கொரிந்தியர் அஞ்ஞான நடுவர் முன்பாக வழக்காடுகிறதினிமித்தம் அவர்களைக் கண்டித்து, மோட்ச இராச்சியத்தை இழந்து போகப்பண்ணுகிற பிரதான பாவங்களைத் தொகுத்து அவைகளை விலக்கக் கற்பிக்கிறார்.
1. உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்கு இருக்கும்போது, அவன் அர்ச்சிக்கப்பட்டவர்களை விட்டு அநீதரிடத்தில் தீர்ப்புக்குப் போகத் துணி கிறதென்ன?
2. அர்ச்சிக்கப்பட்டவர்கள் இவ் வுலகத்துக்குத் தீர்ப்பிடுவார்கள் என்று அறியீர்களோ? உலகம் உங்களால் தீர்வை யிடப்படுவதாயிருக்க, அற்ப வழக்கு களைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரோ? (மத். 19:28; தானி. 7:22; ஞானா. 3:8.)
* 2. அர்ச். மத். 19-ம் அதி. 28-ம் வச. சொல்லப்பட்டிருக்கிறபடி அர்ச்சிக்கப்பட்டவர்கள் சேசுநாதர்சுவாமியோடுகூட பொதுத்தீர்வைநாளில் உலகத்துக்குத் தீர்வையிடுவார்கள்.
3. நாம் தேவதூதர்களையும் நடுத்தீர்ப்போமென்று அறியீர்களோ? அப்படியானால், இப்பிரபஞ்ச காரியங்களைப்பற்றித் தீர்க்காமலேன்?
* 3. இவ்விடத்தில் தேவதூதர்களென்பது கெட்டுப்போன சம்மனசுகளாகிய பசாசுக ளென்றறிக.
4. ஆதலால் பிரபஞ்ச வழக்குகள் உங்களுக்கு உண்டானால், தீர்ப்புச் செய்வதற்குச் சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக் கொள்ளுங்கள்.
5. உங்களுக்கு வெட்கமுண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். இவ் விதமாய்த் தன் சகோதரர்களுக்குள்ளே உண்டான வழக்கைத் தீர்க்கக்கூடிய புத்திமான் ஒருவனாகிலும் உங்களுக் குள்ளே இல்லையோ?
6. ஆனால் சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான்; அதுவும் அவிசுவாசிகளிடத்திலல்லோ!
7. உங்களுக்குள் வழக்குண்டாயிருப்பதே எவ்விதத்திலும் உங்களுக்குக் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்வதை விட அநீதத்தை ஏற்றுக்கொள்ளலாமே? வஞ்சகத்தை சகித்துக்கொள்ளலாமே? (மத். 5:39; உரோ. 12:17; 1 தெச. 4:6.)
8. ஆனால் நீங்களே அநீதம்பண்ணுகிறீர்கள், வஞ்சகம் செய்கிறீர்கள்; அதுவுஞ் சகோதரர்மட்டில் அப்படிச் செய்கிறீர்கள்.
9. அநீதர்கள் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள மாட்டார்கள் என்று அறியீர்களோ? மோசம் போகாதேயுங்கள்: தூர்த்தரும், விக்கிரக ஆராதனைக்காரரும், விபசாரக் காரரும், (கலாத். 5:19; எபே. 5:5.)
10. சிற்றின்பப்பிரியரும், ஆணும் ஆணுமாய் மோகிக்கிறவர்களும், திருடரும், பொருளாசைக்காரரும், குடி வெறியரும் உதாசினரும், கொள்ளைக்காரரும் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிப்பதில்லை.
11. உங்களில் சிலராயினும் இப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள். ஆனா லும் நம்முடைய கர்த்தராகிய சேசுக் கிறீஸ்துவின் நாமத்தினாலே நம்முடைய தேவனுடைய இஸ்பிரீத்துவினாலும் கழுவப்பட்டிருக்கிறீர்கள், பரிசுத்தமாக் கப்பட்டிருக்கிறீர்கள், நீதிமான்களாக் கப்பட்டிருக்கிறீர்கள். (தீத்து. 3:3-7.)
12. எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆனாலும் எல்லாம் தகுந்ததல்ல. எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆயினும் நான் ஒன்றிற் கும் என்னை அடிமையாக்கிக்கொள்ள மாட்டேன். (1 கொரி. 10:23.)
* 12. அஞ்ஞான நடுவனிடத்தில் கிறீஸ்தவர்கள் வழக்காடக்கூடாதாவென்று சிலர் கேட்பார்களாக்கும். உத்தரவுதான், என்றாலும் அப்படிச் செய்வது கிறீஸ்தவனுக்கு யோக்கியமல்ல. வேறுவழியாய் அதாவது, திருச்சபையாரைக்கொண்டு நியாயம் பெற்றுக் கொள்ளக்கூடுமாகில் அப்படிச் செய்வதே நலம். ஏனென்றால் கிறீஸ்தவன் சர்வேசுர னுடைய பிள்ளையாயிருக்கிறபடியினாலே, பசாசுக்கடிமையாயிருக்கிற அஞ்ஞானிக ளுடைய அதிகாரத்துக்கு மனம்பொருந்தித் தன்னைக் கீழ்ப்படுத்தப்போவது சரியல்ல வென்று சொல்லத்தகும்.
13. போஜனம் வயிற்றிற்கும், வயிறு போஜனத்துக்கும் ஏற்கும். ஆனால் சர்வேசுரன் இதையும் அதையும் அழித்துப்போடுவார். சரீரமோ காமத்துக்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்துக்கு உரியவர். (1 தெச. 4:3.)
* 13. போஜனம் வயிற்றுக்கு அவசரமாயிருக்கிறது. ஏனென்றால் போஜனம் வயிற்றுக் காகவும், வயிறு போஜனத்துக்காகவும் உண்டாக்கப்பட்டது. ஆனால் போஜனம் வயிற்றுக்கு அவசரமாயிருக்கிறதுபோல விபசாரமும் உங்கள் சரீரத்துக்கு அவசரமா யிருக்கிறதென்று நினையாதேயுங்கள். ஏனென்றால் விபசாரத்துக்காக அல்ல, நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருக்காக உங்கள் சரீரம் உண்டாக்கப்பட்டது. அவரே அதற்கு எஜமானும் தலையுமாயிருக்கிறார். அவருக்கே உங்கள் சரீரம் ஊழியம் பண்ணவேண்டுமொழிய விபசாரத்துக்கு அடிமையாய் இருக்க வொண்ணாதென்பதே இவ்வாக்கியத்தின் கருத்து.
14. சர்வேசுரன் கர்த்தரை உயிர்ப்பித்தார். ஆனதால் நம்மையும் தம்முடைய வல்லபத்தினாலே உயிர்ப்பிப்பார். (2 கொரி. 4:14.)
15. உங்கள் சரீரங்கள் கிறீஸ்துநாத ருக்கு அவயவங்களென்று அறியீர்களோ? அப்படியிருக்க, கிறீஸ்துவின் அவயவங்களை எடுத்து, வேசியின் அவயவங்களாக்குவேனோ? பரிச்சேத மில்லை.
16. வேசியோடு இசைந்திருக்கிற வன் அவளோடே ஒரே சரீரமாகிறான் என்று அறியீர்களோ? ஏனெனில் இருவரும் ஒரே சரீரமாயிருப்பார்கள் என்று (வேதாகமத்தில்) சொல்லியிருக் கிறதே. (ஆதி. 2:24; மத். 19:5.)
17. கர்த்தரோடே சேர்ந்திருக்கிறவன் அவரோடே ஒரே ஞானரூபியாகிறான். (எபே. 5:30; 2 கொரி. 3:17.)
18. விபசாரத்துக்கு விலகி நடங்கள். மனுஷன் செய்யலான (வேறே) எந்தப் பாவமும் சரீரத்துக்குப் புறம்பாயிருக்கின்றது. வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சொந்தச் சரீரத்துக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்கிறான்.
19. உங்கள் சரீரம், உங்களிடத்திலிருக்கிறவரும், சர்வேசுரனிடத்தில் நீங்கள் பெற்றுக்கொண்டவருமாகிய இஸ்பிரீத்துசாந்துவின் ஆலயமென்றும், நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல வென்றும் அறியீர்களோ? (1 கொரி. 3:17; 2 கொரி. 6:16, 17.)
20. உயர்ந்த கிரயத்துக்கு கொள்ளப்பட்டிருக்கிறீர்களே. ஆகையால் சர்வேசுரனை உங்கள் சரீரத்தில் கொண்டிருந்து, மகிமைப்படுத்துங்கள். (1 கொரி. 7:23; பிலிப். 1:20.)