90. அகங்காரம் என்றால் என்ன?
அகம் + காரம், தான் என்னும் ஆணவம், நமக்கு மேற்பட்டவர்களையும், கீழ்ப்பட்டவர்களையும் அவமதிக்கும் விதமாகத் தன்னைத்தானே பெருமையாக எண்ணுதல் அகங்காரம் அல்லது ஆங்காரம் எனப்படும்.
91. நமக்கு மேற்பட்டவர்கள் மீது நமது ஆங்காரத்தைக் காட்டுவது எப்படி?
நாம் வைத்ததே சட்டம் என்பது போல, பிறர் சொல்வதைக் கவனியாமல், தன் இஷ்டம்போல் நமக்குத் தேடு வதினாலும், கடவுளையும் அவரது பிரதிநிதிகளான ஞான உலக அதிகாரிகளையும் அவமதித்து, அவர்களுக்கு விரோதமாய் புரட்சி செய்வதாலும் நமது ஆங்காரத்தைக் காட்டிக் கொள்கிறோம்.
92. நமக்குக் கீழ்ப்பட்டவர்கள் மட்டில் நமது ஆங்காரம் எவ்வாறு வெளியாகிறது?
அவர்களை நிந்தித்துக் கொடுமையாக நடத்துவதால் வெளியாகிறது.
93 ஆங்காரத்தோடு தொடர்புடைய வேறு தீயகுணங்கள் யாவை?
தற்பெருமை; அதாவது தனக்குள்ள திறமை. அறிவு முதலிய குணங்களைப் பாராட்டி, அனைவரிலும் தன்னை மேலாக நினைத்து நினைத்து. தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுதல். தொட்டால் சுருங்கிபோல, அற்ப சொற்ப காரியத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்வது. வீண் பெருமை அல்லது தான் செய்த மிகச்சிறிய காரியமும் தனக் குச் சிறப்பு என்பதாக நினைத்து, அதைப்பற்றி மகிழ்ச்சி அடைவது; தனது உரிமைகள், தத்துவங்கள், சக்தி ஆகியவை பற்றிய தவறான எண்ணத்தால், ஏற்படும் செருக்கு, கர்வம், தனது திறமையைப்பற்றியும் செயல்களைப் பற்றியும், யாவரும் அறிய விளம்பரப்படுத்திப் பெருமைப் பாராட்டல், பிறரை அவமதித்தல், பிறரைத் தன்னோடு ஒப் பிட்டுப் பார்த்து. அவர்களை இழிவுபடுத்தல் தன்னுடைய திறமையைக் காட்டும்படி பட்டம், பதவி, அதிகாரம் மகிமைக்கு ஆசைப்படுதல், கொடுங்கோன்மை அல்லது பிறரைத் தன் அடிமைகளாகப் பாவித்தல் ஆகிய இவை போன்றவைகளாம்.
"சாதாரணமாய், பெருந்தப்பிதங்கள் அனைத்துக்கும் மூலகாரணம் ஆங்காரம். மற்ற சகல ஆசாபாசங்களாலும் சமயாசமயங்களில் நன்மை விளைவதுண்டு. ஆனால் ஆங்காரம் எங்கே தலைகாட்டுமோ அங்கே எல்லாம் பாழ்; சர்வ நாசம் தான். அமைதியாகக் குற்றமற்றவிதத்தில் செய்யக் கூடியதை எல்லாம் ஆங்காரமாய்ச் செய்வது ஆபத்துக்கு இடந்தரும்'' என்பது அறிஞர் ரஸ்கின் ( Ruskin) என்ப வரின் பொன்மொழியாகும்.
94. ஆங்காரத்திலும் நல்லவிதமான ஆங்காரம் உண்டா ?
எல்லாவற்றிலும் சிறந்ததைச் செய்யத்தேடும் மேன்மை யான குணம் ஒன்று உண்டு. இந்தக் குணம் உள்ள வனுக்கு சிறந்த மேலான நற்கிரிகைகளைச் செய்வதே இன் பம். அவன் ஒரு போதும் இழிவானதையோ தவறான தையோ செய்யமாட்டான். ஒருவன் நேர்மையானவன், உண்மையுள்ளவன், உள்ள உறுதியுடையவன், ஆண்மை யுடையவன், தன்மதிப்புள்ளவன்'' - என்று அவனைப் புகழும் போது. இந்த அர்த்தத்தில் தான் சொல்லுகிறோம். இது ஆங்காரம் என்னும் தீய குணம் அல்ல; நன்மைத் தனத்திலும், புண்ணியத்திலும் உள்ள உயர்ந்த விருப்பமே ஆகும்
95. தன் திறமை, சாமர்த்தியம், நிலைமையைப் பற்றி பெருமை கொள்வது சரியா?
நம்மிடத்தில் அமைந்துள்ள நற்குணங்களைப்பற்றியும், நமது உயர்ந்த நிலையைப்பற்றியும் நம்மை அனைவருக்கும் மேலாக எண்ணாதவரை இவற்றைப்பற்றி மகிழ்ச்சி அடைவது குற்றமல்ல. ஆங்காரத்துக்கும், அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய குற்றங்களுக்கும், இத்தகைய மகிழ்ச்சி காரணமாகும் போதுதான் இது தீயகுணமாகும்.