தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச்சரிதை - பாகம் 3

நமது முன்னோர்கள் போர்த்துக் கேசியரின் புண் ணிய முயற்சியினால் கிறிஸ்துமதா நுசாரிகளாகத் திருப்பப்பட்டு ளாரேனும், மேற்கூறியது போன்ற குருட்டாட்டத்தின் வாசனையானது அவர்கள் மனதை ஒரோர்வேளை கலக்கத்துக்குட்படுத்தாமலிருக்கவில்லை. பழக்க வாசனையை யொழித்து விடுதல் எளிதில் முடி வ தின்று, எனவே, நமது முன்னோர் வாசனாவஸ்தைக் காளான் இடர்ப்பட நேர்ந்தது ஆச்சர்யமாக நோக்கக் கூடிய தன்றென்க. அலைப்பட்ட துரும்பு போல் அங்க லாய்த்தனர். இருதோணியிற் கால் வைத்தார் போன்று இடர்ப்படலாயினர். சந்தேகமென்னும் சர்ப்பத்தின் வாய்ப்பட்டுத் தவித்தனர். இத்யாதி துன்பங்களெல் லாம் திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவள் திருக் கோவில் கொள்ளச் சித்தம் வைத்த அன்றே, கதிரெ திர்ப்பட்ட கடும்பனிக்கூட்டமாகக் கரைந்தொழிந்தன வெனல் மிகைப்படக்கூறிய தின்று. புதியமார்க்கத்தில் அவர்களுக்கிருந்து வந்தனவாகிய அசூயை, சந்தேகம், விபரீத முதலிய ஆபாசப்படலங்களெல்லாம் அவர் தொழிவதாயின. மெஞ்ஞானத்தினுறைவிடமாகிய சத் திய வேதத்தின் உண்மையை உணரவும், உணர்ந்தவர் யில் ஸ்திரமாயிருந்து வரவும், பரிசுத்த பனிமயத்தாயி ன து திவ்ய பிரசன்ன மொன்றே நிறைந்த கருவியாய் விளங்கிற்றென்பதில் இம்மிய காவு சந்தேகத்திற்கிடம் ருக்கிறதாக நினைப்பதற்கு அநுபவமொத்து வரவில்லை. இஃது மெய்ம்மறையின் மெய்ப்போதனையை மெய்யா கவே உணர்ந்திருப்பார்க்கு ஒப்பமுடிந்ததொன்றென்ப தில் தடையின்று, பரம தேவ தாயை யண்டினவர்கள் எக்காலத்தும் கைவிடப்படுவதில்லை யென்பது, வேதாந்த இரகஸ்ய உண்மையமிர்தத்தைப் பருகிய உத்தம தபோதனர்க ளின் வாக்கு. இவ்வாக்கிற்குப் பாத குலத்தவர்கள் . நிறைந்த இலக்கியமாயிருந்து வருகிறார்களென்பது மறுக்க முடியாத சத்தியம். ஆழமாகய சமுத்திரத் தின் நீர் நிலை, ஆழம், பரிமாணம் இவைகளை யளந்தறி யினும், பாம தேவ தாயின் அன்பாகிய சமுத்திரத்தை யளத்தல், எவர்க்கும் எக்காலத்தும் அரிதெனல் நிறைந்த உண்மை. அவளது அநுக்ரஹத்தைப் பெற்றார் அளவி லர், புத்ரசந்தானமின்றி அங்கலாய்த்துக் கொண்டிருந் தார் ஆனந்தமுறுவாராயினர். துன்ப துயரங்களில் ஈடு பட்டுச் சுழன்று கொண்டிருந்தவர்கள் சுகத்தை யடை ந்தனர். சண்டை , சச்சரவு முற்றுகையிட்டுக் கொண் டிருந்த குடும்பங்கள், அமைதி, சமாதானம் இவைக ளுக்கு உறைவிடமாயின. பாவிகள் மனந்திரும்பினர். தரித்திரர் வறுமை நீங்கினர். வியா தியஸ்தர் விடுதலை பெற்றனர். கடலோடிகள் தங்கள் வள்ளம், தோணி, படகு, கலம் முதலியவற்றைக் கருதிய துறைக்குக் கஷ் . டமின்றிச் செலுத்தவும், மீண்டும் கரைவந்து சேரவுமா யினர். இன்னோரன்ன நன்மைகள் பலப்பல. அவற்றை வகுத்துரைத்து விடலாமெனல், ஞெண்டுக்குழியில் சமுத்திர ஜலமத்தனையும் அள்ளி நிரப்பிவிடஉத்தேசிப் பதை யொக்குமன்றி வேறில்லை.

இத்தனை அன்பும், ஆதரவும், அருளும் பொரும் தக் கொண்ட எமது தாய்க்குப் பேயையன்றி யாரே இடர் நினைப்பர். விஷம் பொருந்திய பேயும் அவளது காலின் கீழ்க் கிடந்து சுங்குகின்ற போழ்து எம் தன் னைக் கடர்புரிய எவரே துணிவர். எனினும், பரமதேவ தாய் தயாவாரிதியாய் விளங்குகின்றாள். கொடிய பா விகளையும் தன்னகப்படுத்தி அவர்களைப் புனிதமாக்கும் சுபாவமுடையவள். எனவே, எவர் எவ்வகைச் செய் லுடையராயிருப்பினும், அவள் பால் செல்வதற்குக் கொஞ்சமும் பின் வாங்கமாட்டார். இது திண்ணம்,
பரமதயாநந்த பரமேஸ்வரியாகிய பரிசுத்த பனி ம ய த் த ா யி ன் திவ்ய மங்கள வருஷோத் ஸ் வம் பரம்பரையை ய நுசரித்து 1920 ஆகஸ்டு மாதம் 5உயாகிய சுபதினத்தில் சர் வாடம்பரங்களும் டன் இனிது நிறைவேறப் பெற்றது. தேவ தாயின் பக் தர்களனைவரும் தத்தமக்குரிய இஷ்ட சித்திகளைப் பெற்று மீள்வாராயினர். இதில் ஓர் விசேஷத்தைக் குறிப்பிடுதல் அவசியம். அதாவது, பாம தேவ தாயின் விசேஷ பாதுகாவலை விடா தி தழுவி நிற்பவர்களா கீய பாதகுலத்தவர்களின் கல்வி, செல்வாக்கு, நாகரீ கம், முதலிய அபிவிர்த்திகளின் பொருட்டுப் பரத கான்பெரன்ஸ் என்னும் முதலாவது மஹாஜன சபை ஸ்தாபிக்கப்பட்டது இத்தினமாகலின், ஏனைய வருஷங் களிலும், பாதர் மாதாவாகிய அர்ச், பனிமயத்தாயின் திவ்ய உத்ஸவமானது பரதகுலத்தவர்களுக்கு விசேஷ குதூஹலத்தையும் உத்ஸாகத்தையும் உண்டுபண்ணத் தக்கதாயிருந்த தென்பதில் ஆக்ஷேபமின்று,

நெடியமயக்கத்தைக் கொன்று ஜெயவிருதேந்திய மஹோக்ரத மஹா ராணியாகிய பரிசுத்த பரம அன்னையின் வருஷோத்ஸ வம் பூர்த்தியான ஆறாவது தினமா கிய 1920ம் ஆகஸ்டு 10s செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் அவ்வன்னை எழுந்தருளி யிருக்கும் தேவாலயத்தின் மணியான து அலங்கரிக்கப் பட்டது. இம்மணியோசை நகரத்தை நடுங்கவைத்து விட்டது. யாது சம்பவித்ததோ வென் ற மனத்தின ராய் யாவரும் அர்ச் - பனி மயத்தாயின் தேவாலயத் தைத் தேடி யோடி வந்தனர். சில நிமிஷங்களுக்கெல் லாம் சிறுவர், வாலிபர், வயோதிபர், ஆண், பெண் அனை வரும் எள்ளிட இடமின்றித் தேவாலயத்தில் நிறைந்து விட்டனர்.