74. பேசுவதில் ஏற்படும் பொய்யைத்தவிர வேறு விதமான பொய் வகை உண்டா?
உண்டு. பொய்சாட்சி சொல்வது வேறு வகையான பொய்யாகும். இது உண்மைக்கு எதிரான பொய் என்றும் கூறப்படும்.
75. பொய்சாட்சி ஆவதென்ன?
வேண்டுமென்று பொய்யான காரியங்களைச் சொல்லி விட்டு, அவை உண்மை என்று சகலரும் நம்பும்படிப் பிரசித்தமாய் கடவுள் பேரால் சத்தியம் செய்வது பொய் சாட்சியாகும்.
76. பொய்சாட்சி சொல்லுவது எப்படிப்பட்ட பாவமாகும்?
பொய்சாட்சி சொல்லுகிறவன் கடவுளை அவமானப் படுத்துகிறான். உள்ளபடி அவன், தான் சொல்லும் பொய்க்கு சத்திய சொரூபியாகிய கடவுளை உடன் கூட்டாளியாக அழைக்கிறான். ஆகையால் பொய்சாட்சி சொல்லுவது கனமான பாவம்.
77. பொய்சாட்சி சொல்லுகிறவர்கள் யார்?
பஞ்சாயத்துக்கு முன்பாக, நீதி மன்றத்தில் நீதிபதிக்கு முன்னிலையிலும், பொய்யான சங்கதியை மெய்யானதென்றும் மெய்யானதைப் பொய்யானதென்றும், வேண்டுமென்று கடவுள் பெயரால் சத்தியம் செய்கிறவர்கள்.
78. பொய்சாட்சி சொன்னவனுடைய கடமை என்ன? தான் சொன்னது பொய் என்று அவன் பிரசித்தமாய் தெரியப்படுத்துவதோடுகூட, தன்னால் பிறருக்கு வந்த தஷ்டத்தை ஈடு கட்டவும் கடமை உண்டு