அர்ச். இராயப்பர் திருச்சபைக்கு எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 01

நம்மை விசுவாசத்துக்கும் நித்திய ஜீவியத்துக்கும் அழைத்தருளின சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரஞ்சொல்லி, கிறீஸ்துநாதருடைய இரத்தத்தினாலே இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம் மிகுந்த பரிசுத்தத்தோடே நடக்க வேண்டியதென்று காண்பிக்கிறார்.

1. சேசுக்கிறீஸ்துநாதருடைய அப்போஸ்தலனாகிய இராயப்பன், போந்து, கலாத்தியா, கப்பதோசியா, ஆசியா, பித்தினியா தேசங்களில் சிதறியிருக்கிற வர்களில்,

2. பிதாவாகிய சர்வேசுரனுடைய முன்னறிவின்படியே, இஸ்பிரீத்துசாந் துவின் பரிசுத்தமாக்குதலுக்கும், கீழ்ப் படிதலுக்கும், சேசுக்கிறீஸ்துநாதரு டைய இரத்தத் தெளிப்புக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுது வது: உங்களுக்கு வரப்பிரசாதமும் சமாதானமும் மென்மேலும் உண்டா வதாக.

3. நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவின் பிதாவாகிய சர்வேசுரன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவர் தம்முடைய இரக்கப் பெருக்கத்தின் படியே மரித்தோரிலிருந்து உயிர்த்த சேசுக் கிறீஸ்துநாதருடைய உத்தானத்தின் வழியாய் ஜீவனுள்ள நம்பிக்கைக்கும், (2 கொரி. 1:3; எபே. 1:3.)

4. அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்திரத்துக்கும் நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார்.

5. கடைசிக்காலத்தில் வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சணியத்துக்கு விசுவாசத்தைக் கொண்டு சர்வேசுர னுடைய வல்லமையால் காப்பாற்றப் பட்டிருக்கிறவர்களாகிய உங்களுக்கு அந்தச் சுதந்திரம் மோட்சத்தில் பத்திர மாய் வைக்கப்பட்டிருக்கிறது.

6-7. அக்கினியிலே சோதிக்கப்படுகிற பொன்னைப்பார்க்கிலும், அதிக விலையேறப்பெற்றதாகிய உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது சேசுக்கிறீஸ்துநாதர் வெளிப்படும்போது, உங்களுக்குப் புகழ்ச்சியாகவும், மேன் மையாகவும், மகிமையாகவும் காணப் படும்பொருட்டு, இப்பொழுது சொற் பக்காலம் பலவித சோதனைகளி னாலே துக்கப்படவேண்டியிருந்தா லும், அந்தச் சுதந்திரத்தை நினைத்து, நீங்கள் அக்களிப்பீர்கள். (பழ. 17:3.)

8. அவரை நீங்கள் காணாதிருந்தும், சிநேகிக்கிறீர்கள்; இப்போது நீங்கள் அவரைத் தரிசியாதிருந்தும், அவரை விசுவசிக்கிறீர்கள். விசுவசித்து,

9. உங்கள் விசுவாசத்தின் கதியாகிய ஆத்தும இரட்சணியத்தை அடைவீர்களென்பதால், வாக்குக்கெட்டாத தும், மகிமை நிறைந்ததுமான சந்தோ ஷத்தால் அகமகிழுவீர்கள்.

10. உங்களுக்கு வரவேண்டியிருந்த இந்த வரப்பிரசாதத்தைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசிகள் இந்த இரட்சணிய இரகசியத்தை ஆராய்ந்து, தியானித்தார்கள். (மத். 13:17.)

11. இவர்கள், கிறீஸ்துநாதர் படும் பாடுகளையும், அதற்குப்பின் அவருக்கு வரவேண்டியிருந்த மகிமைகளையும் தங்கள் உள்ளத்திலிருந்து தங்களுக்கு முன்னறிவித்த கிறீஸ்துவின் இஸ்பிரீத்துவானவர் எந்தக்காலத்தையும், எவ்விதமான காலத்தையும் குறித்தாரென்று ஆராய்ந்தார்கள்.

12. அவர்கள் தங்கள் நிமித்தமாக அல்ல, உங்கள் நிமித்தமாகவே அவைகளை வெளிப்படுத்தினார்களென்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தேவ தூதர் உற்றுத் தரிசிக்க விரும்புகிறவரும் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டவரு மாகிய இஸ்பிரீத்துசாந்துவைக்கொண்டு உங்களுக்குச் சுவிசேஷத்தைப் போதித்த வர்களாலே இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. (எபே. 3:10.)

13. ஆதலால், உங்கள் மனதின் இடையை வரிந்துகொண்டு, உள்ளடக்க முள்ளவர்களாய், சேசுக்கிறீஸ்துநாதர் வெளிப்படும் காலத்திற்காக உங்களுக்கு அளிக்கப்படுகிற வரப்பிரசாதத்தின் பேரில் பூரண நம்பிக்கையாயிருங்கள்.

14. நீங்கள் அறியாமையினாலே முன் கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிதலுள்ள பிள்ளை களாய்,

15. உங்களை அழைத்த பரிசுத்தரைப்போல், நீங்களும் உங்கள் சர்வ நடபடிக்கைகளிலும் பரிசுத்தராயிருங்கள்.

16. ஏனெனில், நாம் பரிசுத்தராயிருக்கிறபடியால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கின்றது. (லேவி. 11:44; 19:2; 20:7.)

17. அன்றியும், பாரபட்சமில்லாமல், அவனவனுடைய கிரியைகளின்படியே நடுத்தீர்க்கிறவரை நீங்கள் பிதா என்று அழைத்தால், இங்கே நீங்கள் பரதேசி களாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்தோடே நடந்துகொள்ளுங்கள். (உபாக. 10:17; உரோ. 2:11; கலாத். 2:6; மலக். 1:6.)

* 17. பயத்தோடே நடந்துகொள்ளுங்கள் என்பதற்கு 1-வது, சர்வேசுரன் நமக்குப் பிதாவாயிருக்கிறதினாலே, பெற்ற தகப்பனைப் பிள்ளை மனநோகப் பண்ணுவதற்குப் பயந்து தகப்பனுக்கு ஏற்க நடப்பதுபோல், நாமும் சர்வேசுரன் மட்டில் பக்தியோடும், பயத்தோடும் நடக்கக்கடவோம் என்றும், 2-வது, சர்வேசுரன் நமக்குப் பிதாவாயிருக்கிறதுமன்றி, நம்மை நடுத்தீர்க்கிற நியாயாதிபதியாகவும், பாரபட்சமில்லாதவரும் கோணாத நீதியுள்ள நடுவருமாயிருப்பதினால் அவருக்குப் பயந்து நடக்கக்கடவோம் என்றும் கருத்தாகும்.

18. உங்கள் பிதாக்கள் வழியாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான ஆசாரங்களினின்று அழிவுள்ள பொன்னினாலும், வெள்ளியினாலும் நீங்கள் இரட்சிக்கப்படாமல்,

19. மாசுமறையற்ற ஆட்டுக்குட்டிக் கொப்பாகிய கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறீர்கள். (1 கொரி. 6:20; 7:23; எபி. 9:14; 1 அரு. 1:7; காட்சி. 1:5.)

20. அவர் உலக ஆரம்பத்துக்கு முன் குறிக்கப்பட்டவராயிருந்து, இந்தக் கடைசிக்காலங்களில் உங்களுக்காக வெளிப்பட்டார்.

21. அவர் வழியாகவே நீங்கள் சர்வேசுரன்பேரில் விசுவாசமாயிருக்கி றீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் தமதுபேரிலிருக்கும்படி சர்வேசுரன் அவரை மரித்தோரினின்று உயிர்ப்பித்து, அவருக்கு மகிமையைக் கொடுத்திருக்கிறார்.

22. ஆகையால் நீங்கள் பரம அன்பின் கீழ்ப்படிதலினாலே உங்கள் ஆத்துமங்களைச் சுத்தமாக்கியிருக்க, சகோதர சிநேக விஷயத்தில் நேர்மையான மனதோடு ஒருவரையொருவர் அதிக ஊக்கமாய் நேசிக்கக்கடவீர்கள்.

23. ஏனெனில் அழிவுள்ள வித்தினாலேயல்ல; ஜீவியரும் என்றென்றைக்கும் நிலைநிற்பவருமாகிய கடவுளுடைய வார்த்தையான அழியா வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்கப் பட்டிருக்கிறீர்கள்.

* 22-23. நாம் ஒருவரையொருவர் அன்போடு சிநேகிப்பதற்கு நாம் அடைந்திருக்கிற மறுபிறப்பே ஆதாரமான முகாந்தரமாகும். நமது வெளி நிலைமையும் அந்தஸ்தும் எப்படியிருந்தாலும், ஞானஸ்நானத்தின் வழியாய் நாம் அடைந்த மறுபிறப்பினாலே நாம் எல்லாரும் சர்வேசுரனுடைய பிள்ளைகளாகவும், ஒருவருக்கொருவர் சமானஸ்தராகவும், சகோதரராகவும் இருக்கிறோம். அழிவுக்குரிய வித்தினால் அல்ல, அழியா வித்தாகிய நித்திய கடவுளுடைய வாக்கியத்தை விசுவசித்து, ஞானஸ்நானத்தால் அந்தக் கடவுளுக்கு நாம் பிள்ளைகளாகிறதினால், ஒருவரையொருவர் குறையற்ற சிநேகத்தோடு நேசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

24. ஏனெனில் மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மகிமை யெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கின்றது. புல் உலர்ந்து, அதன் பூவும் உதிர்ந்தது. (இசை. 40:6, 7; இயா. 1:10, 11; சர்வப். 14:18.) 

25. ஆண்டவருடைய வார்த்தையோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது; உங்களுக்குச் சுவிசேஷிக்கப்பட்டதே இந்த வார்த்தை.