அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 06

உடைக்கப்பட்ட முந்தின ஆறு முத்திரைகளின் விசேஷம் வருமாறு.

1. பின்பு செம்மறிப்புருவையானவர் ஏழு முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவ ஜெந்துக்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடி முழங்கின சத்தம்போல் சொல்லக் கேட்டேன்.

2. அப்போது நான் கண்டதாவது: இதோ, ஒரு வெண் குதிரை தோன்ற, அதின்மேல் ஏறியிருந்தவர் ஒரு வில்லைப் பிடித்திருந்தார். அவருக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது. அவர் ஜெயசீலராய் ஜெயிக்கும்படிக்குப் புறப்பட்டார்.

* 2. வெண் குதிரையால் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு சேசுநாதர்சுவாமி அனுப்பிய அப்போஸ்தலரும் அவர்களைத் தொடர்ந்துவரும் மற்றுந் திருச்சபைக் குருக்களும் குறிக்கப்படுகிறார்கள்.

3. மேலும் அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவஜெந்து: நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன்.

4. அப்பொழுது செந்நிறமான வேறொரு குதிரை புறப்பட்டது; அதன் மேல் ஏறியிருந்தவனுக்குப் பூலோகத்தி லிருந்து சமாதானத்தை அகற்றித் தள்ள வும், ஒருவனொருவனைக் கொல்லும் படி (செய்யவும்) வல்லமை அளிக்கப் பட்டது. ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

* 4. செந்நிறமான குதிரை உலகத்தில் நடக்கும் யுத்தங்களையும், வேத கலாபங்களையும் குறிக்கின்றது.

5. பின்பு அவர் மூன்றாம் முத்திரை யை உடைத்தபோது, மூன்றாம் ஜீவ ஜெந்து: நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். அப்போது இதோ ஒரு கருங்குதிரை தோன்றினது. அதன்மேல் ஏறி யிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.

* 5-6. கருங்குதிரையானது அந்தந்தக் காலங்களில் தோன்றும் கடும் பஞ்சங்களாம். திராட்ச இரசத்தையும் எண்ணெயையும் சேதப்படுத்தவேண்டாம் என்பதினால், பஞ்சகாலங்களிலும் சர்வேசுரன் மனிதர்மேல் இரங்கி அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலும் உதவியும் உண்டாகும்படி செய்வாரென்று அறிக.

6. அப்போது அந்த நான்கு ஜீவஜெந்துக்களின் நடுவிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு: ஒரு பணத்துக்கு இரண்டு ராத்தல் கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு ஆறு ராத்தல் வாற்கோதுமை யென்றும், திராட்ச ரசத்தையும், ஒலிவ எண்ணெயையும் சேதப்படுத்தாதே யென்றும் சொல்லக் கேட்டேன்.

7. பின்பு அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவஜெந்து: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.

8. அப்போது இதோ, ஒரு சோகைக் குதிரை தோன்றினது. அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். பாதாளம் அவனைப் பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத் தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும் கொலை செய்யும்படி உலகத்தின் நாற்றிசையின் மேலும் அவனுக்கு அதிகாரம் கொடுக் கப்பட்டது.

* 8. சோகைக் குதிரை சாவுக்கு அடையாளமாகும். முக்கியமாய்ப் பஞ்சம் படைகளுக்குப்பின் கொள்ளைநோய் உண்டாகி, மனுஷர் உயிரை வதைத்துக் கொல்லுவதினால் இந்தக் குதிரை கொள்ளைநோயால் உண்டாகும் சாவுக்கு அடையாளமாகும்.

9. பின்பு அவர் ஐந்தாம் முத்திரை யை உடைத்தபோது, சர்வேசுரனுடைய வாக்கியத்தினிமித்தமும் தாங்கள் கொ டுத்த சாட்சியினிமித்தமும் கொலை யுண்டவர்களுடைய ஆத்துமங்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.

10. அவர்கள் உரத்த சத்தமிட்டு: பரிசுத்தரும் சத்தியருமாகிய ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எதுவரைக்கும் எங்கள் இரத்தத்தைக் குறித்து நியாயத்தீர்ப்புச் செய்யாமலும், பழிவாங்கா மலும் இருப்பீர் என்று கூவினார்கள்.

11. அப்பொழுது அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டது. அன்றியும் அவர்கள் தங்களைப்போல் கொலையுண்ணப் போகிற தங்கள் உடனூழியரும், தங்கள் சகோதரருமானவர்களுடைய தொகை நிறைவாகுமட்டும் இன்னங் கொஞ்சக்காலம் பொறுமையாயிருக்க வேண்டுமென்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

12. பின்பு அவர் ஆறாம் முத்திரை யை உடைத்தபோது நான் கண்ட தாவது: இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் மயிர்க் கம்பளியைப்போல் கறுத்தது. சந்திரன் முழுதும் இரத்தம் போலாயிற்று.

13. நட்சத்திரங்களும் பெருங் காற்றி னால் அசைக்கப்பட்ட அத்திமரம் தன் காய்களை உதிர்க்கிறதுபோல் வானத் திலிருந்து பூமியின்மேல் விழுந்தன.

* 13. நட்சத்திரங்கள் விழுந்தன: - மத். 24-ம் அதி. 29-ம் வசன வியாக்கியானம் காண்க.

14. அப்பொழுது வானமானது சுருட் டப்பட்ட புஸ்தகம்போல் சுருங்கிப் போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடம்விட்டுப் பெயர்ந்து போயின.

15. பூமியின் இராஜாக்களும், பிரபுக்களும், சேனாதிபதிகளும், ஐசுவரியவான்களும், பராக்கிரமசாலிகளும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும் மலைகளின் குகைகளிலும் கற்பாறைகளுக்குள்ளும் ஒளிந்துகொண்டு,

16. பருவதங்களையும், கற்பாறைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும் செம்மறிப்புருவையானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள். (இசை. 2:19; ஓசே.10:8.)

17. இதோ, அவர்களுடைய கோ பாக்கினியின் மகா நாள் வந்தது; யார் நிற்கக்கூடும்? என்றார்கள்.

* 17. உலகம் எப்படி முடியுமென்று திறக்கப்பட்ட 6-ம் முத்திரையால் காட்டப்படுகிறது. இது சேசுநாதர், மத். 24-ம் அதி. 29-ம் வசனத்திலும், இன்னும் மற்ற இடங்களிலும் சொல்லப்பட்டவைகளுக்கு ஒப்பாயிருக்கின்றது.