அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 03

சார்திஸ், பிலதெல்பியா, லவோதிக்கையா என்ற சபைகளுக்கு எழுதவேண்டியவைகள் கற்பிக்கப்படுகின்றன.

1. சார்திஸ் சபையின் தூதனுக்கு எழுது: சர்வேசுரனுடைய ஏழு அரூபிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது: நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

2. நீ விழிப்பாயிருந்து, சாகப்போன வைகளை ஸ்திரப்படுத்து. ஏனெனில் என் சர்வேசுரனுக்கு முன்பாக உன் கிரியைகள் பூரணமானவைகளாகக் காணேன்.

3. ஆகையால் நீ எவ்விதம் பெற்றுக் கொண்டாயென்றும், எவ்விதம் சொல்லக் கேட்டாயென்றும் நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு தவஞ் செய். நீ விழித்திராவிட்டால் திருடனைப் போல் உன்னிடத்தில் வருவேன். நான் எந்த நேரம் உன்னிடத்தில் வருவே னென்றும் அறியாய். ( 1 தெச. 5:2: காட்சி. 16:15; 2 இரா. 3:10; யோப். 12:14.)

4. ஆகிலும், தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சார்திஸ்நகரில் உனக்குண்டு. அவர்கள் வெண் மையான வஸ்திரந்தரித்து, என்னுடனே கூட நடப்பார்கள். ஏனெனில் அதற்கு அவர்கள் பாத்திரவான்கள்.

5. இப்படியே ஜெயங்கொள்ளுகிறவன் வெண்மையான வஸ்திரந் தரிப்பிக்கப்படுவான். ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்க மாட்டேன். என் பிதாவின் முன்பாக வும், அவருடைய தூதர் முன்பாகவும் அவனுடைய நாமத்தை விளம்புவேன்.

6. இஸ்பிரீத்துவானவர் சபைகளுக் குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவான்.

7. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுது: பரிசுத்தரும், சத்தியரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், எவனும் பூட்டாவண்ணம் திறக்கிறவரும், திறக்காவண்ணம் பூட்டு கிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிற தாவது: (இசை. 22:22; யோப். 12:14.)

* 7. தாவீதின் திறவுகோலையுடையவர்: - தாவீது இராஜா கட்டின சீயோன் கோட்டையானது திருச்சபைக்கும் பரலோகத்துக்கும் ஓர் உருவகமென்று வேதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறதறிவோம். தாவீது இராஜா அந்தக் கோட்டையின் வாசல் திறவுகோலைக் கொண்டிருந்து, அந்தக் கோட்டையின்மேல் அதிகாரஞ் செலுத்திவந்தார். ஆகையால் சேசுநாதர் தாவீதின் திறவுகோலையுடையவரென்கும் போது பரலோகத்தின் மேலும் திருச்சபையின் மேலும் சர்வாதிகாரமுடையவர் என்பது கருத்தாம்.

8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். இதோ, உனக்கு முன்பாக வாசலைத் திறந்துவைத்திருக்கிறேன்; அதை ஒருவனும் பூட்டமாட்டான். ஏனெனில் நீ சற்றுப் பெலனுள்ளவனாய் என் வார்த்தையைக் காத்து, என் நாமத்தையும் மறுதலியாதிருந்தாய்.

9. இதோ, யூதரல்லாதிருந்தும், தங் களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன். இதோ, அவர்கள் உன் பாதங்களுக்குமுன் வந்து நமஸ்கரிக்கச் செய் வேன். அப்போது நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

10. பொறுமையைக் கற்பிக்கும் என் வாக்கியத்தை நீ காத்துக்கொண்டபடி யினாலே, பூமியின்மேல் வாசமாயிருப் பவர்களைச் சோதிக்கும்படியாக உலக மெங்கும் வரப்போகிற சோதனை வேளையில் நின்று நானும் உன்னைக் காத்துக்கொள்வேன்.

* 10. நீ வேத கலகங்களுக்கு பயப்படுகிற பலவீனமான சுபாவமுடையவனாயிருந்தும், என் நாமத்தை மறுதலிக்காமல், என் வாக்கியத்தைக் காத்துக்கொண்ட படியினாலே அந்தப் புண்ணியத்துக்குச் சம்பாவனையாக இதுவரைக்கும் உன்னை எதிர்த்து நின்ற பசாசின் மக்களாகிய யூதர்களுக்குள்ளே உனக்கு ஒரு வாசலைத் திறந்து, அவர்களில் சிலர் உன் போதகத்துக்கு காதுகொடுத்து உன் பாதத்திலே விழுந்து வணங்கி உன் கையினாலே ஞானஸ்நானம் பெறப்பண்ணுவேன். அப்போது நீ எனக்கு உகந்த ஊழியனாயிருக்கிறாய் என்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள். அல்லாமலும் இதுவரைக்கும் உனக்கு நேரிட்ட துன்பங்களில் நான் போதித்தபடி நீ பொறுமையாயிருந்தபடியால், இப்போது கொஞ்சத்துக்குள்ளே உலகமெங்கும் வரப்போகிற அதிக பெரிதான வேத கலகத்தில் நின்று உன்னைக் காப்பாற்றுவேன். உன் முடியை வேறொருவரும் கைக்கொள்ளாதபடி இதுவரைக்கும் நீ புண்ணிய நெறியில் நிலைத்ததுபோல் கடைசிமட்டும் உறுதியாய் நிலைகொள் என்று அர்த்தமாம்.

11. இதோ, சீக்கிரமாய் வருகிறேன், ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உன்னிடத்திலுள்ளதை வைத்துக்கொள்.

* 11. உன்னிடத்தில் உள்ளது: உன் விசுவாசமும், பொறுமையும் என்றறிக. (கிராம்போன்.)

12. ஜெயங்கொள்ளுகிறவனெவ னோ அவனை என் தேவனுடைய ஆலயத்தில் ஒரு தூணாக ஏற்படுத்து வேன்; அதனின்று அவன் ஒருபோதும் வெளியே போகான். என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனால் பரலோ கத்தினின்று இறங்கிவருகிற புதிய ஜெருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். (காட்சி. 19:12.)

13. இஸ்பிரீத்துவானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவான்.

14. லவோதிக்கையா சபையின் தூதனுக்கு எழுது: ஆமென் என்னப் பட்டவரும், பிரமாணிக்கமும் சத்தியமு முள்ள சாட்சியானவரும், சர்வேசுர னுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியான வரும் சொல்லுகிறதாவது: (அரு. 14:6.)

* 14. சேசுநாதர்சுவாமி மனுஷனாகியமட்டும், தம்முடைய மேன்மையினாலே சகல சிருஷ்டிப்புகளுக்கும் முதன்மையாயிருக்கிறார்

15. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ குளிர்ந்தவனுமல்ல, அன லுள்ளவனுமல்ல. நீ ஒன்றில் குளிர்ந்தவனாய் அல்லது அனலுள்ளவனாய் இருந்தால் நலம்.

* 15. குளிர் என்பது பாவமாகிய செத்த ஸ்திதியையும், அனல் என்பது புண்ணியமாகிய உயிருள்ள ஸ்திதியையும் குறிக்கிறது.

16. ஆனால் நீ குளிர்ந்தவனாயாவது அனலுள்ளவனாயாவது இராமல், வெதுவெதுப்புள்ளவனாய் இருக்கிறபடியால், என் வாயினின்று உன்னை வாந்திபண்ணத் துவக்குவேன்.

17. நீ நிர்ப்பாக்கியனும் பரிதாபத்துக்குரியவனும் தரித்திரனும் குருடனு மாயிருக்கிறாய் என்பதை அறியாமல், நான் ஐசுவரியவான், செல்வம் நிறைந் தவன், எனக்கு ஒரு குறைவும் இல்லை யென்று சொல்லுகிறபடியால்,

18. நீ செல்வனாகும்படி நெருப்பில் புடமிடப்பட்ட பொன்னை என்னிடத்தில் விலைக்கு வாங்கிக்கொள்ளவும், உன் நிர்வாணத்தின் இலச்சை தோன்றாதபடிக்கு வெண்மையான வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளவும் உனக்குப் புத்தி சொல்லுகிறேன். மேலும் உன் கண்கள் பார்வை அடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போட்டுக்கொள்.

* 18. புடமிட்ட பொன் என்பது: சோதனையில் பரீட்சிக்கப்பட்ட விசுவாசத்தையும், வெள்ளுடையென்பது மனத்தூய்மையையும், கலிக்கமென்பது இஸ்பிரீத்துசாந்துவின் வரமாகிய ஞான தைலத்தையும் குறிக்கிறது. (கிராம்போன்.)

19. நான் நேசிக்கிறவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ உரோசமடைந்து தவஞ்செய். (பழ. 3:12; எபி. 12:6.)

20. இதோ, நான் வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். எவனாவது என் குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடு போஜனம்பண்ணுவேன். என்னோடு அவனும் போஜனம் பண்ணுவான்.

21. நான் ஜெயங்கொண்டு என் பிதாவோடேகூட அவருடைய சிங்கா சனத்தில் உட்கார்ந்திருக்கிறது போல், ஜெயங்கொள்ளுகிற எவனும் என் னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அவனுக்கு அருளுவேன்.


22. இஸ்பிரீத்துவானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவான்.