கருணையுடமை

51. தண்டனை அளிப்பது எப்போதும் கொடுமைப்படுத்துவது ஆகுமா? 

இல்லை. சில சமயங்களில் ஒருவருடைய நன்ைையக் கருதி சில வருந்தத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டி யிருக்கிறது. அதன் மூலம் அவர்களுக்குப் பெரிய நன்மை யும், பெருந்தீங்குகளிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் உண்டா கலாம். எடுத்துக்காட்டாக உயிரைக் காக்கும் பொருட்டு நோயாளியின் கை, கால் முதலியவற்றை நீக்கிவிடுதல், பிள்ளைகள் குற்றம் செய்யும் போது தண்டித்தல், பொது நலத்தைப் பாதுகாக்கத் திருட்டு, கொலை முதலியவற் றிற்குக் கடின தண்டனை வழங்குதல் முதலியவை.

52. கொடுமைகளுள் மிகக்கொடியது என்று கருதப்படும் செயல் யாது? 

மிகக் குடூரமான செயல், மனித உயிரை அநியாயமாகக் கொல்வது. பிறக்காமல் இருக்கும் சிசுவை அழிப்பது மிகவும் கொடிய செயலாகும். இதைப் போலவே, மனித உயிரை சித்திரவதை செய்வதும். சிறையில் கொடிய தண்டனைகளை மனித சுபாவத்துக்கு மீறிய முறையில் அளித் தலும், கொடுமை ஆகும். 

53. மனித உயிரை மனதார அழிப்பது நீதிக்கு ஏற்றதாகும் சந்தர்ப்பம் ஆகலாமா? 

சட்டபூர்வமான முறையில் தற்பாதுகாப்புக்காகத் தன் உயிருக்கு அபாயம் நேரும்போதும், பொது நலத்தைக் காக்கும் பொருட்டும் பிறருடைய உயிரை நீக்கலாம். உதா ரணமாகத் தன்னை ஒருவன் கொல்ல முயற்சிக்கும் போது ; நீதியான முறையில் நடக்கும் போரில் மற்றவர்களைக் கொல்லலாம்.

54. தற்காப்புக்காகப் பிற உயிரைக் கொல்லுவதற்குரிய நிபந்தனைகள் யாவை? 

1. ஒருவன் நம்மை அநீதியாகத் தாக்குபவனாக இருக்க வேண்டும்

2. அவனது உயிரை வாங்குவதைத் தவிர, நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேறு எந்தவழியும் இல்லாமல் இருக்கவேண்டும்.

இந்த இரு சந்தர்ப்பங்களிலும் நாம் பிறனுடைய உயிரைக் கொல்லலாம்.

55. கருணையுடமை நமது வெளிச்செயல்களை மட்டும் பொறுத்ததா? 

இல்லை. தமது உள்ளத்தில் எழும் எண்ணங்கள் உணர்ச்சிகளையும் பொறுத்தது. இவைகளை சரியான விதத்தில் பயிற்சித்து அடக்காவிட்டால் அவை வெளிப்படையான அநீத செயல்களைச் செய்யத் தூண்டுகோலாகும். எனவே நமது கோபம், வைராக்கியம், பகை, பழி வாங்கும் எண்ணம் பொறாமை ஆகியவற்றை அடக்கியாள முயற்சிக்க வேண்டும். இந்த காரணங்களுக்காகவே, சண்டை சச்சரவு விடுதல் கலகம் விளைவித்தல் முதலியவைகளை நீக்கி, பணிவு, சாந்தம், மரியாதை, அமைதி முதலிய நற்குணப் பயிற்சிகளையும் அனுசரிக்க வேண்டும்.

56. பிராணிகளைப் பொறுத்தமட்டில் நமது ஜீவ காருண்யம் எவ்வாறு இருக்கவேண்டும்? 

பிராணிகளும் கடவுளால் படைக்கப்பட்டவைகள் என்பதை மனதில் வைத்து அவைகளுக்கு அநாவசியமான துன்பங்களை இழைக்கக்கூடாது. நம்மால் தகுந்த விதமான முறையில் உணவு கொடுத்து போஷிக்க முடியாத அளவுக்குப் பிராணிகளை வளர்க்கக் கூடாது. அவைகள் கடவுளின் படைப்புகள் என்ற முறையில் மதித்துப் பாதுகாக்கவேண்டும். ஆனால் நம்முடன் வாழும் மக்கள் அவற்றைவிட சிறந்தவர்கள் என்பதை மறந்து விடலாகாது. ஏனெனில் இயற்கைத் தத்துவங்களே, மனிதர்கள் பிராணிகளைவிட மேலானவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன. மக்களில் சிலர் மனித உயிர், பிராணிகளை விட சிறந்தது. மேலானது என்பதை நூலளவில் மறுத்தாலும், அதை நடைமுறையில் எல்லோரும் ஒத்துக்கொள்ளுகின்றனர்.