அனுதினம் சொல்லவேண்டிய ஜெபம்.

கருணாநிதியாகிய பரம கடவுளே! தேவரீர் என் தந்தை நான் உமது பிள்ளை. தாயினும் பன்மடங்காய் என்னை நேசித்து சகல உபகாரங்களையும் பொழிந்து வரும் தேவ ரீரை நானும் நேசித்து என் மனமொழி மெய்களால் வணங்குகிறேன்.

என் பாவங்களால் நல்ல தந்தையாகிய உம்மை நான் மனம் நோகப் பண்ணினபடியால் உளம் கசிந்து மனஸ் தாபப்படுகிறேன். அவைகளைத் தேவரீர் மன்னிக்க வேண்டும்.

இன்று நான் எவ்விதத் தப்பிதத்திலும் கேட்டிலும் விழா திருக்க தேவரீர் உதவி புரிவீராக, எனக்கு நல்ல சௌகரியத்தையும், அறிவையும் அளித்தருளும். என் தாய் தந்தை, சகோதர சகோதரிகளையும், சுற்றத்தார். ஆசிரியர் உபகாரிகளையும் காப்பாற்றும்.

நான் இவவுலகில் புனிதமாய் ஜீவித்து, மறு உலகில் பரம்பொருளாகிய உமது பொற்பாத கமலங்களை அடைந்து. என்றும் உம்மை ஏற்றி மகிழ அருள்புரிய வேண்டும்.