து நம் பொ ருட்டுப் பரிந்துபேசி அத்திருவுருவத்தைத் திருமந்திர நகரமென்னும் இத்துறைக்கனுப்பிவைக்கும்படி பிரார்த் தித்தனர். இப்பிரார்த்தனை, நமது ஞானத்தந்தை யார் பரலோக பிராப்தியான மூன்றாவது வருஷத்தில் நிறைவேறிற்று. கி.பி. 1555ம் - வல் ஜூன் மீன் 9s யன்று நமது பனிமயவன்னை நமது துறையாகிய தூத துக்குடியை யடைந்தனளென்பது நமது ஞாபகத்தி லிருந்து வரவேண்டிய முக்கிய விஷயம்.

இளம்பிறை தாங்கிய எமது பனிமயத் தாய், தூத் துக்குடி யென்னும் இத்திருமந்திர நகரைத் திருக்கோ வில்கொண்டு சுமார் நான் கு நூற்றாண்டுகளாகன றது. அன்று தொட்டின் று காறும் அத்தேவதாயின து அநுக் ரஹத்தை யடையப்பெறாதார் ஒருவருமில்லையென்றே சொல்ல வேண்டும். விசேஷமாய்ப் பரத குலத்தவர் மட்டில் விசேஷ நன்மைகளைப் பொழிந்து வருகிறாளென்பது பிரசித்தம். 

பரமதேவதாய் பரதர் மக்களைத் தமது சொந்த மக்களாக ஏற்றுக்கொள்ள வேணுமென் பது நமது ஞானத் தந்தையாகிய அர்ச். பிராஞ்சீஸ்கு சவேரியாரது கருத்துப்போலும். ஆனதுபற்றி யே அவரைப் ''பரதர் மாதா'' வென் றழைத்து வரும்படி யான அதிர்ஷ்டத்தை யெய்தப்பெற்றிருக்கின்றோம். பனிமயம் அல்லது தஸ்நேவிஸ் என்னும் திருப்பெயர் மற்றையோரினும் நமது செவிகளுக்கு விசேஷ இன் பக்தைத்தருவாதாயிருக்கின்றது. 

ஆகஸ்டு மாதம் 5ம் தேதியானது பரதகுலத்தவர்க்கோர் '' ஜாதீய தினம் என்பது பரம்பரைவழக்கு. இந்ககரில் ஆகஸ்டு மாதம் 56ல் நடைபெறுவதாகிய திவ்யசந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருவிழாவொன்றே பாதர், பரதரல்லா தார், கிறிஸ்தவர்கள், அஞ்ஞானிகள் ஆதியோரனைவர்க் கும் விசேஷ உணர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டு . பண்ணக்கூடியாதாயிருந்து வருகின்றதென்பது திரண்ட அநுபவம். 

அத்தினம் நமக்கோர் ஜாதீய தின மாதற்கு, அவள் நமது மா தாவென்பதில் நமக்கிருந்து வரும் பற்றுள்ள மன்றிப் பிறிது காரணமில்லை யென்றுணர்க. எந்த உற்சவகாலத்திலுங் காணமுடியாத ஆனந்தமும் ஆரவாரமும் திவ்ய சந்தமாரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் உற்சவ காலத்திற் காணலாம். 

அந்நாளில் அத்தேவதாபைத் தரிசித்துத், தத்தம் பிரதிக்ஞை யைச் செலுத்த வரும் அந்நிய மதத்தினர் அளவி வர், அப்படியாயின் பரமதேவதாயின், மக்களெனப் படுங்கிற்ஸ் தவர்களுக்கு அந்நாள் எத்துணை விசேஷ மாயிருக்கு மென்பதை விரித்துரைக்கவும் வேண்டும் மோ?