தேவ ஆராதனைக்கு விரோதமான பாவங்கள்

128. முதல் கற்பனையால் விலக்கப்பட்ட பாவங்கள் எவை?

தேவ ஆராதனைக்கு விரோதமாயிருக்கிற விக்கிரக  ஆராதனை, அஞ்ஞான சாஸ்திரம், பேய் ஊழியம், தேவதுரோகம், தேவ ஊழியத்தில் அசட்டைத்தனம் முதலியவைகளாம்.


1. முதல் கற்பனைக்கு விரோதமாய் எப்படிப் பாவம் கட்டிக் கொள்ளப் படுகிறது?

குருட்டுப் பக்தியாலும் அவபக்தியாலும் முதற் கற்பனைக்கு விரோதமாய் நாம் பாவம் கட்டிக் கொள்கிறோம்.


2. குருட்டுப் பக்தி ஆவதென்ன?

நம்மைத் தேவபக்தியில் அளவுகடந்த விதமாய் நடந்து கொள்ள ஏவும் துர்க்குணம்.


3. அவபக்தி என்றால் என்ன?

நம்மைத் தேவபக்தியில் பக்தியற்ற விதமாக அல்லது மரியாதைக் குறைச்சலோடு நடந்து கொள்ளச் செய்யும் துர்க்குணம்.