விரோதமான தீயகுணங்கள்

84. மேற்கூறிய புண்ணியங்களைக் கைக்கொள்ளாமல் அவற்றிற்கு எதிராக, ஓருவன் வாழந்தால், அவனுடைய நடத்தையைப்பற்றி என்ன சொல்வோம்? 

சமயாசமயங்களில் புண்ணியங்களுக்கு மாறாக, ஓரோர் காரியம் செய்தால், அதைப் பாவம் என்று சொல்வோம். ஆனால் வழக்கமாய் அதைச் செய்துவந்தால் அவனைத் தீய நடத்தை உடையவன் என்கிறோம்.

85. தீயகுணங்கள், புண்ணியங்களுக்கு விரோதமாவது எங்ஙனம்? 

ஒவ்வொரு தீய குணமும் "விமரிசைக்கு'' - விரோதமானதே. ஏனெனில் தகுந்த காரியத்தைப்பற்றி சிந்திக்காமல் இருப்பதும், அல்லது அது வெற்றிகரமாக முடிவதற்குரிய வழிவகைகளைத் தேடாமல் இருப்பதும், பாவத்துக்குக் காரணம்! அது போலவே ஒவ்வொரு தீய குணமும் "நீதிக்கு விரோதம். ஏனென்றால் கடவுளுக்கு, நமக்கு அல்லது பிறருக்குத் தீங்கு விளைகிறது பாவத்தால் தான். மேலும் ஒவ்வொரு தீயகுணமும் '' தைரியம் அல்லது திடம் '' என்னும் புண்ணியத்துக்கு விரோதம் ; ஏனெனில் மனத்திடம் இல்லாதபடியால் தான் துன்பத்துக்குப் பயந்து பாவம் செய்கிறோம்.

இறுதியாக ஒவ்வொரு தீயகுணமும் "மிதமுடமை அல்லது மட்டாயிருத்தலுக்கு விரோதம்' - எனலாம். ஏனெனில் ஏறக்குறைய எல்லாபாவமும் நமது சுகத்தையும் இன்பத்தையும் தேடுவதால்தான் உண்டாகிறது