பிறர் சிநேகம்

45. நீதிக்கும் பிறர் சினேகத்துக்குமுள்ள வேறுபாடு யாது? 

பிறருக்கு உரியதை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று நீதி கூறுகிறது; ஆனால் பிறர் சினேகமோ, அவனி டம் இல்லாத பொருளை, ஆனால் அவனுக்குத் தேவைப்படு வதை நாம் மிகுந்த அளவில வைத்திருந்து அதன் தேவை நமக்கு அவசியம் இல்லாதிருக்கும் போது, அதனை நமது பிறனுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என எதிர்பார்க் கிறது. நீதியானது ஒருவனுடைய உரிமை; அதன் இயல்பு பொறுப்புணர்ச்சி, கடமை ஆகியவற்றினை அறுதியிட்டுக் கூறுகிறது. பிறர் சிநேகமோ இந்தவிஷயங்களில் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை. ஒருவன் மிக நெருக்கடியான நிலைமையில் இருக்கும் போது மட்டுமே உதவி செய்ய வேண்டும், என்றாலும் இயல்பாகவே பிறர் சிநேகத்தின் அளவு மிகவும் விரிந்து பரந்திருப்பதாகும்.

46. பிறர் சிநேகத்தைப் பொறுத்த கடமைகள் நீதியைப்போல் நம்மைக் கட்டுப்படுத்து வதில்லையா?

அதைப்பற்றித் திட்டவட்டமாய் கூற முடியாது. ஆனால் நீதியினால் ஏற்பட்டுள்ள கடமைகளை அனுசரிக்க வேண் டியது போல் நாம் மனமிரங்கி மற்றவர்களுக்கு உதவி செய் வதை கடமையாகக்கொள்ளவேண்டியதில்லை. அது நமது இரக்கத்தையும், தாராள குணத்தையும் பொறுத்து அமை வது. 

47. பிறர் சிநேகச் சட்டம், நாம் பிறருக்கு நமது உடமைகளை பகிர்ந்தளிப்பதை மட்டும் தானா கற்பிக்கிறது? 

இல்லை. எல்லாவிதமான உதவியையும் நாம் பிறருக் குச் செய்யவேண்டும் என்று கற்பிக்கிறது. உடலுக்கடுத் ததும், ஆன்மாவுக்கடுத்ததுமான சகலத்திலும் நாம், நமது பிறனுக்கு உதவி செய்யவேண்டும். அவனுக்கு நம்மால் இயன்ற உடலுழைப்பையும், அனுதாபம், அறிவுரை, அற வுரை, மருத்துவ உதவி, பொருளாதார உதவிகளையும் செய்யவேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக அவனது ஆன்மீக விஷயத்தில் உதவி செய்ய மிகவும் கடமைப்பட் டிருக்கின்றோம்.

48. பிறனுக்கு உதவுவது எவ்வாறு?

நமது உற்றார், உறவினர். பெற்றோர், சுற்றத்தார் முதலியவர்கள் நமக்கு நெருங்கிய தொடர்புடைய அயலார் ஆவர். ஆனால் மக்கள் யாவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையில் அனைவரும் நமது அயலாரே ! மேலும் கடவுள் நமக்களித்துள்ள நன்கொடைகளுக்கும், நமது பொறுப்பில் ஒப்படைத்திருக்கும் பொருட்களுக்கும் அவ ருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நம்மைச் சுற்றிலும் வசிக்கும் மக்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளு கிறோம் என்றும் அவர்களும் கடவுளால் நமக்குக் கொடுக்கப் பட்ட உதவியாளர்கள் என்பதால், அவர்களிடம் நாம் பழகும் முறைகளைப்பற்றியும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்கும்.

49. நமக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நாம் உதவி செய்யவேண்டுமா?

ஆம். அவர்களும் கடவுளின் பிள்ளைகள் ஆனபடியால் நமக்குத் தீங்கு செய்தவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.

50. முக்கியமான சில தர்மக் கிரிகைகள் யாவை?

இவை ஆத்துமத்துக்கடுத்தவை ; சரீரத்துக்கடுத்தவை என இரு வகைப்படும். 

ஆத்துமத்துக்கடுத்த தர்மக் கிரிகைகள் :

1. பாவிகளை மனந்திருப்புகிறது. 
2. தெரியாதவர்களுக்குப் படிப்பிக்கிறது. 
3. சந்தேகப்படுகிறவர்களுக்குப் புத்தி சொல்லுகிறது. 
4. கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்லுகிறது. 
5. நிந்தைகளைப் பொறுமையுடன் சகிக்கிறது.
6. பொல்லாப்புகளைப் பொறுத்துக்கொள்ளுகிறது. 
7 சீவியர்களுக்காகவும், மரித்தவர்களுக்காகவும் கடவுளை மன்றாடுகிறது!

சரீரத்துக்கடுத்த தர்மக் கிரிகைகள் :

1. பசியாயிருக்கிறவர்களுக்குப்போஜனம் கொடுப்பது 
2. தாகமாயிருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது.
3. உடை இல்லாதவர்களுக்கு உடை அளிப்பது. 
4. பரதேசிகளுக்கு இடம் கொடுக்கிறது. 
5. நோயாளிகளைச் சந்திப்பது. 
6. சிறையிலிருப்பவர்களைச் சந்திப்பது. 
7. மரித்தவர்களை அடக்கம் செய்கிறது.