அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 07

ஜீவகடவுளின் முத்திரையிடப்பட்டவர்களுடைய தொகை வருமாறு.

1. இவைகளுக்குப் பின்பு நான்கு தூதர்கள் பூமியின் நான்கு கோடிகளிலும் நின்றுகொண்டு, பூமியின் நான்கு காற்றுகளும் பூமியின்மேலாவது சமுத்திரத்தின்மேலாவது ஒரு மரத்தின் மேலாவது வீசாதபடிக்கு அவைகளை நிறுத்திவைக்கக் கண்டேன்.

* 1. நான்கு காற்றுகள்:- சுவாமி உலகத்துக்கு அனுப்புகிற கொடிய ஆக்கினைகள். இவைகளால் எவ்வித மோசமும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நேரிடாதபடிக்குச் சிலகாலம் அவைகள் நிறுத்திவைக்கப்படுகிறதாகக் காண்பிக்கப்படுகிறது. (கிராம்போன்.)

2. அன்றியும் ஜீவகடவுளின் முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்கிற திசையிலிருந்து ஏறிவரக் கண்டேன். இவர் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதர்களையும் நோக்கிப் பலத்த சத்தமாய்ச் சொன்னதாவது:

3. நாம் நமது சர்வேசுரனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளிலே முத் திரையிடுகிறவரையில் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப் படுத்தாதேயுங்கள் என்றார். (எசே. 9:4.)

4. அப்போது முத்திரையிடப்பட்டவர்களுடைய தொகையைச் சொல்லக் கேட்டேன்: இஸ்ராயேல் புத்திரரின் சகல கோத்திரங்களிலும் முத்திரையிடப் பட்டவர்கள் லட்சத்து நாற்பத்து நாலா யிரம்பேர்.

* 4. லட்சத்து நாற்பத்து நாலாயிரம் என்பது கணக்கில்லாதபேர்கள் என்று அர்த்தங்கொள்ளும்.

5. யூதா கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத்கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

6. ஆசேர் கோத்திரத்தில் முத்திரை யிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நெப்தலி கோத்திரத்தில் முத்திரையிடப் பட்டவர்கள் பன்னீராயிரம். மனாஸ்ஸே கோத்திரத்தில் முத்திரையிடப்பட்ட வர்கள் பன்னீராயிரம்.

7. சிமியோன் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரையிடப் பட்டவர்கள் பன்னீராயிரம். ஈசாக்கார் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்ட வர்கள் பன்னீராயிரம்.

* 7. தான் என்கிற கோத்திரத்தார் அஞ்ஞானத்திலே விழுந்ததினாலே மோட்சவாசிகளுக்குள்ளே குறிக்கப்படவில்லை.

8. சாபுலோன் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்ஜமீன் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

9. இவர்களுக்குப்பின் சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், தேசத்தாரிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், எவராலும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்களைக் கண்டேன். இவர்கள் வெண்மையான வஸ்திரந்தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, சிங்காசனத்தின் முன்பாகவும், செம்மறிப்புருவையின் சமுகத்திலும் நின்றார்கள்.

10. இவர்கள் மிகுந்த சத்தமிட்டு: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற நம்முடைய சர்வேசுரனுக்கும் செம்மறிப்புருவையானவருக்கும் ஜெயமங்களம் உண்டாவதாக என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

11. தூதர்களெல்லோரும் சிங்காசனத்தையும் வயோதிகர்களையும் நான்கு ஜீவஜெந்துக்களையும் சூழ்ந்து நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து சர்வேசுரனைத் தொழுது:

12. ஆமென், எங்கள் சர்வேசுரனுக்கு ஸ்துதியும், மகிமைப்பிரதாபமும், ஞானமும், நன்றியறிந்த ஸ்தோத்திர மும், சங்கையும், வல்லமையும், பலமும் காலாகாலங்களுக்கும் உண்டாவதாக, ஆமென் என்றார்கள்.

13. அப்போது வயோதிகரில் ஒருவர் என்னை நோக்கி: தூய ஆடை அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் என்று என்னைக் கேட்டார்.

14. அதற்கு நான்: என் ஆண்டவனே, இதை நீர் அறிவீர் என்க, அவர் பிரத்தியுத்தாரமாக: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வஸ்திரங்களைச் செம்மறிப்புருவையானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெண்மையாக்கின வர்கள்.

15. ஆகையால் இவர்கள் சர்வேசுரனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள். சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவரும் இவர்களைத் தமது கூடாரத்துக்குள் காப்பாற்றுவார்.

16. இவர்களுக்கு இனிப் பசியும் இல்லை, தாகமும் இல்லை; வெயிலா வது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. (இசை. 49:10.)

17. ஏனெனில் சிங்காசனத்தின் மத்தி யிலிருக்கிற செம்மறிப்புருவையான வரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவஜல ஊற்றுகளுக்கு கூட்டிக்கொண்டு போவார். சர்வேசுரன் தாமே இவர்களுடைய கண்களினின்று கண்ணீரெல்லாம் துடைப்பார் என்றார். (இசை. 25:8; காட்சி. 21:4.)