மறுமை வாழ்வு

61. மோட்சம் என்றால் என்ன?

உலகில் தேவ கட்டளைப்படி தன் வாழ்நாளைக் கழித்து. மனித பலவீனத்தால் கட்டிக்கொண்ட குற்றங்களுக்கு முழு மன்னிப்பு அடைந்து, நல்ல மரணமெய்தி மறுமையடைந்த ஆன்மா, நித்தியத்துக்கும் இறைவனை முகமுகமாய் தரிசித்து பேரின்ப பாக்கியம் அனுபவிக்கும் இடமே மோட்சம் எனப் படும். தேவ தூதர்களும், புனிதர்களும் வசிக்கும் இடம் நல்லோர் அனைவரும், பொதுத் தீர்வைக்குப் பிறகு தங்கள் உயிர்த்த சரீரத்துடனும் ஆத்துமத்துடனும் கூடி நித்தியத் துக்கும் இறைவனை முகமுகமாய் தரிசித்து பேரின்ப பாக்கி யத்துடன் வாழுமிடம். கண்டும், கேட்டும் சலிப்புத்தட்டாத முடிவில்லா மகிழ்ச்சியளிக்கக்கூடிய காட்சிகள் நிறைந்த இடம். மனித இதயம் விரும்பும் அனைத்தையும் அளித்து. மன நிறைவை அளிக்கும் நிலை. எத்தகைய சிறிய தீமை முதலாய் அணுக முடியாத பாதுகாப்புள்ள அரண் நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பேரின்பத்தை இழந்து விடுவோமோ என்ற பயமற்ற இடம் மோட்சம்.

62. மோட்ச பேரின்ப பாக்கியம் முக்கியமாய் எதில் அடங்கியிருக்கிறது?

[1] இறைவனை நேருக்கு நேராகக் கண்டு அவரது உண்மையான குணாதிசயங்களைக் கண்டு மகிழ்வோம். உடன் இருப்பவர்களையும் அடையாளம்கண்டு அளவளாவி மகிழலாம்.

[2] இறைவனையும், அவரது குண இலட்சணங்களை யும் பார்த்து அனுபவித்துப் போற்றி மகிழ்வோம் உள்ளம் நிறைந்த அன்புடன். ஆர்வத்துடன் அவரை நேசிப்போம் சிநேகிப்பது ஒன்று மட்டுமே இறைவனை சுகிக்கும் நிலையாக இருக்கும். இதுவே மோட்ச வாழ்வு!

63. மோட்ச பேரின்பம் அனைவருக்கும் ஒரே அளவான இன்பத்தை அழிக்குமா? 

பொதுத்தீர்வைக்குப் பின், இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டு, மோட்சத்துக்கு அனுப்பப்பட்ட அனைவருக்கும் அங்கு இடமுண்டு. இறைவனை முகமுகமாய்க் காணும் தேவதரி சனையும் உண்டு. ஆனால், உலகில் வாழும்போது ஒவ் வொருவரும் சம்பாதித்த புண்ணியங்களுக்குத் தக்கபடி மோட்சத்தில் அனுபவிக்கும் இன்பமும் வேறுபாடு உண்டு. மகிழ்ச்சியிலும், காட்சி இன்பத்திலும், ரசனையிலும், அளவு வேறுபாடு இருப்பது நியாயமே. ஆனால் இத்தகைய வேறு பாட்டை முன்னிட்டு, அவர்களுக்குள் பொறாமை, மனக் குறைவு போட்டி யாதும் இருக்காது.

64. நரகம் என்றால் என்ன?

இவ்வுலகில் வாழும்போது இறைவனை மறந்து, அவ ரது கட்டளைகளை மதித்து அனுசரியாது சிருஷ்டிப் பொருட் களின் மீது நாட்டமும் பற்று தலும் கொண்டு, தம் மனம் போனபடி நடந்து, பாவத்தில் திலைத்து இறப்பதற்கு முன் கூட தமது தீய நடத்தையைக் குறித்து மனம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேட்டுப் பொறுத்தல் அடையா மல் சாகும் தீயவர்கள் போகும் இடம். பொதுத் தீர்வைக் குப் பின், இறைவனால் சபிக்கப்பட்டு. நித்திய நரகத்தில் வேதனை அனுபவிக்க அனுப்பப்படுபவர்கள் இறைவனை முகமுகமாய் தரிசிக்கும் பேரின்ப பாக்கியத்தை இழந்து, நித்தியத்துக்கும் கெட்ட அரூபிகளாக பேய் பிசாசுகளுடன் கூடி வேதனை அனுபவிக்கும் இடம் ஆன்மாவையும், உடலையும் எரித்து சாம்பலாக நீத்துப்போக விடாது எரித்துக்கொண்டே வதைசெய்யும் கொடிய நெருப்பு நிறைந்த வேதனை ஸ்தலமே நரகம். நீதியுள்ள கடவுள் தனது நீதிக்கு ஏற்ற வண்ணம், பாவிகளைத் தண்டிப்பதற் கென. நியமித்த நித்திய சிறைக்கூடம் தேவ கட்டளைக்கு விரோதமாக மனிதனின் ஐம்பொறிகள் திருப்தி காணத் தேடிய ஆபாசங்களின் அவலக்குரல் ஒலிக்கும் அசுத்த இடம், அவதியுறுவோரின் அழுகையும். பற்கடிப்பும் பழிச் சொல்லும், நிந்தையும், தூஷணமும் ஓயாது மாறி மாறிக் கேட்கும் இரைச்சல் கூடம் நரகம்!

65. பாவிகள் இங்கு அனுபவிக்கும் வேதனை என்ன ?

[1] இறைவனையே தனது கடைசிக்கதியாக அடையும் படி உண்டாக்கப்பட்ட ஆன்மா, அக்கதியை அடையாது இழந்து தவிப்பது முக்கியமும் முதன்மையானதுமான வேதனையாகும். என்றேனும் ஒரு நாள் தன் கதியை அடை யலாம் என்ற நம்பிக்கை யாதும் இல்லாத நிலைமை. சிற் றின்பத்துக்கு ஆசைப்பட்டு, பேரின்பத்தை இழந்த அவல நிலையைப்பற்றிய ஆத்திரம் நிறைந்த வேதனை.

[2) ஐம்புலன்கள் அனுபவிக்கும் நெருப்பின் வேதனை

[3] நரகமாகிய சபிக்கப்பட்ட இடத்தில் வாழும் கோர ரூபமான பாவிகள், பிசாசுகளின் மத்தியில் நித்தியத்துக்கும் இருக்க வேண்டிய வேதனை.

இந்த நரகவேதனையும் பாவங்களுக்குத்தக்கபடி அளவிலும், தரத்திலும் வேறுபடும்