உலகப் பற்றுதலெல்லாம் விட்டு, மேலானவைகளை நாடவேண்டுமென்று போதிக்கிறார்.
1. ஆகையால் எவ்வித துர்க்குணத்தை யும், எவ்வித கபடத்தையும், எவ்வித அபி நயத்தையும், பொறாமைகளையும், எவ்வித புறணிகளையும் ஒழித்துவிட்டு, (உரோ. 6:4; எபே. 4:22; எபி. 12:1; கொலோ. 3:8.)
2. இப்போதே பிறந்த பிள்ளைகளைப் போல், கலப்பில்லாத ஞானப்பாலை உண்டு இரட்சணியத்துக்காக வளரும்படி அதன் மேல் விருப்பமாயிருங்கள்.
* 2. ஞானப்பால் என்பது ஞான உபதேசமென்று அர்த்தமாம். பிறந்த குழந்தை வளர்ந்து பலப்படுவதற்குப் பால் ஆதாரமாவதுபோல, ஞானஸ்நானத்தினால் மறுபிறப்படைந்தவர்கள் இரட்சணியத்துக்காக வளர்ந்து பலப்படுவதற்கு ஞான உபதேசமாகிய ஞானப்பாலை ஆவலோடு தேடிச் சாப்பிடவேண்டியது.
3. ஆண்டவர் மதுரமுள்ளவரென்று நீங்கள் ருசிபார்த்திருந்தாலல்லோ (இப் படிச் செய்வீர்கள்).
4. மனிதர்களால் தள்ளப்பட்டதாயினும், சர்வேசுரனால் தெரிந்து, மகிமைப்படுத்தப் பட்ட ஜீவனுள்ள கல்லாகிய அவரை அண்டினவர்களாய்,
* 4. ஜீவனுள்ள கல்:- சேசுநாதர் ஞான ஜீவியத்திற்கு ஊற்றும் மூலமுமாயிருப்பதினாலே அவர் ஜீவனுள்ள கல் என்னப்படுகிறார்.
5. நீங்களும் ஜீவனுள்ள கற்களைப் போல சேசுக்கிறீஸ்துவின் வழியாய்ச் சர்வேசுரனுக்கு உகந்த ஞானப் பலிகளை ஒப்புக்கொடுக்கும்படி, பரிசுத்த குருத்துவமும், ஞான மாளிகையு மாகக் கட்டுப்பட்டு எழும்புங்கள்.
* 5. கிறீஸ்துவர்கள் அனைவரும் ஜீவக்கல்லாகிய சேசுநாதரிடத்திலிருந்து பொழிந்துவரும் தேவசிநேகத்தைப் பெற்று, அந்தச் சிநேகத்தால் அவரிடத்தில் நிலைமையாய் ஒன்றித்திருந்து தர்மக்கிரியைகளைச் செய்துவருவதினால், தாங்களே ஜீவக்கற்களாய் அவரிடத்தில் கட்டப்படுகிற ஞான மாளிகையைப்போலாவதுமன்றி, பரிசுத்த ஆசாரியக் கூட்டமு மாகிறார்கள். சேசுநாதர் இவ்வுலகத்திலிருக்கும்போது, தமது தேவபிதாவை ஸ்தோத்தரித்து எவ்விதம் தம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்தாரோ, அந்தக் கருத்தோடு அவர்களும் தங்கள் தவம், ஒறுத்தல், ஜெபம் முதலிய புண்ணியக்கிருத்தியங்களை ஒப்புக்கொடுக்கும்போது சர்வேசுரனுக்கு உகந்த ஞானப் பலிகளாகிறார்கள்.
6. இதனிமித்தமே, இதோ தெரிந்து கொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமான முக்கிய மூலைக்கல்லை சீயோன் நகரில் வைக்கிறேன்; அதன்மேல் விசுவாசமாயிருக்கிறவன் கலங்கமாட்டான் என்று வேதத்திலே சொல்லியிருக்கின்றது. (இசை. 28:16; உரோ. 9-33.)
7. ஆகையால் விசுவசிக்கிறவர்களாகிய உங்களுக்கு அது மகிமையாயிருக்கின்றது. விசுவசியாதவர்களுக் கோ, கொத்தர்களால் தள்ளுண்டு, மூலைக்குத் தலைக்கல்லாகிய அந்தக் கல், (சங். 117:22; மத். 21:42.)
8. அவர்களுக்கு இடறுகல்லாகவும் தவறிவிழுவதற்கு ஏதுவான கற்பாறையாகவும் இருக்கின்றது. அவர்கள் விசுவசியாததினிமித்தம் தேவ வாக்கியத்துக்கு விரோதமாய் இடறுகிறார்கள். அப்படி இடறுவதற்கே அவர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.
9. நீங்களோ, இருளினின்று உங்களைத் தமது ஆச்சரியமான ஒளிக்கு அழைத்தவருடைய வல்லப செய்கைகளைப் பிரசித்தமாக்கும்படிக்கு, தெரிந்து கொள்ளப்பட்ட வம்சமும், இராஜரீக ஆசாரியக் கூட்டமும், பரிசுத்த ஜனமும், அவருடைய சம்பாத்திய பிரஜைகளுமாயிருக்கிறீர்கள். (யாத். 19:5, 6.)
* 9. தெரிந்துகொள்ளப்பட்ட வம்சம்:- பூர்வத்தில் இஸ்ராயேல் ஜனங்கள் சர்வே சுரனால் தெரிந்துகொள்ளப்பட்ட பிரஜைகளாயிருந்ததுபோல், கிறீஸ்துவர்கள் எல்லாரும் சர்வேசுரனுடைய விசேஷ கிருபைபெற்ற ஜனங்களாயிருக்கிறார்கள். (இசை. 43:20, 21.) இராஜரீக ஆசாரியக்கூட்டம்:- சர்வேசுரன் இஸ்ராயேல் ஜனங்களைத் தமக்கு இராஜரீகக் குருத்துவமுடையவர்களாகத் தெரிந்துகொண்டதுபோல், கிறீஸ்துவர்களையும் சேசுநாதரிடத்தில் தெரிந்துகொண்டார். ஆகையால் கிறீஸ்துவர்கள் எல்லாரும் கிறீஸ்து நாதருடைய இராஜத்துவத்துக்கும் அவருடைய குருத்துவத்துக்கும் பங்காளிகளாயிருக்கிறார் களென்று அர்த்தமாம். (யாத். 19:6.)
10. ஒருகாலத்தில் சர்வேசுரனுடைய ஜனங்களாயிராத நீங்கள் இப்பொழுது அவருடைய ஜனங்களாயிருக்கிறீர் கள். முன்னே இரக்கம் பெறாதிருந்த நீங்கள் இப்போது இரக்கம் பெற்ற வர்களாயிருக்கிறீர்கள். (ஓசே. 2:24; உரோ. 9:25.)
11. மிகவும் பிரியமானவர்களே, நீங்கள் அந்நியரும் வழிப்போக்கருமாயிருக்கக்கொள்ள, ஆத்துமத்துக்கு விரோ தமாய்ப் போராடுகிற மாம்ச இச்சை களை விட்டு விலகி, (உரோ. 13:14.)
12. புறஜாதியார் உங்களைக் குறித்து, நீங்கள் அக்கிரமிகளென்று அவதூறு சொல்லும்போதே அவர்கள் உங்கள் நற்கிரியைகளால் உங்களை மதித்து, சந்திப்பின் நாளிலே சர்வேசுரனை ஸ்துதிக்கும்படியாக, நீங்கள் அவர்கள் நடுவில் நன்னடக்கையுள்ளவர்களா யிருக்கவேண்டுமென்று உங்களை மன் றாடுகிறேன்.
13. ஆகையால் சர்வேசுரனைப் பற்றிச் சகல மனுஷ சிருஷ்டிக்கும் கீழ்ப்படிந்திருங்கள். (உரோ. 13:1.)
14. இராஜாவானால், எல்லாரிலும் மேன்மைப்பட்டவனாய் இருப்பதினா லே அவனுக்கும், அதிகாரிகளானால் துஷ்டர்களைத் தண்டிப்பதற்கும், நல்ல வர்களைப் புகழுவதற்கும் அவனால் அனுப்பப்பட்டவர்களாயிருப்பதினா லே, அவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
15. இந்தப்பிரகாரமாய் நீங்கள் நன்மையைச் செய்வதினால், மதியீன மனிதருடைய அறியாமையை அடக்குவது சர்வேசுரனுடைய சித்தமாமே.
16. உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடுபோர்வையாகக் கொள் ளாமல், மெய்யாகவே சுயாதீனராய், சர்வேசுரனுடைய ஊழியரைப்போல் பணிந்து நடங்கள்.
17. எல்லாருக்கும் மரியாதை செய்யுங்கள். சகோதரரை நேசியுங்கள். சர்வே சுரனுக்குப் பயந்திருங்கள். இராஜாவுக் குச் சங்கை செய்யுங்கள். (உரோ. 12:10.)
18. ஊழியர்களே, உங்கள் எஜமான்களுக்கு எவ்வித அச்சத்தோடும் கீழ்ப்படிந்திருங்கள். நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல, முரட்டுக் குணமுள்ளவர்களுக்கும் பணிந்திருங்கள். (எபே. 6:5.)
19. ஏனெனில் சர்வேசுரனைச் சார்ந்த மனச்சாட்சியினால் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு, உபத்திரவங்களைப் பொறுமையோடு சகித்தால் அதுவே அவருக்குப் பிரியமாயிருக்கும்.
* 19. இந்த வாக்கியத்துக்கு அர்த்தமேதென்றால், ஒருவன் தான் துன்பப்படுவது சர்வேசுரனுடைய சித்தமென்று அறிந்து, அப்படித் துன்பப்படுவது சர்வேசுரனுடைய சித்தமானதால், தனக்குக் கடமையென்று எண்ணி, அதைப் பொறுமையோடு சகித்துக்கொண்டால், தேவசமுகத்தில் தகுதியாயிருக்கும்.
20. ஏனெனில் நீங்கள் குற்றஞ் செய்து கன்னத்தில் அறையப்படும்போது, சகித்துக் கொள்வதினால் உங்களுக்குப் பெருமை என்ன? ஆனால் நன்மை செய்யும்போது பொறுமையோடு துன் பங்களைச் சகித்தால், அதுவே சர்வே சுரனுடைய சமுகத்தில் உகந்ததா யிருக்கும். (மத். 5:10.)
* 20. அநீதமாய்த் தங்கள் எஜமான்களால் துன்பப்படுகிற ஊழியர் பொறுமையோடு அந்தத் துன்பங்களை அநுபவிக்கிறது சர்வேசுரனுக்கு உகந்ததாயிருக்குமென்று இவ்வாக்கியத்தால் அறிக.
21. இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் கிறீஸ்து நாதரும் நமக்காகப் பாடுபட்டு, தம் முடைய அடித்தடங்களை நீங்கள் பின்பற்றும்படியாக உங்களுக்கு மாதிரி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.
22. அவர் பாவம் செய்யவுமில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப் படவுமில்லை. (இசை. 53:9.)
23. அவர் தூஷணிக்கப்படும்போது, தூஷணித்தவருமல்ல. பாடு படும்போது மிரட்டினவருமல்ல. ஆனால் அநியாய மாய்த் தமக்குத் தீர்ப்பிட்டவனுக்குத் தம்மை ஒப்புவித்தார்.
24. நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி, அவர் தாமே சிலுவைமரத்தின்மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவரு டைய காயங்களினால் சொஸ்தமாக்கப் பட்டீர்கள். (இசை. 53:5; 1 அரு. 3:5.)
25. சிதறிப்போன ஆடுகளைப் போல் இருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமங்களுக்கு மேய்ப்பரும் அத்தியட்சருமானவரிடத்தில் திரும்பி வந்திருக்கிறீர்கள்.