எங்கும், எப்பொழுதும், எவ்வுயிர்களிடத்தும் நிரந்தரம் வியாபித்து, வேண்டிய பொழுது வேண்டுவன செய்யும் சர்வ வல்லமை பொருந்திய தனி முதற் கடவுளின் இதய தாமரையில், ஸதாஸர்வதா வாசஞ்செய்து வந்தவளும், வருகின்றவளும், வருபவளுமாகிய, பரிசுத்த பனிமயத் தாயின் அழகிய பூவடிகள் நல்லார்க்கும் பொல்லார்க்கும் எல்லார்க்கும் அரியதுணையாயமைந்து அருள்சுரக்கும் வன்மை வாய்ந்தன வென்பது தெளிவுடையார் அனைவர்க்கும் ஒப்பமுடிந்த சித்தாந்தமென்க.
இப்பிரபஞ்சம் நிரூபணமாகிப் பரிபாலனஞ் செய்யப்பட்டு வருவதற்குக் காரணமாய் நிற்கும் கடவுளினது அகோசர அபிரகஸ்ய அதிசய எண்ணம் இனிது நிறைவேறுதற்கு முக்கிய கருவியாய் விளங்கினவள் நமது தாயாகிய பரிசுத்த பனிமயத்தாயெனில் அவளது மகிமைப்ரபாவத்தை எத்தகையோராலும் இணை கூறுதல் தாமோ?
முதியவளாகிய ஏவையின் வழி மனுக்குலத்திடை நுழைந்த பாவத்தையும், அதனால் விளைந்ததாகிய கேட்டையும் வேரோடு பிடுங்கி யெறிவதற்கு வேண்டியிருந்த ஒப்பற்ற வஸ்துவின் நராவதார மகிமைக்கு ஆஸ்பதமாய் நின்றவள் நமது தாயாகிய பரிசுத்த பனிமயத் தாயெனில் அவளது வரத்தின் பெருக்கத்தை எவரால் வர்ணிக்க முடியும்?
அகிலலோக நாயகனை அமுதூட்டவும், ஏந்தவும், கிடத்தவும், வளர்த்தவும் பாக்கியம் பெற்றவள் நமது தாயாகிய பரிசுத்த பனிமயத் தாயெனில், அவளது மகிமை ப்ரபாவங்கள் அளவிடற் பாலனவோ?
வகுக்கரிய வரத்தினையும், தொகுக்கரிய நலத்தினையும் வாய்க்கப்பெற்ற நமது தேவதாயினது உற்பவமோ களங்கமற்றது. மாசில்லாதது. அவளது ஜீவியமோ பரிசுத்தமானது. எவர்க்கும் இரங்கும் குணமுடையவள். இரக்கமே உருவாகப்பெற்றவள்.
எக்காலுங் கன்னிமை குன்றாதவள். மணிமுடி மன்னன்றாவீது கோத்திரமாகிய நெடிய சிகரத்தின் நித்திலத் தீபமாய் ஜொலிப்பவள். மாதர்க்கரசி. மகிதல ராணி. வான் றலராக்கினி.
அக்கினிமயமாகிய கிரணங்களைப் பொழிகின்ற சூரியனை ஆடையாக உடுத்தும் அன்றலர்ந்த தாமரைபோல் அநுதினமும் துலங்கும் அற்புத வசீகரி.
எத்துணை உக்கிரம முடைத்தான வாயினும், எத்தகைய ஆசாபாசங்களும் பரம தேவதாயினது எல்கை கடந்த குணாதிசயங்களைத் தஹிக்க முடியாதன வென்பதற்கு ஆதித்தனை ஆடையாக அணிந்தாள் என்
தேவ தாயின் மகிமையும், பிரபாவங்களும் இவ்வாறு தெய்வீக மயமாயிருப்பதினாலேயே உலகத்தின் ஒருகோடி முதல் மறுகே டி வரை அவளது பரிசுத்த நாமம் பக்தியோடு துதிக்கப்பட்டு வருகின்றது. எல் லாருக்குத் தாயாகிய அமலோற்பவ கன்னித்தாய் எழில் வளம் வாய்ந்த இந்திய நாட்டின் தென் கோடியில் வசிப் பவர்களாகிய பரதகுலத்தவர்களுக்கு எவ்வாறு விசேஷ அடைக்கலமும், விசேஷ பாதுகாவலும், விசேஷ தாயுமானாள் என்பது ஓரளவு எமது சிற்றறிவுக்கெட்டிய வாறு ஈங்கு விளங்கவைத்தல் அவ்வன்னையின் பக்தி விசுவாசப் பாம்புதலுக்கு எட்டுணையேனும் சாதகமா யிருக்கக்கூடுமென்பது எமது நம்பிக்கை.
பல்வளம் படைத்த பரத மஹா நாட்டிற்குச் செவ்விய திலகம் போன்று விளங்குவது பாண்டி நாடு. இந் நாட்டிற்குப்பாதகுலத்தவர்களின் சந்ததியிற்றோன்றியவர்களே பரம்பரை ராஜ்ய பரிபாலனஞ்செய்து வந்தனரென்பது சரித்திரம்.
இக்குலத்தினர் கால வேறுபாடு பற்றிப் பல்வேறு தொந்தரைக்குள்ளாக நேர்ந்தனர். சத்துருக்களின் படையெடுப்பு அடுத்தடுத்து நேர்ந்தது. இது காரணத்தால், ராஜ்ய உரிமைகளையும், சுதந்தரம் களையும் இழக்கும்படியாயிற்று. எனினும் போர்க்குணத் திலும் உதாரத்துவத்திலும் விசேஷ திறமையோடு விளங்கி வந்தனர்.
இக்குணங்கள் சத்துருக்களுக்கு நிரந்தரம் பீதியை விளைவித்துக்கொண்டுவந்தமையால் இக்குலத்தினரை அடியோடு கருவறுத்துவிடவேணுமென்பது அவர்கள் தவிரதம். ஆன துபற்றிச் சத்துருக்களாகிய மகமதியர், வடுகர் ஆகிய இவர்கள் பல்வ கைப்பட்ட ஹிம்சைகளை விளைவித்து வந்தனர். இவைகளுக்காற்றாது போர்த்துக்கேசிய அரசாட்சியாரிடத்தில் அடைக்கலம் புகுந்தனர்.
அக்காலம் போர்த்துக்கேசியர் நம் நாட்டின் சிற்சில பகுதிகளில் அரசு செலுத்தி வந்தனர். இவர்கள் நம் முன்னையோரது வேண்டுகோளை யாதரித்துச் சத்துருக்களின் நிர்பந்தங் களினின்றும் விடுவித்தனர். பாண்டிநாட்டுக் கரை துறைகளில் நிர்ப்பயமாகவும் அமைதியுடனும் வசித்து வரும்படியான பாதுகாப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
போர்த்துக்கேசிய துரைத்தனத்தாரின் அன்பு இஃதுடன் முடிவடைந்துவிடவில்லை, இவ்வுலகத்தில் நம்மனோரது அமைதியான வாழ்விற்கு இடையூறா யிருந்தவைகளை நீக்கியது போல், பரம சாம்ப்ராஜ்யமாகிய அவ்வுலக வாழ்விற்கு இடையூறாயிருப்பவைகளையும் நீக்கிவிடுதல் சிறந்த தர்மமாகவும், கடமையாகவும் அவர்கள் மதித்திருந்தமையால், பரதகுலத்தவர் பரம் பரை யநுசரித்து வந்த தாயே அஞ்ஞான மார்க்கத்தை விடவும், மெஞ்ஞான மார்க்கத்திற் புகவும் நேர்ந்ததெனல் திரண்ட உண்மையென்க.