தீயகுணபான்மை ஏற்படுவது - விசேஷ தீக்குணங்கள்

86. குணபான்மையை அடைவதில் நாம் கவனிக்கத்தக்கது யாது? 

இரண்டு காரியங்கள் கவனிக்கத்தக்கது ; முதலாவது தாம் நீக்கவேண்டிய தீய குணங்கள். இரண்டாவது பயிற்சிக்க வேண்டிய நற்குணங்கள். 

87. தீக்குணம் என்பது என்ன?

புத்தியிலும், மனதிலும், ஆழமாய் வேரூன்றிப் பாவப் பழக்கத்தை உண்டாக்கும் துர் நாட்டம், தீக்குணம் எனப்படும்.

88. நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய தீய குணங்கள் யாவை?

அகங்காரம். பேராசை, காய்மகாரம் அல்லது பொறுமை கோபம், மோகம், போசனப்பிரியம், சோம்பல் ஆகிய ஏழு தீய குணங்களாகும். 

89. எல்லாத் தீயசெயல்களையும், "தீயகுணம்', என்று ஏன் சொல்லக்கூடாது? 

சில தீச்செயல்கள். பாவப்பழக்கத்தால் உண்டாவன அல்ல. ஏதோ ஒரு விசேஷ சோதனை அல்லது உள்ளக் கிளர்ச்சியால் நேரிடுகின்றன. அடிக்கடி இவை ஏற்படுவ தில்லை. சமயாசமயங்களில் விளைகின்ற பாவங்கள் எடுத் துக் காட்டாக கொலை, கொள்ளை, பொய். பெரியோருக்குக் கீழ்ப்படியாமை, பொய்ப்பத்திரம் உண்டாக்குவது முதலி யன. தீயகுணம் இப்படிப்பட்ட தல்ல. ஓருவனின் குண பானமை அதாவது அவனுடைய இயல்பைக் காட்டுவது, இந்தச் சமயத்தில்தான் அது பாவமாகும் என்று திட்ட மாய்க் கூற முடியாது. எந்தச் சமயத்திலும் அது பாவத் துக்கு வழியாகக் கூடும்.