இருபத்துநாலு வயோதிகரும் நாலு ஜீவ ஜெந்துக்களும் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற சர்வேசுரனை இடைவிடாமல் நமஸ்கரிக்கிறார்கள்.
1. இவைகளுக்குப்பின்பு நான் கண்ட தாவது: இதோ, பரலோகத்தில் ஒரு வாசல் திறக்கப்பட்டது. அப்போது எக்காள சத்தம்போல் முன்னே என்னு டனே பேசக் கேட்டேனே, அந்தச் சத்தம் என்னை நோக்கி: நீ இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின் சம்பவிக்கவேண் டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்றது.
2. உடனே நான் பரவசமானேன்: அப்பொழுது இதோ, பரலோகத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருக்க, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
3. வீற்றிருந்தவர், பார்வைக்கு வச் சிரக்கல்லுக்கும், கோமேதகத்துக்கும் ஒப்பாயிருந்தார். மரகதம்போல் தோன் றிய வானவில் அந்தச் சிங்காசனத்தைச் சூழ்ந்துகொண்டிருந்தது. (எசே. 1:28.)
4. அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி இருபத்துநாலு ஆசனங்கள் இருந்தன. இருபத்துநாலு வயோதிகர் வெண்மையான வஸ்திரங்களை அணிந்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்த ஆசனங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
* 4. அவருடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் இருந்த இருபத்துநாலு வயோதிகர் அர்ச்சியசிஷ்டவர்களுக்கு அடையாளமாம். ஏனெனில் சமஸ்த அர்ச்சியசிஷ்டவர்களும் மோட்சத்தில் இராஜாதி இராஜனாகிய சர்வேசுரனாலே முடி சூடப்பெற்று, அவருடைய சிங்காசனத்தைச் சூழ இவர்களும் இராஜாக்களாய் ஆசனங்களில் உட்கார்ந்திருப்பார்கள்.
5. அன்றியும் அந்தச் சிங்காசனத்தி லிருந்து மின்னல்களும், குமுறல்களும், இடி முழக்கங்களும் புறப்பட்டன. சிங்காசனத்துக்குமுன்பாகச் சர்வேசுர னுடைய ஏழு அரூபிகளாகிய ஏழு தீபங் கள் எரிந்துகொண்டிருந்தன. (சக். 4:2.)
* 5. அந்தச் சிங்காசனத்திலிருந்து உண்டாகும் மின்னல், இடி, குமுறல்கள், தேவ வல்லப மகத்துவத்தை எண்பிக்கும் அடையாளங்களாம்.
6. அந்தச் சிங்காசனத்துக்குமுன் பளிங்குக்கு ஒப்பான கண்ணாடிச் சமுத்திரம்போலிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும், அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும், முன்னும் பின்னும் கண்களால் நிறைந்த நாலு ஜீவ ஜெந்துக்கள் இருந்தன.
* 6. சிங்காசனத்துக்குமுன் இருந்த கண்ணாடிச் சமுத்திரமென்பது, சர்வேசுரனுடைய அளவற்ற ஞானத்துக்கும் அறிவுக்கும் குறிப்பாகும்: பளிங்கின் வழியாய்ப் பொருட்களை ஊடறுத்துப் பார்ப்பதுபோல், சுவாமி தமது ஞானத்தின் வழியாய்த் தமது சகல கிரியைகளையும், தாம் படைத்ததும் படைக்கக்கூடியதுமான சகலத்தையும் அறிந்திருக்கிறார் என்க.
7. முதலாம் ஜீவஜெந்து சிங்கத்துக்கு ஒப்பாகவும், இரண்டாம் ஜீவ ஜெந்து காளைக்கன்றுக்கு ஒப்பாகவும், மூன்றாம் ஜீவஜெந்து மனுஷனைப் போல் முகரூபம் உடையதாகவும், நாலாம் ஜீவஜெந்து பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவும் இருந்தது.
* 7 . நாலு ஜீவஜெந்துக்கள் என்பது பொதுவான அர்த்தத்தில் சமஸ்த சிருஷ்டிகளையுங் குறிக்கிறதென்றும், விசேஷித்த அர்த்தத்தில் நாலு சுவிசேஷகரைக் குறிக்கிறதென்றும் வேதபாரகர் சொல்லுகிறார்கள். சிங்கமுகமுள்ளது அர்ச். மாற்குவின் சாயலாம். ஏனெனில் அவர் சிங்கத்தின்வாசமாகிய வனத்திலே ஸ்நாபக அருளப்பர் பிரசங்கித்ததைக்கொண்டு தமது சுவிசேஷத்தை ஆரம்பிக்கிறார். காளைக்கன்று அர்ச். லூக்காஸூக்குச் சாயலாம். ஏனெனில் அவர் பலியிடுகிற குருப்பிரசாதியாகிய சக்கரியாசுக்குத் தேவதூதன் தரிசனமான வர்த்தமானத்திலிருந்து தமது சுவிசேஷத்தைத் துவக்குகிறார். மனுஷ முகம் அர்ச்.மத்தேயுவுக்குச் சாயலாம். ஏனெனில் அவர் சேசுநாதருடைய வம்ச வரிசையைக் கொண்டு தமது சுவிசேஷத்தைத் துவக்குகிறார். கழுகினால் அர்ச். அருளப்பர் குறிக்கப்படுகிறார். ஏனெனில் அவர் தம்முடைய சுவிசேஷத்தின் ஆரம்பத்திலேயே பூமியை விட்டெழும்பி, வானத்தை நோக்கி உயர்ந்து பறந்தாற்போல், சேசுநாதருடைய தேவசுபாவத்தை எடுத்துரைக்க ஆரம்பிக்கிறார். முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்கள் நிறைந்தவைகள் என்பது இஸ்பிரீத்துசாந்துவானவர் கொடுத்த அறிவாகிய வரமாம்.
8. அந்த நான்கு ஜீவஜெந்துக் களில் ஒவ்வொன்றும் ஆறு சிறகுகள் உடையவைகளுமாய், உள்ளும், சுற்றிலும் கண்களால் நிறைந்தவைகளுமாய் இருந்தன. அவைகள் இரவும் பகலும் ஓய்வின்றி: இருந்தவரும், இருக்கிற வரும், இனி வருபவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய சர்வேசுரன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று சொல்லிக்கொண்டிருந்தன. (இசை. 6:3.)
9. அப்படியே, சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் ஜீவியராயிருக்கிறவருக்கு அந்த ஜீவ ஜெந்துக்கள் மகிமையையும், ஸ்தோத் திரத்தையும் செலுத்தும்போது,
10. இருபத்து நான்கு வயோதிகரும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக் கிறவர் முன்பாகச் சாஷ்டாங்கமாக விழுந்து, சதாகால ஜீவியரை ஆராதித்து, அவருடைய சிங்காசனத்துக்கு முன்பாகத் தங்கள் கிரீடங்களை வைத்து:
11. எங்கள் கர்த்தராகிய சர்வேசுரா, தேவரீர் மகிமையையும், மேன்மையையும், வல்லமையையும் அடைந்து கொள்வதற்குப் பாத்திரராயிருக்கிறீர். ஏனெனில் தேவரீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர். உமது சித்தத்தினாலேயே சகலமும் இருந்தன, சகலமும் சிருஷ்டிக் கப்பட்டன என்று தொழுதார்கள். (தானி. 7:10.)