25. நற்குணபான்மையின் தொகுதி யாது?
நமது செயல்கள் யாவையும், ஒழுங்குபடுத்திக் கட்டுப் படுத்தத்தக்க கொள்கைகள் ஒன்று சேர்ந்து நற்குண பான்மை என்னும் தொகுதியாகிறது. அந்தக் கொள்கை களைத் தவறாது பின்பற்றி, நமது வாழ்க்கையில் அமைத்து நடக்கும் போது அவற்றிற்குப்புண்ணியங்கள் என்ற பெயர் வழங்குகிறது. எளிதாகவும், தவறாமலும் நற்செயல்கள் செய்யத்தக்க உள்ள உரமே புண்ணியம் எனப்படும்.
26. அறநெறிக்கடுத்த சாதாரண புண்ணியங்கள் யாவை?
விமரிசை, நீதி. திடம் , மட்டாயிருத்தல் என நான்கு. விமரிசையால் நமது செயல்கள் தம்மிலே தகுந்தவைகளா கினறன. நீதியானது பிறர்மட்டில் அவை தகுந்தவை களாகச் செய்கின்றன. திடம் அல்லது தைரியம், மட் டாயிருத்தல் அல்லது மிதம் ஆகிய இரண்டும் நமக்கு வரும் இடையூறுகளை விலக்குகின்றது
27. நீதி என்றால் எனன?
ஒவ்வொருவருக்கும் உரியதை அவர்களுக்குக் கொடுப் பதே நீதியாகும், மக்களின் உடைமை, உயிர், உடல். ஆன்மா இவற்றின் உரிமைகளைப் பொது நலத்துக்குத் தீங்கு நேராதவகையில் பாதுகாப்பது. சுதந்திரம். நற் பெயர், பண்பு, உடல் நலம், குடும்பம், சமூகம், சமூக நிலைக் குரிய அவனது வாழ்க்கைத்தரம்-தொழிலாளியாயிருந்தால் அவனது குடும்ப நிலை-யாவற்றுக்கும் மேலாக அவன் உயி ரைக் காப்பாற்றிக்கொள்வதில் அவனுக்குள்ள உரிமை. இன்ப வாழ்க்கை நடத்த அவனுக்குள்ள ஆர்வம், ஆகிய வற்றை- நியாயத்துக்கு ஏற்ற வகையில் சீர்தூக்கி ஆவன செய்வது நீதி என்பதைச் சார்ந்ததாகும்.
28. நீதிக்கு விரோதமாக நடப்பது கனமான குற்றமா?
எத்தகைய உரிமைகள் தாக்கப்பட்டு அதனால் ஏற்படும் துன்பத்தின் தரம் கணிக்கப்படுகிறதோ, அவ்வளவு கனா கனமுடையது நீதிக்கு விரோதமாகச் செய்யப்படும் குற்றம்.
29. உரிமை என்பது என்ன?
ஒருவன் தன் சொந்தமானது என்று பாராட்டக்கூடிய எந்தக் காரியமும் உரிமை எனலாம். அதாவது பிறரிடம் இருந்து நியாயமாக எதிர்பார்க்கக்கூடிய எந்தக் காரியமும் அவனுக்கு உரிமை.
30. உரிமைக்கும். கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன ?
இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு சாராருக்கு ஒரு உரிமை உண்டானால், மறு சாராருக்கு அதைப்பற்றிய கடமை உண்டு,
31. யார் யாருக்கு உரிமைகள் உண்டு ?
கடவுளுக்கும், பிறருக்கும், நமக்கும் உரிமைகள் உண்டு.
32. கடவுளுடைய உரிமைகளும் அவர் மட்டில் நமக்குள்ள கடமைகளும் யாவை?
நம்மை உண்டாக்கின சிருஷ்டிகளுக்குரிய உரிமையும், நம்மை ஆண்டுவரும் எஜமானனுக்குரிய உரிமையும், கடவு ளுடைய உரிமைகள். அவரை அறிந்து அவருடைய நன் மைத்தனத்தையும், குண நலன்களையும், ஆராதித்து வணங் கித் துதித்து, கொண்டாடி, அவரின்றி நாமில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அவருடைய கட்டளைப்படி நடப்பத நமது கடமை.
33. பிறருடைய உரிமைகளும், அவர் மட்டில் நமக்கு உள்ள கடமைகளும் யாவை?
தங்கள் உயிர், உடல், சுவாதீனம், சொத்து. தன் மதிப்பு இவற்றிற்கு ஆபத்து நேரிடாதிருக்கப் பிறருக்கு உரிமை உண்டு உண்மையை அறியவும் உரிமை உண்டு. பிறரோடு உறவாடுவதில் நீதி, நேர்மை, உண்மைப் பிர காரம் நடக்க நமக்கு கடமை உண்டு. அவர்களை ஏமாற்ற மலும், அவர்களுடைய உயிர், உடல், சுவாதீனம், சொத்து, கீர்த்திக்குத் தீங்கு விளைவிக்காமலும் இருக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
34. நமது சொந்த உரிமைகளும், நம்மீது நமக்குள்ள கடமைகளும் என்ன?
பிறருக்குள்ள உரிமைகள் தான் நமக்கும் உண்டு. நமது உயிரையும், உடல் நலத்தையும் கவனிப்பது நமது தத்து வங்கள் அனைத்தையும் நல்வழியில் பயன்படுத்தி, தவறான வழிகளைத் தவிர்ப்பது நாம் அடைய வேண்டிய கடைசிக் கதிகளாகிய மோட்ச இன்பத்தைப் பாவத்தால் இழந்து போகாதபடி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் ஆகிய இவை நம்மீது நமக்குள்ள கடமைகள்.
35. நம்மீதும், பிறர்மீதும் உள்ள கடமைகள் கடவுள் மட்டில் நமக்குள்ள கடமைகளில் இருந்து முழுவதும் வேறுபட்டனவா?
இல்லை. சகல உரிமைகளும், முடிவில் கடளுவுக்கே சொந்தம். ஆகையால் நம்மீதும், பிறர்மீதும் நமக்குள்ள கடமைகள், கடவுள் மட்டில் உள்ள கடமை என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு இருக்கும்போது அவற்றை வேறாகப் பிரித்துக் கூறுவதேதெனில் சில உரிமைகள் கடவுளுக்கு மட்டும் உரித்தான வை; வேறு சில உரிமைகள் அவர் மக்களுக்கு அளித்து, நமக்குத்தானே உரித்தானதுபோல் தாம் அவற்றை மதித்துப் பாராட்டி வரும்படியாக நமக்குக் கற்பித்திருக்கிறார்.
36. நமக்கு அல்லது பிறருக்கு விரோதமான பாவம் கடவுளுக்கும் ஏற்காதா?
அத்தகைய ஒவ்வொரு பாவமும், கடவுளுக்கு ஏற்காத குற்றம்தான் ஏனெனில் அது அவருடைய கற்பனையை மீறுவது ஆகும், தீங்கு நேரிடுவது நமக்கு அல்லது பிறருக்கு என்பது உண்மைதான். ஆனால் பாவம் கடவுளுக்கு விரோதமானதே
37. நமக்காவது பிறருக்காவது நற்செயல் செய்தால் அது கடவுள் மட்டிலும் நற்செயல் எனப்படுமா?
ஆம். ஏனெனில் அந்த நற்செயல் அவருடைய கட்டளை யையும். அவரிடத்து நமக்குள்ள கடமையையும் அனுசரிப்ப தால் ஏற்பட்டவையேயன்று வேறல்ல. ஆகையால் நமது பெற்றோருக்கும், பெரியோருக்கும் அரசியல் அதிகாரிகட்கும், சட்ட திட்டங்கட்கும் சீழ்ப்படியும் போது எல்லா அதிகாரத் துக்கும் ஊற்றாகிய இறைவனுக்கே கீழ்ப்படிகிறோம் என் பதை உணர வேண்டும்.
38. நீதிக்கு விரோதமாக செய்யப்பட்ட குற்றத்தை நீக்குவதற்கு செய்யவேண்டியதென்ன?
நீதிக்கு விரோதமாக செய்யப்படும் குற்றம் கடவுளுக்கு மட்டும் விரோதமான தல்ல. நமது அயலாருக்கும் விரோத மாகும். துன்புறுத்தப்பட்டோர், அதைப் பொருட்படுத்தா மல் விட்டுவிட்டாலன்றி துன்பமிழைத்தோர் அதற்கேற்ற பரிகாரம் செய்யக் கடமைப்பட்டவராவர். அவ்வாறே ஒரு வேலைக்காரனுக்கு அநியாயமான கூலி கொடுக்கப்பட்டால், அதை நீக்குவதற்கேற்ற ஈடுசெய்யவேண்டும். எடுத்துக் காட்டாக அவனது வயோதிக காலத்துக்கு ஆதாரமாக ஏதேனும் செய்வதன் மூலம் சரிக்கட்டலாம். ஒருவரைப்பற்றி அவதூறு பொய் வதந்திகளைப் பரப்பியிருந்தால், தன்னால் இயன்றவரை முயன்று அவரது நற்பெயரையும், கீர்த்தியை யும் நிலை நாட்ட ஆவன செய்ய வேண்டும்.
39. பிறருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது பற்றி நமது கருத்தென்ன?
மக்கள் தமது நற்பெயரை, செல்வத்தைவிட சிறப்பாக மதிக்கின்றனர். அத்தகைய பெருமைக்குரியதை, நாம் அநியாயமாக அவதூறு. பழிச்சொல், புறணி, ஆராயாத தீர்மானம் முதலியவற்றால் சிறுமைப்படுத்துவோமானால், அவர்களுடைய உடைமைகளுக்கு இழைக்கும் தீங்கைவிட அதிகமான தீமையைச் செய்தவர்களாவோம். எனவே இத்தகைய குற்றங்களுக்கு நம் சக்திக்கு ஏற்றவாறு பரிகாரம் செய்யக் கடமைப்பட்டவர்களாவோம். ஆனால் இந்தக் கடமையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல.
40. உடமைகளைப் பொருத்தமட்டில் அடிக்கடி ஏற்படக்கூடிய அநீதிகள் என்ன?
திருட்டு, கொள்ளையிடுதல், ஏமாற்றுதல், ஏழைகளைத் துன்புறுத்துதல், வேலைக்காரர்களுக்கும், தொழிலாளருக் கும் சரியான கூலி கொடாதிருத்தல், கடனையும், ஒப்பந்தங் களையும் தீர்ப்பதில் அசட்டையாயிருத்தல், அநியாய வட்டி, பிறருடைய பொருட்களுக்கு சேதம் வருவித்தல் முதலியவை.
41. நீதியைப்பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய முக்கியமான படிப்பினை யாது?
(a) பிறருடைய உடைமை எவ்வளவு அற்பமாயிருந் தாலும், அதை நமதாக்கிக்கொள்ள நம்மில் எழும் ஆசையை உடனே, உள்ள உறுதியுடன் தள்ளிவிடவேண்டும். பிற ருடைமையை விழுங்கி ஏப்பமிடும் பெரும் பேராசைக்காரர்கள் துவக்கத்தில் சிறு சிறு பொருட்களை அபகரித்துப் பழகினதால்தான் பிற்காலத்தில் பல ஏழைகளின் ஜீவனத் துக்கு ஆதாரமானவற்றை ஏமாற்றி பிடுங்கிக்கொள்ளத் தயங்கவில்லை
(b) ஒரு இளை ஞன், பரிசுத்தத்தனத்துக்கு விரோத மான எண்ணத்திலோ, ஆசையிலோ மூழ்கி அதை வளரச் செய்தால் அவன் மிக விரைவில்; வெட்கத்துக்குரிய நடத்தையில் இன்பமடை பவன் ஆகிவிடுவான். அது போலவே நாம் சட்டபூர்வமாக சம்பாதித்து பொருளீட்ட ஆசிக்காமல், மற்றவர்களுடைய பொருட்களை நயவஞ்சக மாகக் கவர்ந்து கொள்ள முயற்சிக்கும்போது நாம் நேர்மை யற்ற தன்மைக்கு எளிதில் அடிமையாகிவிடுவோம்.
42. ஏழைகளைப் பொறுத்தமட்டில் அநீதியானது மிகவும் கனமான குற்றமாகக் கருதப்படுவது ஏன்?
ஏனெனில் அவர்களது வறுமையும், தேவைகளுமே இதற்குக் காரணம் மிகவும் சிறிய அநீதியான நிகழ்ச்சி கூட, அவர்களைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய அளவில் நஷ்டத்தையும், துன்பத்தையும், கடின உழைப்பையும் ஏற் படுத்தலாம். ஆகவே, அதற்கொத்த அளவில் அது கடவு ளுக்கு விரோதமான பெருங் குற்றமாகலாம் பற்ற மக்களைப் போலவே, ஏழைகளும் இறைவனின் மக்களாவர். அவர் களுக்குத் தீங்கு செய்யும் போது அவர்களது பரலோகப் பிதாவை அவமதிப்பதாகும். அதனால் தான் நாம் இத் தகைய பாவங்கட்கு, மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம் பொறுத்தல் அடைவது மட்டும் போதாது. நம்மால் இயன்றவரை முயன்று நம்மால் வஞ்சிக்கப்பட்டவர்களுக் குப் பரிகாரத்தின் வழியாக ஈடு செய்ய வேண்டும்.
43. ஏழைகளைத் துன்புறுத்துதலுக்கு சில உதாரணம் தருக.
நீதிக்கும். பிறர் சிநேகத்துக்கும் மேற்பட்ட வகையில் அவர்களை வற்புறுத்தி வேலை வாங்குதல்; வேலைக்குத் தகுந்த கூலி கொடாமலிருப்பது ; அநீத வட்டி வாங்குதல்; ஒப்பந்தங்களில் ஏமாற்றி ஊதியம் பெறுதல்; அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அனாவசியமாகக் காலந் தாழ்த்திக் கொடுத்தல் அல்லது கொடுக்க மறுத்தல்: உணவுப் பொருட்களை அதிக விலைக்குக் கொடுத்தல்; அதிக மான வாடகை வாங்குதல் ; குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க மறுத்தல் ; அவர்களது குழந்தைகள் கல்வி கற்ப தற்குரிய வசதிகளைக் கொடுக்காமை - ஆகியவைகள்.
44. நீதிக்கடுத்த முறையில், வேலைக்காரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய தொகை யாது?
அவர்கள் வாழும் சமூகத்துக்கு ஏற்றவகையில், சிக்கன மாகவும், சீராகவும் தங்கள் வாழ்க்கைத்தரத்தை அமைத்துக் கொள்ளவும், மக்கட்பண்புக்கு ஏற்ற வகையில் மதிப்புடன் வாழவும், வியாதி, வயோதகம் முதலியவற்றிற்கு ஆதார மாக இருக்கும்படி சிறுசேமிப்பு சேர்த்து வைத்துக்கொள்ள வும் ஆகியவிதத்தல் அவர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும்.